புளி பொங்கல்.
தேவையான பொருட்கள்.
பச்சை அரிசி-------------- 2 கப்.
புளி------------------------- 1 எலுமிச்சை அளவு.
வெல்லம்---------------- 1 நெல்லிக்கா அளவு.
உப்பு---------------------- தேவையான அளவு.
தாளிக்க.
நல்லெண்ணை------------- 4 டேபில் ஸ்பூன்.
கடுகு--------------------------- 1 டீஸ்பூன்.
வெந்தயம்--------------------- 1 டீஸ்பூன்
உ.பருப்பு----------------------- 1 டேபில் ஸ்பூன்
கடலைப்பருப்பு ----------- 1 டேபில் ஸ்பூன்.
நிலக்கடலை--------------- 1 டேபில் ஸ்பூன்.
மிளகா வத்தல்------------- 7.
பச்சமிளகா----------------- 2.
மஞ்ச பொடி---------------- 1 டீஸ்பூன்.
பெருங்காயப்பொடி------ 1 டீஸ்பூன்.
கறி வேப்பிலை------------ 1 ஆர்க்.
செய் முறை.
அரிசியை நன்கு கழுவி தண்ணீரை வடிய வைக்கவும்.
தேவையான பொருட்களை தயாராக வைத்துக்கொள்ளவும்.
புளியில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஊறியதும் நன்கு கரைத்து
கோது, குப்பை நீக்கி வடிகட்டி வைக்கவும்.
பிரஷர் பேனை அடுப்பில் வைத்து, நல்லெண்ணை ஊற்றி
தாளிக்க வேண்டிய பொருட்களைப்போட்டு நன்கு சிவந்து
பொரிந்ததும், வடிய வைத்துள்ள அரிசியை ச்சேர்க்கவும்.
அரிசியின் ஈரம் போக வறுக்கவும். வாசனை வந்ததும்,
கரைத்து வடிகட்டி வைத்திருக்கும் புளித்தண்ணீரை மேலாக
ஊற்றவும்.2-கப் அரிசிக்கு 4- கப் புளித்தண்ணீர் வரும்படி கரைத்து
விடவும். மேலாக உப்பு, வெல்லம், கிள்ளி வைத்திருக்கும் கறி
வேப்பிலையும் சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும்.
4- 5 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். 15- நிமிடங்கள்
கழித்து திறந்தால் சூடான சுவையான புளிப்பொங்கல் ரெடி.
ஸாரி, கேமராவில் டைம் & டேட் அட்ஜஸ்ட் செய்ய மறந்துட்டேன்.
தேவையான பொருட்கள்.
பச்சை அரிசி-------------- 2 கப்.
புளி------------------------- 1 எலுமிச்சை அளவு.
வெல்லம்---------------- 1 நெல்லிக்கா அளவு.
உப்பு---------------------- தேவையான அளவு.
தாளிக்க.
நல்லெண்ணை------------- 4 டேபில் ஸ்பூன்.
கடுகு--------------------------- 1 டீஸ்பூன்.
வெந்தயம்--------------------- 1 டீஸ்பூன்
உ.பருப்பு----------------------- 1 டேபில் ஸ்பூன்
கடலைப்பருப்பு ----------- 1 டேபில் ஸ்பூன்.
நிலக்கடலை--------------- 1 டேபில் ஸ்பூன்.
மிளகா வத்தல்------------- 7.
பச்சமிளகா----------------- 2.
மஞ்ச பொடி---------------- 1 டீஸ்பூன்.
பெருங்காயப்பொடி------ 1 டீஸ்பூன்.
கறி வேப்பிலை------------ 1 ஆர்க்.
செய் முறை.
அரிசியை நன்கு கழுவி தண்ணீரை வடிய வைக்கவும்.
தேவையான பொருட்களை தயாராக வைத்துக்கொள்ளவும்.
புளியில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஊறியதும் நன்கு கரைத்து
கோது, குப்பை நீக்கி வடிகட்டி வைக்கவும்.
பிரஷர் பேனை அடுப்பில் வைத்து, நல்லெண்ணை ஊற்றி
தாளிக்க வேண்டிய பொருட்களைப்போட்டு நன்கு சிவந்து
பொரிந்ததும், வடிய வைத்துள்ள அரிசியை ச்சேர்க்கவும்.
அரிசியின் ஈரம் போக வறுக்கவும். வாசனை வந்ததும்,
கரைத்து வடிகட்டி வைத்திருக்கும் புளித்தண்ணீரை மேலாக
ஊற்றவும்.2-கப் அரிசிக்கு 4- கப் புளித்தண்ணீர் வரும்படி கரைத்து
விடவும். மேலாக உப்பு, வெல்லம், கிள்ளி வைத்திருக்கும் கறி
வேப்பிலையும் சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும்.
4- 5 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். 15- நிமிடங்கள்
கழித்து திறந்தால் சூடான சுவையான புளிப்பொங்கல் ரெடி.
ஸாரி, கேமராவில் டைம் & டேட் அட்ஜஸ்ட் செய்ய மறந்துட்டேன்.
Tweet | |||||
51 comments:
Looks yummy..will try it soon n let you know Lakshmi-ma!
சூப்பர்.செய்து பார்க்க வேண்டும்.
அருமையான குறிப்பு. செய்து பார்க்கிறேன். நன்றி.
மிகவும் அருமையாக இருக்கின்றது புளி பொங்கல்...செய்து பார்க்க வேண்டும்...பகிர்வுக்கு நன்றி....
வித்தியாசமான ரெசிபியா இருக்கே. செய்யச் சொல்லி சாப்பிட்டுப் பாத்துடறேன். (நான் செஞ்சு ரிஸ்க் எடுக்க விரும்பலை. HA... HA...)
படிக்கறதுக்கு முன்னால படங்களைப் பாக்கறது என் பழக்கம். அப்படிப் பாத்தப்ப. வேப்பிலை சேர்க்கவும்னு படிச்சுட்டு, கசப்பாயிடாதோன்னு முதல்ல பயந்துட்டேன். அப்பறம் மேல்வரியை பார்த்தப்புறம்தான் கறிவேப்பிலைன்னு புரிஞ்சு நிம்மதியாச்சு.
பொங்கலில் புளியா?வித்தியாசமாக உள்ளதே.ஒரு முறை செய்து பார்த்திடணும்
வீட்டுல செய்வாங்க அம்மா..
இங்கே சிலபல மாறுபாடுகளுடன்
இந்த முறை ஊருக்கு போனதும்
வீட்டுல செய்து சாப்டுற வேண்டியதுதான்...
அழகான செய்முறை விளக்கம்.
பாராட்டுக்கள்.
புளிப்பொங்கல் எனக்கு மிகவும் பிடிக்கும். எங்க பாட்டி, அம்மா செய்து சாப்பிட்டிருக்கேன். நான் செய்த போது நன்றாக வந்தது. ஆனா வாயெல்லாம் ஈஷறதே.....அது ஏன்னு புரியலம்மா.
அது போல சாதாரணமா சாதத்துக்கு வைக்கறாப்போல தான் தண்ணீர் வைத்தேன். எத்தனை விசில் வந்தாலும் மேலே தண்ணீர் நிக்கறது. இதுவும் புரியல. உங்களுக்கு தெர்ஞ்சா சொல்லுங்கோம்மா.
மிகநன்றாக இருக்கிறது.
கேள்வி படாத குறிப்பாக இருக்கிறது கூடிய சீக்கிரம் செய்து பார்த்துவிட வேண்டும் பதிவிற்கு நன்றி
வித்தியாசமான சமையல் குறிப்புகளில் உங்களின் அனுபவம் பேசுகிறதும்மா. இந்த டிபன் நல்லாவே இருக்கும்னுதான் தோணுது. ட்ரை பண்ணிப் பாத்துட வேண்டியதுதான்!
எளிமையாக இருக்கு....படங்களும் இழுக்குது....சேவ் பண்ணிட்டேன்! செஞ்சிப் பார்த்துட வேண்டியதுதான்!
மிகவும் நன்றாக இருக்கிறது, செய்து பார்க்க தோன்றுகிறது.
Ithu ennaku romba puthusu... Need to try it out... Neram kidaikum Pothu en bloguku vaanga...
மஹி முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ஆசியா ஓமர் வருகைக்கு நன்றி செய்து பாருங்க நல்லா இருக்கும்.
ராம லஷ்மி வருகைக்கு நன்றி செய்து பாருங்க.
கீதா ஆச்சல் வருகைக்கு நன்றி. செய்து பார்த்துட்டு எப்படி இருந்துச்சுன்னு சொல்லுங்க.
நிரஞ்சனா, உங்க பின்னூட்டம் படிச்சு முதல்ல சிரிச்சுட்டேன். கறி வேப்பிலையை வேப்பிலையாக நினைச்சீங்க இல்லியா? ஏன் நீங்களே தைரியமா செய்து பாருங்க. படங்களுடன் விளக்கமௌம் சுலபமாகத்தானே சொல்லி இருக்கேன்.
ஸாதிகா வருகைக்கு நன்றி. செய்து பாத்துட்டு சொல்லுங்க.
மகேந்திரன் வருகைக்கு நன்றி. இது போல செய்து பாக்க சொல்லுங்க நல்லா இருக்கும்.
கோபால் சார் வருகைக்கு நன்றி.
கோவை 2 தில்லி நான் சொல்லி இருக்கும் படி கடுகு பருப்பெல்லாம் வறுக்கும் போது அரிசியையும் கொஞ்சம் ஈரம் போக வறுத்தால் வாயில் ஈஷாமல் வரும் தண்ணிரும் மேல தங்காது இந்த குறிப்புபடி ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா நல்லா வரும். ஓரளவு நம்ம புளியொதரை டேஸ்ட்ல வரும்
மாதேவி வருகைக்கு நன்றி
அவர்கள் உண்மைகள் இதுவரை நீங்க இந்தக்குறிப்பு பற்றி கேள்விபட்டதில்லையா? இப்ப செய்து பாருங்க நல்லா இருக்கும். நன்றி
கணேஷ் இதை லஞ்சுக்குதான் செய்வாங்க. செய்து பாத்துட்டு சொல்லுங்க. நன்றி
ஸ்ரீ ராம் நான் கொடுக்கும் குறிப்புகள் படிக்கிரவங்களுக்கு சுலபமா இருக்கணும்னுதான் படங்களும் குறிப்பும் ஈசியாவே கொடுக்கரேன். செய்து பாத்துட்டு சொல்லுங்க. நன்றி
கோமதி அரசு வருகைக்கு நன்றி
அகிலா உங்கள முதல் முறையா இங்க பாக்குரேன் உங்க பக்கம் இதோ வரேன் நன்றி
இனிமே அரிசியை வறுத்து விட்டு செய்யறேன். உங்க தகவலுக்கு நன்றிம்மா.
இப்படி செய்தால் நல்லா வரும்.
எனக்கு ரொமபப் பிடித்த ஐட்டம் இது
படங்களுடன்விளக்கிச் செல்லும்விதமும் அருமை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
ரமணி சார் வருகைக்கும் தமிழ் மண ஓட்டுக்கும் நன்றி
இன்று செய்து சாப்பிட்டாச்சு.....அருமை. பல வருடங்களுக்கு முன்னால் என் அம்மா நொய் போட்டு செய்வார். அதுவும் ஞாபகம் வந்தது. இன்று ருசி அருமை. ஆறு பேருக்கு அளவு எப்படி வரும் என்று தெரியாததால் மூன்று ஆழாக்கு போட்டு செய்து காணாமல் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டோம்....இன்னும் கொஞ்சம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று சொல்லிக் கொண்டே......நன்றி!
ஸாரிம்மா.. அலுவலகத்தில உங்க பதிவைப் படிச்சு கருத்து போட்ட அவசரத்துல ஓட்டளிக்க முடியலை. இல்லன்னா தவறாம போடறவன்தான் நான். இப்ப போட்டுட்டேன்.
செஞ்சு பார்க்கணும், சாரி, செஞ்சுதர சொல்லி கேட்டுப் பார்க்கணும் வீட்டில.
ஸ்ரீ ராம் உடனே செய்து சாப்பிட்டு பார்த்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நாங்களும் நொய்யில்தான் செய்வோம். இந்தக்கால தலை முறையினருக்கு குழைவான பொங்கல் பிடிக்க மாட்டேங்குது . ஸோ அரிசில பண்ணினேன். இனிமேல எவ்வளவு பேருக்குன்னு அள்வும் சொல்லிடுரேன். கொஞ்சமா சாப்பிட்டாதான் டேஸ்டா இருக்கும். ஹா ஹா
கணேஷ் ஓட்டுக்கு நன்றி தமிழ் விரும்பி பக்கம் வல்லியே?
கே.பி. ஜனா சீக்கிரம் செய்து தரச்சொல்லுங்க. நன்றி
கே. பி. ஜனா உங்கபக்கம் வந்து சத்தம் படிச்சேன் பின்னூட்டம் போடமுடியல்லியே?
புளிச்சாதம் எனக்குப் பிடிச்ச உணவு அம்மா.நீங்கள் தந்திருக்கும் இந்தமுறை மிகச் சுலபமாக இருக்கிறதே !
ஆமா ஹேமா சுலபமாகவும் சுவையாகவும் இருக்கும் செய்து பாருங்க.
இன்றைக்கு என்ன சமையல் செய்யலாம்னு யோசனையோடு ப்ளாக் படித்து கொண்டு இருந்தேன்.. உங்க படங்களை பார்த்த உடனே பிடிச்சு போச்சு.. சமைச்சு சாப்புட்டாச்சு.. சுவை சூப்பர்...
சவிதா குட். அடிக்கடிவாங்க இன்னும் நிறையா குறிப்புகள் தொடர்ந்து கொடுக்கப்போரேன் எஞ்சாய். நன்றி
படத்தைப் பார்க்கும் போதே செம அமர்க்களமாக இருக்கிறது... ட்ரை பண்ணிப் பார்த்திர வேண்டியதுதான்...
மிக அருமை லஷ்மி அக்கா
hot line தமிழ் திரட்டி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ஜலீலா வருகைக்கு நன்றி
ungkaL kuRIppukaLai inaikka ungkaL mail id kodungka
jaleela en i d. echumi@gmail.com
Post a Comment