Pages

Friday, April 27, 2012

போட்டிக்கு கதை

        ஏய் ரகு கதிர்ல ஒருபோட்டி வச்சிருக்காங்கடா. நம்ம போல புது எழுத்தாளர்களுக்காக சிறுகதைப்போட்டி,தலைப்பு வித்யாசமா கொடுத்துருக்காங்க.
 அட யாருடா இவன், நீஎழுதி அனுப்புனதும் உனக்குத்தான் முதல் பரிசு கிடைக்கும்னுகனவுகாணுரியா? இதெல்லாமே ஒரு ஐ வாஷ்டா.கடைசில யாரோ ஒரு பிரபல எழுத்தாளருக்குதான் பரிசு போகப்போகுது. நாமெல்லாம் எழுதி அனுப்பினாஅதுவும் புதுசா எழுதமுயற்சி செய்யுரவங்க எழுத்துன்னா படிச்சுகூட பாக்காம குப்பைகூடைக்குதான் போகும்பா.என்று வெருப்பாக பதில் சொன்னான் ரகு. சரிடா அப்படியே இருக்கட்டும் ஆனா இதுபோல பத்திரிகைகளில் போட்டின்னு விளம்பரத்த பாத்த உடனே ஏதானு எழுதி அனுப்பனும்னு மனசும் கையும் பர பரன்னு வருதேடே. விடாம முயற்சி செய்தா ஒரு நா இல்லேன்னா ஒரு நாநம்ம எழுத்தும் கண்டிப்பா பத்ரிக்கையில் வரும் பாரேன் .   என்ரான் சிவா நம்பிக்கையுடன்.



ரகு சிவா இருவரும் ஒரு தனியார்கம்பெனியில் வேலை பார்த்துவருபவர்கள் 10- வருடங்களாக நெருங்கிய நண்பர்கள் ஒரே ரூமில் சேர்ந்து வசிப்பவர்கள்.தமிழில் வரும் அனைத்து மாதாந்திர வாராந்திர பத்திரிக்கைகளை சொந்தக்காசில் வாங்கி படிக்கும் பழக்கம் உள்ளவர்கள். சிவாவுக்கு படிப்பதுடன் உடனே தானும் ஏதாவது எழ்தி அனுப்பனும் என்று தோன்றும்.இருவருமே அடிக்கடி இப்படி போட்டிகளுக்கு கதை எழுதி அனுப்பியும் இதுவரை ஒன்றுகூட பிரசுரம் ஆகவே இல்லே.அதில் இருவருமே சோர்ந்து போயிருந்தார்கள்.மருபடியும் நண்பர்கள் இருவரும் இந்தப்போட்டிக்காக வித்யாசமான தலைப்பை யோசிக்க ஆரம்பித்தார்கள். ஏய் ரகு எனக்கு ஒரு தலைப்பு தோனுதுடா. சொல்லு சொல்லு என்னா என்ரான் ரகு. அது வந்து
 செவிகள் பார்க்கின்றன, விழிகள் கேட்கின்றன. இது எப்படி இருக்குடா?

 ஏய் இது என்னடா தலைப்பு. ஆனாகூட வித்யாசமாதான் இருக்கு. அப்புரம்?
ஏய் ரகு தலைப்புக்கு ஏத்தமாதிரி கதை எழுதனும் இல்லியா அப்போ நாம அதை உணர்ந்து அனுபவிச்சு எழுதினா எழுத்து இன்னும் ஸ்ட்ராங்கா இருக்கும் இல்லியடா?    என்னடா நீ ஒன்னொன்னையும் உணர்ந்து அனுபவிச்சு எப்படிடா எழுதமுடியும்? அதாண்டா சொல்ரேன். இப்ப வரிசையா 4 நாளு லீவு வருதில்லே? அப்ப எங்க கிராமத்துக்கு போலாம். என் ஃப்ரெண்ட் ஒருத்தன் பெட்டிக்கடை வச்சிருக்கான்.     நானும் ஊர்பக்கம்போயி ரொம்ப வருஷம் ஆகுது என்னையே நிறையா பேருக்கு அடையாளம் தெரியாது நாம என்ன பண்ணனும்தெரியுமா நான் குருடன்போலவும் நீ செவிடன் போலவும் நடிக்கனும்டா. அந்த அனுபவத்தைதான் எழுத்தில் கொண்டுவரனும் என்ரான்.

 போடா என்னமோ சொல்ரே. பாக்கலாம் நானும் கிராமப்புரம் எல்லாம் பாத்ததே இல்லே. கதை கிடைக்குதோ இல்லியோ அருமையான அனுபவம் கிடைக்கப்போகுதுன்னு புரியுது. சரி உன் விருப்பப்படியே உன் கிராமத்துக்கு போயிட்டு வரலாம் என்று நண்பன் சொல்லவும் இருவரும் சந்தோஷமாக அடுத்த நாளே கிளம்பினார்கள்.தமிழ் நாட்டின் ஒரு பிந்தங்கிய கிராமத்தில் போய் இறங்கினார்கள் இருவரும். வெளியே வந்ததுமே ஒரு வித்யாசமான பெயரில் ஒரு கையேந்தி பவன் கண்ணில் பட்டது எதிர்பாரா விலாஸ். பேரைப்பாத்ததுமே சிவா , நாம தான் வித்யாசமான தலைப்பில் கதை யோசிக்கிரோம்னா இந்த ஊரு ஹோட்டல் பேருகூட வித்யாசமா இருக்கேடா. எதிர் பாராவிலாஸ்.  நல்ல பொருத்தமதாண்டா. என்றான். ஏண்டா கையேந்தி பவனை ஹோட்டலாவே ஆக்கிட்டியே. வா வா, பக்கத்தில்தான் என் ஃப்ரெண்ட் பெட்டிக்கடை இருக்கு என்று இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள். கடையில் சிவாவின் ஃப்ரெண்ட் பூதப்பாண்டியன் வியாபாரத்தை கவனித்துக்கொண்டிருந்தான். இவர்களைப்பார்த்ததும் கடைக்கு சாமான்வாங்க வந்திருப்பவர்களாக நினைத்து வாங்க சார் என்ன வேனும் என்ரான்.

 ஏய் பூதம் நான் சிவாடா. உன் தோழந்தாண்டா. மறந்துட்டியா? என்ரான். அட சிவா வா? அடையாளமே தெரியாம மாறிட்டேடா. ஊரை விட்டுப்போயி 10- வருஷம் இருக்குமா/ எங்க இருக்கே என்னபண்ரேன்னு ஒன்னுமே தகவலும் தெரிலே. திடீர்னு இப்ப வந்து நிக்குரே. என்ன விஷயம்? இரு பக்கத்து கடைலேந்து சாயாவும், நாஷ்டாவும் வாங்க்யாரேன். பொறவு பேசிக்கலாம் என்று எதிர்பாரா விலாசிலிருந்து அவர்களுக்கு சாப்பிட நாஷ்டாவும் சாயாவும் வாங்கி கொடுத்தான். பிறகு சிவாவும், ரகுவும் விபரமாக ஒரு கதை எழுத வந்திருப்பதாக சொல்லவும், பூதப்பாண்டியனுக்கு சிரிப்பு தாங்கலே. ஏன் தம்பி அப்படியாவது நம்ம ஊருக்கு வந்தியே அதுவே சந்தோஷம்தான். நான் என்ன பண்ணனும் சொல்லு என்ரான். நீ ஒன்னுமே பண்ண வேண்டாம். ஒரு ரெண்டு, மூனு நாளு நாங்க ரெண்டு பேரும் உன் கடைலெ உக்காந்து வியாபாரம் கவனிக்கணூம். அதுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணு என்ரான் சிவா. அட அம்புட்டுதானே நானே மூனு நாளுக்கு வெளி ஊரு போக வேண்டி இருக்கு கடையில் யாரை பொறுப்பா வச்சிட்டு போகன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். நீங்க வந்தது எனக்கும் வசதி ஆச்சு. பாத்துப்பா வியாபாரம் பத்தி ஏதானும் உங்களுக்கு தெரியுமாடே? என்ரான் பூதம்.



 அதைப்பத்தியெல்லாம் நீ கவலையே படாதே அதெல்லாம் சூப்பரா பாத்துக்குவோம் என்றார்கள் இருவரும். என்னமோப்பா உங்கள நம்பி கடை விட்டுட்டு போரேன் பேரக்கெடுத்துடாதீங்கப்பு என்று அரைமனதாகச்சொல்லி விட்டு பூதப்பாண்டி கிளம்பி போனான்.இரண்டு நாட்களும் கண்தெரியாதவன்போலவும், காது கேட்காதவன்போலவும் இருவரும் ரொம்ப கஷ்டப்பட்டு நடித்து கடை யை கவனித்துக்கொண்டார்கள் அதில் அவர்களுக்கு சில காமெடியான அனுபவங்கள் கிடைத்தது.  அந்த அனுபவங்கள் அவர்கள் எழுத நினைத்திருந்த கதைக்கு நல்ல தீனியாக அமைந்தது. மறு நா பூதம் வந்ததும் கடைய அவனிடம் ஒப்படைத்துவிட்டு இருவரும் ஊர் சுற்றிப்பார்க்க கிளம்பினார்கள்.  அப்போதே சாயந்தரம் 6-மணிக்கு மேல் ஆகிவிட்டதால் ஒரு டூரிங்க் டாக்கீசில் போய் மணலில் உக்காந்து பழைய எம் ஜி ஆர் படம் பார்த்தார்கள். இடையில் அங்கு முறுக்கு, கடலை மிட்டாய் சோடாகலர் விக்கும் பசங்களிடமும் ஒன்றுவிடாமல் வாங்கி கொறித்துக்கொண்டார்கள். ஏய் சிவா  நாம நகரத்ல என்னதான் ஏ.சீ தியேட்டர்ல சொகுசா படம் பார்த்தாலும் இதுபோல இயற்கையான சூழ் நிலையில் காத அடைக்கிர சத்தத்தில் படம் பாக்குரது தனி உற்சாகமா இருக்குடா. கிராமம் கிராமம்தான் என்று வாய்க்கு வாய் ரகு புகழ்ந்து கொண்டே இருந்தான். சிவாக்கும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

படம் விடும்போது இரவு 10-மணி ஆனது, மறுபடியும் பூதத்தின் கடைப்பக்கம் போனார்கள். 9-மணிக்குள்ள கடையை மூடிவிடுவான் பூதம். கடைக்குபின்னாடியே அவன் வீடும் இருந்ததால் ரகு, சிவா அங்கு போனார்கள். பூதம் பெட்டிக்கடையைத்திறந்து ஆளுக்கு 5, 5 கெட்டி நாட்டுவாழைப்பழமும், அரை லிட்டர் பாலும் கொடுத்து உபசரித்தான். பூதம் போறுண்டா வேர ஒன்னும் வேண்டாம் என்று மிகவும் ”பெருந்தன்மையுடன்” சொல்லிவிட்டு படுத்தார்கள். மறு நாள் ”அதிகாலை” 8 மணிக்கு சூரிய வெளிச்சம் கண்களி பட்டதும்தான் இருவருக்கும் முழிப்பே வந்தது. இருவரும் பேஸ்ட் பிரஷ் கொண்டுவர மறந்துபோனதால் பூதம் கொடுத்த உமிக்கரியால் பல் விளக்கி விட்டு காபி குடிச்சுட்டு குளிக்க ஆறு சென்றார்கள். பாத்ரூமிலேயே குளித்து பழகிய ரகுவுக்கு பிரும்மாண்டமான ஆறும் அங்கு துள்ளி விலையாடும் மீன்களும் ஆச்சரியமாகவும், உற்சாகமாகவும் இருந்தது. சிவாவுக்கு நல்லா நீச்சல் தெரியும் இருவரும் நன்கு ஆசைதீர குளித்துவிட்டு பூதத்தின் கடைக்கு வந்தார்கள் . என்ன தம்பிகளா ஆசை தீர குளிச்சீங்களா/ வாங்க நாஷ்டா துன்னலாம். என்று கையேந்தி பவனுக்கு கூட்டி போனான்.

 சூடு சூடாக இடியாப்பமும் தேங்காபாலும் சாப்பிட்டார்கள் கிராமத்துக்கே உண்டான அசல் ருசியுடன் இருக்கவே ஒரு கட்டு கட்டினார்கள்.ஏய் ரகு இன்னும்ரெண்டு நாள் லீவு பாக்கி இருக்கு அக்கம் பக்கம் உள்ள இடங்களுக்குபோயி சுத்தி பாத்துட்டு வரலாம்னு சிவா சொல்லவும் இருவரும் ஊர் சுத்த கிளம்பினார்கள். திருச்செந்தூர்போய் கடல் ஸ்னானம், முருகன் தரிசனம், பண்ணிவிட்டு கிராமத்து அழகைரசித்துக்கொண்டே பஸ்ஸில் பயணம் செய்து குற்றாலம் போய் அருவிக்குளியலையும் ரசித்து, கிராமத்துக்கு வந்து டேம், கிணறு என்று குளியல் சுகங்களை நன்கு எஞ்சாய் பண்ணிவிட்டு பூதப்பாண்டியனிடம் சொல்லிக்கொண்டுமனசே இல்லாமல்
 ஊர்திரும்பினார்கள். ஏய் சிவா நீ ரொம்ப லக்கிடா சின்னவயசில் நீ இவ்வளவு அழகான கிராமத்தில் வளர்ந்திருக்கே. எனக்கு பட்டணத்தவிட்டா வேர ஒன்னும்தெரியாது. உங்க ஊரு ரொம்ப அழகுடா. மறக்கவே முடியாத ஊரு. என்று வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டே இருந்தான்.

சிவா வந்ததுமே போட்டிக்கான கதை எழுதுவதில் மும்முரமாக இறங்கினான். எழுதி முடித்து ரகுவிடம் காட்டினான். ஏய் என்னடா இது கதையின் தலைப்புக்கும் கதைக்கும் கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லாம உன் ஊரு புராணமா எழுதி இருக்கே என்ரான் ரகு. ஏய் இப்பல்லாம் கதைக்கும் அதன் தலைப்புக்கும் கொஞ்சம் கூட சம்மந்தமே இருக்கக்கூடாது அதான் இப்போதைய ட்ரெண்ட் தெரியுமா? அனுப்பிதான் பார்ப்போமே. தப்பிதவறி நம்ம ஊருக்காரரு யாரானும் ஜட்ஜா இருந்து இந்தக்கதையை படிச்சா  பிரசுரம் ஆக சான்ஸ் இருக்கில்லே? என்று சிரித்தவாரே சொன்னான் சிவா. கதைக்கு பரிசு கிடைக்குதோ இல்லியோ எனக்கு நல்லா கிராமத்து அனுபவம் கிடைச்சது அது போதும்பா என்ரான் ரகு. ஆபீஸ் போகும் வழியில் கதையை போஸ்ட் பண்ணி விட்டு போனார்கள். இரண்டுமாதம் ஆகியும் எந்த முடிவும் தெரியல்லே. அவர்களே மறந்து போகும் நேரம்  இந்தக்கதை பிரசுரமாகி பரிசுப்பணமும் கையில் கிடைத்ததும் இருவரின் மனங்களிலும் சந்தோஷம் கரை ப்ரண்டது. ஏய் நாம சாதிச்சுட்டோம்டா.தேங்க்ஸ்டொ கிராமம். 

35 comments:

இராஜராஜேஸ்வரி said...

கதை பிரசுரமாகி பரிசுப்பணமும் கையில் கிடைத்ததும் இருவரின் மனங்களிலும் சந்தோஷம் கரை ப்ரண்டது. ஏய் நாம சாதிச்சுட்டோம்டா.தேங்க்ஸ்டொ கிராமம்.


சந்தோஷம்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சிவாவுக்கு படிப்பதுடன் உடனே தானும் ஏதாவது எழ்தி அனுப்பனும் என்று தோன்றும்.இருவருமே அடிக்கடி இப்படி போட்டிகளுக்கு கதை எழுதி அனுப்பியும் இதுவரை ஒன்றுகூட பிரசுரம் ஆகவே இல்லே.அதில் இருவருமே சோர்ந்து போயிருந்தார்கள்//

இது எல்லோருக்குமே ஏற்படும் பொதுவான சோர்வு தான்.

விடாமுயற்சிகள் தான் வெற்றி தரும்.

அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

Akila said...

Nalla kadhai nalla mudivu...

savitha said...

"கதைக்கும் அதன் தலைப்புக்கும் கொஞ்சம் கூட சம்மந்தமே இருக்கக்கூடாது அதான் இப்போதைய ட்ரெண்ட் தெரியுமா? "- உண்மை..
தமிழ் உச்சரிப்பு கிராமத்துக்கே கொண்டு சென்று விட்டது... நன்றாக இருந்தது மா..

சசிகலா said...

பரிசு கிடைக்குதோ இல்லையோ நம்ம ஊர் பத்தி எழுதிய சந்தோசம் போதும் ...நல்லா இருந்தது .

ADHI VENKAT said...

ஓ! கிராமத்து அனுபவங்களை வைத்து கதை. நன்றாக இருந்ததும்மா.

ராமலக்ஷ்மி said...

அருமை. உண்மைதான், எண்ணங்களை எழுத்தில் வடிப்பதிலேயே கிடைத்து விடுகிறது ஆத்ம திருப்தி.

கே. பி. ஜனா... said...

சந்தோஷக் கதை!

கோமதி அரசு said...

இருவரின் மனங்களிலும் சந்தோஷம் கரை ப்ரண்டது. ஏய் நாம சாதிச்சுட்டோம்டா.தேங்க்ஸ்டொ கிராமம்//

கிராமத்து அனுபவம் மட்டும் போதும் என்று மனநிறைவு ஏற்பட்ட போது பரிசு.
எதிர்ப்பார்க்காமல் எதையும் செய்யும் போது பரிசு நிச்சியம் என்பதை குறிக்கும் கதை அருமை.

ஸாதிகா said...

கிராமிய மணம் தவழ்கிறது.அருமை.

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

லக்ஸ்மி அக்கா பழையபடி கதை எழுதத் தொடங்கிட்டீங்க... கலக்குங்கோ..... சூப்பராக ஆரம்பித்து நல்ல முடிவாக முடித்திட்டீங்க.

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

// இப்பல்லாம் கதைக்கும் அதன் தலைப்புக்கும் கொஞ்சம் கூட சம்மந்தமே இருக்கக்கூடாது அதான் இப்போதைய ட்ரெண்ட் தெரியுமா? //

அதே அ....தே...... :))).

ஹேமா said...

எழுத்திற்குக் கிடைத்த அங்கீகாரம்.இன்னும் இன்னும் எழுத வைக்கும் வைட்டமின்கள் !

ஸ்ரீராம். said...

எழுத வேண்டுமே என்றுஎழுதுவதை விட, அனுபவங்களைப் பெற்று அதை வைத்து எழுதுவது சிறந்தது. நம்பிக்கைக்குத்தான் முதல் பரிசு.

குறையொன்றுமில்லை. said...

இராஜ ராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோபால் சார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

சவிதா வருகைக்கு நன்ரி

குறையொன்றுமில்லை. said...

அகிலா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

சசி கலா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோவை2 தில்லி வருகைக்கு நன்ரீ

குறையொன்றுமில்லை. said...

ராம லஷ்மி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோமதி அரசு வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா வருகைக்கு நனறி

குறையொன்றுமில்லை. said...

அதிரா வருகைக்கு நனறி

குறையொன்றுமில்லை. said...

ஸ்ரீ ராம் வருகைக்கு நன்றி

Asiya Omar said...

அருமை லஷ்மீமா.இயற்கையான எழுத்து நடை.

குறையொன்றுமில்லை. said...

ஆஸியா ஓமர் வருகைக்கு நன்றி

மாதேவி said...

மண்வாசனை அருமை.

குறையொன்றுமில்லை. said...

மாதேவி வருகைக்கு நன்றி

வெங்கட் நாகராஜ் said...

நல்லா இருக்கும்மா பரிசு பெற்ற கதை! :)

கிராமத்தில் சென்று சில நாட்கள் இருக்கவேண்டுமெனத் தோன்றிவிட்டது.

குறையொன்றுமில்லை. said...

வங்கட் வருகைக்கு நன்றி

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் ......உங்களையெல்லாம் கிராமத்து வார்த்தைகளில் அழகிய கதை..முடிவு நன்று........முயற்சிகள் தவறலாம் முயற்சிக்க தவறலாமா ......


www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் ......உங்களையெல்லாம் திருத்தவே முடியாது!,நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1 to 15), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள். அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

வல்லிசிம்ஹன் said...

மனிதம் வெற்றி பெற்றபோது பரிசும் கிடைத்துவிட்டது. நல்ல ச்சுழ்நிலைக் கவிதையான கதை.வாழ்த்துகள் லக்ஷ்மி.

குறையொன்றுமில்லை. said...

வல்லி சிம்ஹன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

திரு வாளப்புதூர் முஸ்லிம் வருகைக்கு நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .