Pages

Friday, July 20, 2012

A. T. M.

மாசாமாசம் பேங்க் போய் பென்ஷன் எடுத்துட்டு வர அவஸ்தைகள் தாங்க முடியாம இருந்தது. கேஷ் வித்ட்ரா பண்ண ஒருமணி நேரம் க்யூவில் கால் கடுக்க நிக்கனும். பாஸ்புக்ல எண்ட்ரி போட வேர கவுண்டர்ல போயி ஒருமணி நேரம் க்யூவில் நிக்கனும்.சரின்னு ஏ. டி. எம் கார்டுக்கு அப்ளை பண்ணினேன்.ஃபர்ம் எல்லாம் ஃபில் அப் பண்ணி கொடுத்துட்டு எப்ப கார்ட் கிடைக்கும்னு கேட்டேன். இன்னும் ரெண்டுமாசத்ல கிடைக்கும்னாங்க. வீடு போயி பசங்களுக்கு போன் பண்ணி சொன்னேன். அவங்களும்  கார்ட் போஸ்ட்ல வீட்டுக்கு அனுப்புவாங்கன்னு சொன்னாங்க. நான் ரெண்டு மாசம் இல்லே மூனு மாசம் வெயிட் பண்ணி பாத்தேன் . ஒன்னும் வல்லே. பேங்க்லயே போயி கேட்டேன். போச்ட்ல வரும்னு யாரு சொன்னாங்க அப்படில்லாம் இல்லே. நீங்கதான் இங்க வந்து என்கொயரி பண்ணிருக்கனும்னாங்க. உங்க கார்ட் வந்து ஒருமாசத்துக்கு மேலே ஆச்சுன்னாங்க. நீங்க இன்ஃபார்ம் பண்ணிருக்கலாம்லன்னு கேட்டேன். அதெல்லாம் எங்க வேலை கிடையாதுன்னு சொல்ராங்க.சரின்னு கார்ட் வாங்கிண்டேன். எப்படி யூஸ்பண்ணனும்னு மேலோட்டமா சொன்னாங்க.

அடுத்தமாசம் அந்த பேங்கோட ஏ. டி. எம். மிஷின் போனேன். முதல் முறை ஆனதால கொஞ்சம் நெர்வசா இருந்துச்சு. கார்ட் இன்செர்ட் பண்ணினேன். அது உள்ளயே போச்சு. அப்புரம் பக்கத்தில் உள்ள மானிட்டரில் மெசேஜ் வந்தது. அதுபடியே வரிசையா எல்லாம் பண்ணிட்டே வந்தேன். கார்ட் தன்னாலே வெளியே வந்தது. அதை எடுத்து பையில் வச்சுகிட்டேன். பாஸ்வெர்ட் எல்லாம் போட்டு எவ்வளவு அமௌண்ட் வெனும்னெல்லாம் கரெக்டா ப்ரஸ்பண்ணினேன்.ஒரு புரத்திலிருந்து ரசீது வந்தது, மானீட்டர் கீழேந்து பணமும் வந்தது. நான் அசட்டுத்தனமா முதல்ல ரசீது எடுத்துட்டு எவ்வள்வு பேலன்ஸ் இருக்குனு செக் பண்ணிகிட்டு இருந்தேன். அதுக்குள்ள பணம் திரும்ப மிஷின்க்குள்ளயே திரும்பவும்போயிடுத்து. எனக்கோ இப்ப என்னபண்ணரதுன்னு புரியல்லே.ரசீதுல நான் பணம் எடுத்தாச்சுன்னு காட்டுது. ஆனா கையில் கேஷ் கிடைக்கலே.ஒரே கன்ஃப்யூஸ். தமிழ்ல ஒரு பழமொழி சொல்வாங்க். முன பின்ன செத்திருத்தாதானே சுடுகாடு தெரியும்னு. அதுபோல ஏ.டி. எம். பத்தி முன்ன பின்ன தெரியாததால ஒரே குழப்பம். திரும்ப பேங்க்ல போயி விஷயம் சொன்னேன்.

முதல் முறை போகும் போது யாரையானும் கூட்டிட்டு போயிருக்கலாம்லேன்னு சொல்ராங்க.அப்புரம் ஃபுல் டீடெய்லும் எழுதி ஒரு அப்லிகேஷன் கொடுங்க. ஒரு மாசத்துல உங்க அக்கவுண்ட்ல பணம் சேர்ந்துடும்னு சொன்னாங்க.அதெல்லாம் பண்ணிட்டு வீட்டுக்குப்போயி பசங்களுக்கு போன் பண்ணி சொன்னேன். ஒருமாசம்லாம் ஆகாது இப்ப எல்லா பேங்குமே கம்ப்யூட்டரைஸ்டு ஆயிடுத்து. மிஞ்சி போனா ஒருவாரத்துல கிடைச்சுடுங்க.10- நாள் கழிச்சு பாஸ் புக் எண்ட்ரி போடப்போனேன். பணம் போட்டிருந்தாங்க அப்பாடா தப்பிச்சேன்.இது முதல் மாச அனுபவம்னா அடுத்தமாசம் வேர மாதிரி சங்கடம். கார்ட் உள்ள இன்செர்ட் பண்ணினது வழக்கமான மெசேஜ் மானிட்டரில் வந்தது. பாஸ்வேர்ட் போட்டதும் இன் கரெக்ட் அப்படின்னு காட்டுது. மறுபடி மறுபடி பாஸ்வேர்ட் செக் பண்ணிட்டு கரெக்டாதான் போட்டேன். தப்பு, தப்புன்னே காட்டிச்சு. ஆனா ரசிட்துவரும் கௌண்டரிலிருந்து பில் வந்துகிட்டே இருந்தது கேஷ் மட்டும் வரவே இல்லே

 மறுபடியும் பேங்க் போயி கேட்டேன் என்ன மேடம் உங்க கூட ரொம்ப தொந்திரவா போச்சு. திரும்ப திரும்ப ஏதானும் பிரச்சினை பண்ணிகிட்டே இருக்கீங்கன்னு கோவமா பேசுராங்க. இதுல என் மிஸ்டேக் என்னான்னு எனக்கு புரியல்லே. இன்னொரு ஆள்கிட்ட் போயி கேட்டேன் மேடம் சில சமயம் மிஷின்ல பணம் போட மறந்திருப்பாங்க அப்போ பணம் வராது. நீங்க வேர பேங்க் ஏ. டி. எம். மிஷின்ல போயி ட்ரை பண்ணிபாருங்கன்னு கூலா சொல்ரான். அப்புரம் வேர ஏ.டி. எம். போனேன். கார்ட் உள்ளயே போலே. கார்ட் வச்சதுமே மானிட்டரில் மெசேஜ் வந்தது கார்டை எடுத்துகிட்டேன். எல்லா விவரங்களும் ப்ரெஸ் பண்ணினதும் உடனே பணம் வந்தது. முதல்ல அவசரமா பணத்தை எடுத்துகிட்டேன் அப்புரமா ர்சீது எடுத்தேன். புதுசா ஏ.டி. எம் யூஸ்பண்ணும்போது எல்லா விஷயங்களிலும் கவனமா இருக்கணும்னு இது ஒருபாடம்தான். எல்லாருக்கும் எல்லாம் தெரிந்திருப்பதில்லையே, அனுபவம் தானே கத்துக்கொடுக்குது.

39 comments:

துளசி கோபால் said...

அட ராமா..............

இப்போ இங்கே எல்லா சூப்பர்மார்கெட்டிலும் செல்ஃப் செக்கவுட் வந்தாச்சு.

புரியாமல் தவிக்கும் நபர்களுக்கோ அல்லது எதாவது தப்பா எண்டர் பண்ணிட்டோமுன்னா அதுக்கு உதவன்னு ஒரு சூப்பர்வைஸர் அந்த பத்துபனிரெண்டு மெஷீன்ஸ் பக்கத்துலே இருக்காங்க.

பழைய நாய்க்குப் புது வித்தை சொல்லிக்கொடுப்பதில் உள்ள கஷ்டம் புரிஞ்சவங்க:-)))))

பால கணேஷ் said...

நிஜம்தான். கம்ப்யூட்டரைஸ்ட் மிஷின்களுக்கு ஏற்ப செயல்பட பழகிக் கொள்வதில் ஆரம்ப சிரமங்கள் இருக்கும். அழகாக அனுபவத்தைச் சொல்லியிருககீங்க. அப்படி பழகியும்கூட என் பேங்கோட ஏடிஎம் சமயத்துல அவசரத்துக்கு 200 300ல்லாம் எடுக்கவிடாது. 500தான் என்கிட்ட இருக்குது எடுத்துக்கடான்னு சொல்லி செலவாளியாக்கிடுது. அவ்வ்வ்வ்.

நிரஞ்சனா said...

நாங்க ஆரம்பத்துலருந்தே எல்க்ட்ரானிக்ஸ கூட வளர்க்கப் படறதால கஷ்டம் தெரியல. உங்களோட அனுபவங்களைப் படிக்கறப்போ வியப்பாவும் பாவமாயும் இருந்துச்சு- இப்போ நல்லாப் பழகிடுச்சாம்மா..?

அம்பாளடியாள் said...

மறுபடியும் பேங்க் போயி கேட்டேன் என்ன மேடம் உங்க கூட ரொம்ப தொந்திரவா போச்சு. திரும்ப திரும்ப ஏதானும் பிரச்சினை பண்ணிகிட்டே இருக்கீங்கன்னு கோவமா பேசுராங்க.
வேதனையாக உள்ளது சில சமயங்களில் என்ன செய்வதென்றே புரியாமல் போவதும்
உண்டு .ஆனாலும் அனுபவங்கள் வாழ்வில் பலத்தையும் கற்றுக் கொடுத்துவிடுகிறது
தங்கள் அனுபவப் பகிர்வு பலருக்கும் பயனுள்ள வகையில் அமைவது குறித்து வாழ்த்துக்கள்
அம்மா .எனக்கு சுருக்கமாய் ஆக்கம் எழுதத்தான் முடிகிறது அதிகம் எதையும் வாசிக்க நேரம்
போதுவதில்லை வேலைப் பழு அதிகம் .நேரம் கிடைக்கும்போதெல்லாம் தங்கள் ஆக்கங்களை
விரும்பிப் படிப்பதுண்டு அனைத்தும் மிகவும் சுவாரசியமாக இருக்கும் .பெருமைகொள்கின்றேன் .
மிக்க நன்றி அம்மா பகிர்வுக்கு .

அம்பாளடியாள் said...

மறுபடியும் பேங்க் போயி கேட்டேன் என்ன மேடம் உங்க கூட ரொம்ப தொந்திரவா போச்சு. திரும்ப திரும்ப ஏதானும் பிரச்சினை பண்ணிகிட்டே இருக்கீங்கன்னு கோவமா பேசுராங்க.
வேதனையாக உள்ளது சில சமயங்களில் என்ன செய்வதென்றே புரியாமல் போவதும்
உண்டு .ஆனாலும் அனுபவங்கள் வாழ்வில் பலத்தையும் கற்றுக் கொடுத்துவிடுகிறது
தங்கள் அனுபவப் பகிர்வு பலருக்கும் பயனுள்ள வகையில் அமைவது குறித்து வாழ்த்துக்கள்
அம்மா .எனக்கு சுருக்கமாய் ஆக்கம் எழுதத்தான் முடிகிறது அதிகம் எதையும் வாசிக்க நேரம்
போதுவதில்லை வேலைப் பழு அதிகம் .நேரம் கிடைக்கும்போதெல்லாம் தங்கள் ஆக்கங்களை
விரும்பிப் படிப்பதுண்டு அனைத்தும் மிகவும் சுவாரசியமாக இருக்கும் .பெருமைகொள்கின்றேன் .
மிக்க நன்றி அம்மா பகிர்வுக்கு .

ப.கந்தசாமி said...

முன்னே பின்னே (யாராவது) செத்திருந்தா நாம சுடுகாடு போயிருப்போம். அப்பத்தான் சுடுகாடு தெரியும்னு சொல்லுவாங்க. எப்படியோ நீங்க பணத்தைக் கோட்டை விடாமலேயே கார்டை உபயோகிக்கக் கத்துட்டீங்க, அதுவே பெரிய விஷயம்.

இராஜராஜேஸ்வரி said...

அனுபவம் கற்றுக்கொடுக்கும் பாடம் ..

அனைவருக்கும் பயனுள்ள பகிர்வுகள் அம்மா !

அமுதா கிருஷ்ணா said...

நான் இந்த கார்டை நம்பி பணம் கையில் இல்லாமல் இப்போதெல்லாம் வெளியில் போவதே இல்லை.ஒரு முறை தி.நகர் போயிட்டு மூன்று மெஷினில் பணம் எடுக்க முடியாமல் லோ லோவென்று மூன்று ரோடு நடந்தே சுத்தியது தான் மிச்சம்.

MARI The Great said...

தங்கள் அனுபவங்களை பகிர்ந்து எங்களை எச்சரித்தமைக்கு நன்றி அம்மா!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் அனுபவம். எங்களுக்கு உபயோகப்படும்...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
பகிர்வுக்கு நன்றி...(த.ம. 4)

மனோ சாமிநாதன் said...

உங்களின் அனுபவப் பகிர்வு அடுத்தவருக்கும் பாடம் கற்றுக்கொடுக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது!

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஹா படிக்கப் படிக்க சுவாரஷ்யம். காசை எடுக்காமல் காசு திரும்பவும் உள்ளே போனது, இப்பத்தான் நான் அறிகிறேன்ன்ன்.. ஹையோ சாமி இனிமேல் ஜாக்க்க்க்ர்ர்தையாத்தான் இருக்கோணும்.

சில இடங்களில் மெஷின் அவுட் ஒஃப் ஓடர் என எழுதியிருக்கும் சின்னதா. அதைக் கப்வனிக்காமல் கார்ட்டை சிலர் உள்ளே தள்ளி எடுக்க முடியாமல் அவதிப்படதும் உண்டாம்.

எல்லாத்திலயுமே அலேர்ட்டாத்தான் இருக்கோணும்.

குறையொன்றுமில்லை. said...

துளசி கோபால் இது இண்டியா இங்க இப்படித்தான் கஸ்டமர் சர்வீஸ் இருக்குது என்ன பண்ண? பட்டு பட்டுதான் ஒன்னொன்னும் தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு. அதுவும் நல்லதுக்குத்தான்

குறையொன்றுமில்லை. said...

கணேஷ் நீங்க சொல்வது சரிதான் அந்தமிஷின்ல 1000-ரூவா நோட்டு இல்லெனா 500 -ரூவா நோட்டுதான் வருது 100, இல்லெனா 50 ரூவா நோட்டு வரதே இல்லே அந்த ரூவாய்க்க்கு சில்லரை வாங்க கடை கடையா ஏறி இறங்கினது தனி அனுபவம்

குறையொன்றுமில்லை. said...

நிரஞ்சனா இப்ப பழகிட்டேன்மா ஒன்னும் பிரச்சனை இல்லே

குறையொன்றுமில்லை. said...

அம்பாளடியாள் ரொம்ப நாள்கழிச்சு உங்களை இங்க பாக்குரேன் உங்க வேலைப்பளுவுக்கு மத்தியிலும் என் பதிவு படித்து கருத்து சொன்னதுக்கு நன்றீ. முடிஞ்ச போதெல்லாம் வாங்க.

குறையொன்றுமில்லை. said...

பழனி கந்தசாமி ஆமாங்க இதுவும் ஒரு பாடமாத்தான் எடுத்துக்கனும். வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

இராஜராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

அமுதா ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அனுபவமா?

குறையொன்றுமில்லை. said...

வரலாற்று சுவடுகள் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

திண்டுக்க்ல் தனபாலன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ம்னோ மேடம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

அதிரா ஆமா ரொம்பவெ க்‌ஷ்ட்டம்தான் ஒன்னொன்னும் பட்டு பட்டுத்தானே தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு

கோமதி அரசு said...

புதுசா ஏ.டி. எம் யூஸ்பண்ணும்போது எல்லா விஷயங்களிலும் கவனமா இருக்கணும்னு இது ஒருபாடம்தான். எல்லாருக்கும் எல்லாம் தெரிந்திருப்பதில்லையே, அனுபவம் தானே கத்துக்கொடுக்குது.//

நீங்கள் சொல்வது 100க்கு 100 உண்மை.

குறையொன்றுமில்லை. said...

கோமதி அரசு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சாந்தி மாரியப்பன் said...

லக்ஷ்மிம்மா.. மூணு தடவை தொடர்ந்தாப்ல பாஸ்வேர்டைத் தப்பாக் கொடுத்துட்டாலும் கார்டு உள்ளே போயிரும். பாஸ்வேர்டை மறக்காம நினைவு வெச்சுக்கோங்க. என்னிக்குமே கார்டையும் பணத்தையும் மொதல்ல எடுத்துட்டு அப்றம் ரசீதை எடுங்க.

சில மிஷின்களில் உள்ளே அனுப்பத் தேவையிருக்காது. சும்மா கடைகளில் க்ரெடிட் கார்டைத் தேய்ப்பாங்களே அது மாதிரி தேய்க்கச் சொல்லியிருக்கும். அதுகளில் இந்தப் பிரச்சினை இருக்காது.

ரிஷபன் said...

உங்க அனுபவம் படிக்கும்போது சுவாரசியம் ஆனா உங்க அந்த நேர நிலைமை நினைச்சு சங்கடம்.. ஸ்டேட் பேங்க் ஏடிஎம் ல எடுத்த ஒரு 500 ரூபா நல்ல நோட்டு இல்ல.. அதை மாத்தறதுக்குள்ள பட்ட கஷ்டத்தை பக்கத்து வீட்டுக்காரர் சொன்னப்ப.. நாம் முன்னேறி இருக்கோமான்னு சந்தேகமே வந்திருச்சு.

குறையொன்றுமில்லை. said...

ஆமா சாந்தி நீ சொல்ரது சரிதான் இப்பல்லாம் கவனமா இருக்கேன்

குறையொன்றுமில்லை. said...

ரிஷபன் ஆமா அந்த மிஷின்ல 1000, 500 நோட்டுகள்தான் வருது. அதை மாத்தரதுக்குள்ள பொரும் போரும்னு ஆகுது

ஸாதிகா said...

லக்ஷ்மிம்மாவுடைய அனுபவப்பாடம் புதிதாக ஏ டி எம் உபயோகிப்போருக்கு ஒரு முன்னெச்சரிக்கை.

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா ஆமா அனுபவ பாடம் தான் வருகைக்கு நன்றி

வெங்கட் நாகராஜ் said...

மோசமான அனுபவம் தான்....

குறையொன்றுமில்லை. said...

ஆமா ஆனாலும் இதையும் ஒரு பாடமா தான் எடுத்துக்கனும்

Nagasubramanian said...

இன்னொரு பிரச்சனயும் இதுல இருக்குது.
ATM கார்டு உள்ளே செல்கிற மாதிரி உள்ள machine - களில் பணம் எடுக்கும் முன்னரோ/பின்னரோ கார்டு வெளியே வரும். தாங்கள் எடுக்காவிடில் மீண்டும் உள்ளே சென்று "your card has been captured " என சொல்லும். பிறகு அந்த ATM எந்த வங்கியின் கீழ் உள்ளதோ, அங்கு சென்று ATM -யில் வந்த reciept , உங்கள் அடையாள அட்டையுடன் ஒரு கடிதம் மேலாளருக்கு எழுதி கொடுக்க வேண்டும்.

குறையொன்றுமில்லை. said...

நாக சுப்ரமனியன் இப்படி ஒரு பிரச்சினையும் இருக்கா. தெரியப்படுத்தினதுக்கு நன்றி

பொன்ஸ்~~Poorna said...

அம்மா,
இப்ப‍ எல்லாம் ஏடிம் மெசினில் ஏதோ காமரா வச்சி உங்க கார்டு, பாஸ்வோர்டு எல்லாத்தையும் காப்பி பண்ணும் வேலையும் நடக்குது. முடிஞ்ச வரைக்கும் கார்டு உள்ள‍ insert பண்ணும் இடத்தை ஒரு தரம் தடவி பார்த்துக்கோங்க. பாஸ்வோர்டு அடிக்கும் போது, இன்னோரு கையால மறைச்சுக்கோங்க, அப்ப‍த் தான் நீங்க என்ன‍ அடிச்சீங்கன்னு யாருக்கும் தெரியாது..

குறையொன்றுமில்லை. said...

poorna முதல் முறையா என் பக்கம் வரீங்களா? தகுந்த ஆலோசனை சொல்ல் இருக்கீங்க. கவனத்தில் வச்சுக்கரேன் நன்றிம்மா இன்னும் என்னல்லாம் வில்லங்கம் இருக்குதோ?

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

அருமையான இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி அம்மா...

Asiya Omar said...

நல்ல பகிர்வு. மிக்க நன்றி.

என்னை ஆதரிப்பவர்கள் . .