Pages

Wednesday, July 4, 2012

பூண்டு கடலைப்பொடி

தேவையான பொருட்கள்.
 வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை---------------      200 கிராம்
 பூண்டு--------------------- பெரிதாக ஒன்று பல்லு பல்லாக உதிர்த்து
 தோல் நீக்கவும்
 மிளகாய்ப்பொடி---------------  2 ஸ்பூன்
 உப்பு--------------- தேவையான அளவு
  செய்முறை
                                   
                                         
                                                                                 
                                           
 வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலையை மிக்சியில் ரவை பக்குவத்தில் பொடிக்கவும்.  தோல் நீக்கிய பூண்டு பற்கள் மிளகாய்ப்பொடி உப்பு சேர்த்து மறுபடி மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். எண்ணையே சேர்க்காத ஆரோக்கியப்பொடி, சப்பாத்தி, இட்லி, தோசையுடன் தொட்டு சாப்பிட மிகவும் நல்லா இருக்கும். பூண்டை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடுவதுதான் சிறந்தமுறையாகும்.வேர்க்கடலையும் நல்லது.ருசிக்காக்க உப்பு காரம் சேர்க்கிரோம் இது ஒரு மராட்டிய ரெசிப்பி.

20 comments:

சாந்தி மாரியப்பன் said...

ஹைய்ய்ய்.. லஸுன் சட்னி. இப்ப இதுக்குத் தொட்டுக்க வடாபாவும் வேணுமே :-)))

Mahi said...

புது ரெசிப்பியா இருக்கு லஷ்மிம்மா! எண்ணெய் சேர்க்காமலே சாப்பிடலாம் என்பது பெரிய ப்ளஸ் பாயின்ட்! :)

MARI The Great said...

நல்லா இருக்கும் போலிருக்கே!

ஸாதிகா said...

லக்ஷ்மிம்மா,பூண்டு ஸ்மெல் என்றால் ஒரே ஓட்டம்தான்.நீங்கள் செய்த பூண்டு பொடி பார்க்கவே அருமையாக உள்ளது.என்ன செய்வது செய்து பார்த்தாலும் சாப்பிட மாட்டேனே:(

Prem S said...

ம்ம் செய்து பாப்போம்

வெங்கட் நாகராஜ் said...

நல்லா இருக்கும்மா.. செய்து பார்க்கிறேன்...

raji said...

இதுவரை நான் அறிந்திராத ரெசிப்பி.செய்து பார்க்கிறேன்,பகிர்விற்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

சாந்தி ஆமா வடாபாவும் வேனும் அந்தக்குரிப்பு நீ போட்டுடு. நல்லா ஜோடி சேர்ந்துடும். :)))

குறையொன்றுமில்லை. said...

மஹி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

வரலாற்று சுவடுகள் ஆமாங்க ரொம்ப நல்லா இருக்கும்.

குறையொன்றுமில்லை. said...

ஹா ஹா ஸாதிகா எனக்கும் பூண்டு ஸ்மெல் பிடிக்காது குழந்தைகளுக்கு பிடிக்குமேன்னு செய்து கொடுப்பேன் அவ்வளவுதான்.

குறையொன்றுமில்லை. said...

ப்ரேம் செய்து பாத்துட்டு சொல்லுங்க

குறையொன்றுமில்லை. said...

வெஙகட் செய்து பாருங்க நல்லா இருக்கும்.

குறையொன்றுமில்லை. said...

ராஜி நீங்களும் செய்து பாருங்க.

Geetha Sambasivam said...

இப்போப் பொடி சீசனா? ஜமாய்ங்க

குறையொன்றுமில்லை. said...

கீதா வாங்க நன்றி

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

ஆ.. லக்ஸ்மி அக்கா... உங்கட கடலை ப்பிரதரைப் பார்க்கத் தவறிட்டேன், இப்போதான் பார்த்தேன் சூப்பர்.

பூண்டு கடலைப்பொடி எனக்கு மிகவும் விருப்பம். இதில் பூண்டை வறுக்காமலே செய்வதோ? கடலையைத்தானே வறுக்கச் சொல்லியிருக்கிறீங்க? காரமாக இருக்குமே? வறுக்காவிடில் பழுதாகிடாதோ?

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

பார்த்தீங்களோ லக்ஸ்மி அக்கா, நீங்களும் பூண்டுப் பல்லு எனத்தான் சொல்லியிருக்கிறீங்க, நான் சொன்னால் மகி அஞ்சு எல்லோரும் சிரிக்கினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

குறையொன்றுமில்லை. said...

அதிரா பூண்டு பல்லுதானே சொல்வாங்க வேர எப்படி சொல்வாங்க பூண்டை வறுக்க தேவை இல்லெ பல மாதங்கள்கூட கெட்டுப்போகாமல் இருக்கும்.

Jaleela Kamal said...

4 குறிப்புகள் என் மெயில் ஐடி போட்டே இன்ணைத்தேன். ஆனால் இப்போதைக்கு ஒன்று தான் இணைந்த்தது பார்ப்போம் அப்படி இல்லை என்றால் கடைசியில் போட்டு கொள்ளலாம்.
மிக்க நன்றி லஷ்மி அக்கா

என்னை ஆதரிப்பவர்கள் . .