Google+ Followers

Pages

Monday, July 23, 2012

வெல்ல தோசை

தேவையான பொருட்கள்
                                               
கோதுமை மாவு-----------------    2 கப்
வெல்லம்-------------------------   1  கப்
 நெய் ------------------------------ 1 கிண்ணம்
துருவிய தேங்காய்----------  ஒரு கைப்பிடி
 ஏலப்பொடி-------------------   1 ஸ்பூன்

 செய் முறை

 வெல்லத்தை தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்துக்கொள்ளவும். கல் மண் போக வடி கட்டிக்கொள்ளவும். அதில் தேங்காய்ப்பூ, ஏலப்பொடி, கோதுமை மாவு சேர்த்து தோசை மாவு பக்குவத்தில் கலந்து கொள்ளவும். அடுப்பில்
                                                 
தோசைக்கல் காயவைத்து மாவை ஊற்றி கரண்டியால் வட்டமாக தேய்க்கவும்.
                                                   
சுற்றிலும் ஒர் ஸ்பூன் நெய் ஊற்ற்வும். நன்கு சிவந்து மொறு, மொறுப்பானதும் திருப்பி போடவும். நன்கு வெந்ததும் எடுத்து  சூடாக பரிமாறவும்.
                                                 
                                                   
 எங்க ஊருல ஏகாதசி அன்று பாட்டிம்மால்லாம் இந்த தோசைதான் செய்வாங்க. அன்று உப்பு சேர்க்க மாட்டாங்க . வெல்ல தோசைதான் செய்வாங்க. ரொம்ப டேஸ்டா இருக்கும்.

32 comments:

அமைதிச்சாரல் said...

எனக்கு ரொம்பப் பிடிச்ச அயிட்ட்டம். நிறையச் சுட்டு வையுங்க :-))

அமைதிச்சாரல் said...
This comment has been removed by the author.
மனோ சாமிநாதன் said...

பேரனுக்கு நல்ல குறிப்பு ஒன்றைத் தேடிக்கொண்டிருந்தேன்! சுவையான வெல்ல தோசை கிடைத்து விட்டது லக்ஷ்மிம்மா!

விச்சு said...

தோசையிலேயே வெல்லத்தோசையா? சாப்பிட்டதே இல்லை. வீட்டில இன்னைக்கு சொல்லிடறேன்.

பால கணேஷ் said...

எங்கம்மா பண்ணிக் கொடுக்க நிறையத்தரம் சாப்ட்ருக்கேன். எனக்கு மிகப் பிடிச்ச ஐட்டத்த இங்க பாத்ததுல சந்தோஸம்.

திண்டுக்கல் தனபாலன் said...

இதுவரை வெல்ல தோசை சாப்பிட்டதில்லை...
வீட்டில், ஆப்பம் மேலே வெல்லம் போட்டு தருவார்கள்...
நீங்கள் கூறியபடி செய்து பார்ப்போம்... நன்றி அம்மா ! (த.ம. 3)
என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

ராமலக்ஷ்மி said...

வெல்லப் பணியாரம்தான் தெரியும். இது அருமையான குறிப்பாக இருக்கே. மிக்க நன்றி.

அம்பாளடியாள் said...

இன்றே சமைத்திட வேண்டியதுதான் நா ஊறுதே!...
ஆமா இதை கரைத்தவுடன் சுடலாமா அல்லது எவ்வளவு நேரம் கழித்து ஊத்த வேண்டும்?....
மிக்க நன்றி அம்மா பகிர்வுக்கு .

ஸாதிகா said...

வித்தியாசமான தோசையாக இருக்கே!

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

நல்ல ஐட்டம் அசத்துங்க....


புதிய வரவு: குடிதண்ணீரை எப்போ குடிக்கனும்னு உங்களுக்கு தெரியுமா?
www.tvpmuslim.blogspot.com

வெங்கட் நாகராஜ் said...

வித்தியாசமாய் வெல்ல தோசை...

ஒரு கை பார்த்துட வேண்டியது தான்...

Mahi said...

சிம்பிள் & ருசியான குறிப்பு!

Jaleela Kamal said...

மிக அருமை, நானும் அடிக்கடி செய்வேன்

Lakshmi said...

சாந்தி உனக்கும் பிடிக்குமா வா சீக்கிரம் வா.

Lakshmi said...

ம்னோ மேடம் பேரனுக்கு பண்ணிகொடுத்தீங்களா? பிடிச்சதா?

Lakshmi said...

விச்சு வருகைக்கு நன்றி வீட்ல பண்ணி தந்தாங்களா?

Lakshmi said...

கணேஷ் உங்களுக்கும் பிடிக்குமா சந்தோஷம்

Lakshmi said...

திண்டுக்கல் தனபாலன் வருகைக்கும் கருத்துக்கும் த. ம ஓட்டுக்கும் நன்றி

Lakshmi said...

ராம லஷ்மி ரொம்ப நல்லா இருக்கும் செய்து பாருங்க.

Lakshmi said...

அம்பாளடியால் இதை கரைத்த உடனே சுடலாம் நல்லா இருக்கும் செய்து பாருங்க.

Lakshmi said...

ஆமா ஸாதிகா வித்யாசமான தோசைதான்.செய்து பாருங்க.

Lakshmi said...

திருவாளப்புத்தூர் முஸ்லீம் வருகைக்கு நன்றி

Lakshmi said...

வெங்கட் உங்களுக்கும் பிடிக்கும் செய்து பாருங்க.

Lakshmi said...

மஹி ஆமா சுலபமானதும் ருசியானதும் தான்

Lakshmi said...

ஜலீலா வருகைக்கு நன்றி ரொம்ப நாளா காணோமே?

மாதேவி said...

வெல்லத் தோசை அருமையாக இருக்கின்றது.

Lakshmi said...

மாதேவி வருகைக்கு நன்றி

கோமதி அரசு said...

குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது நான் அடிக்கடி செய்வேன்.
ஒரு கைபிடி பச்சரிசி மாவு சேர்த்து செய்வேன்.
செய்முறை படங்கள் எல்லாம் அருமை.

Lakshmi said...

கோமதி அரசு வாங்க ஆமா அரிசி மாவு கொஞ்சம் சேர்த்தா நல்லா முறு முறுப்பாவரும்

இராஜராஜேஸ்வரி said...

எளிமையாக விரைவாக செய்யக்கூடிய சுவையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள் அம்மா !

athira said...

ஈசியானதும், டேஸ்ட்டானதுமான இருக்கே லக்ஸ்மி அக்கா. நிட்சயம் செய்து பார்க்கிறேன்.

Lakshmi said...

அதிரா செய்துபாரு நல்லா இருக்கும்

என்னை ஆதரிப்பவர்கள் . .