வாழைக்காய் புளிக்கூட்டுக்கு தேவையன பொருட்கள்.
நாட்டு வாழைக்காய் -------------- 2
புளி ------------------------------------- எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு--------------------- 100 கிராம்
சாம்பார் பொடி------------------- 3 ஸ்பூன்
மஞ்ச பொடி----------------------- அரை ஸ்பூன்
பெருங்காயப்பொடி-------------- ஒரு ஸ்பூன்
வெல்லம்------------------------- கோலி அளவு
உப்பு ----------------------------- தேவையான அளவு
தாளிக்க-----------------------
நல்லெண்ணை----------- 2 ஸ்பூன்
கடுகு------------------------ ஒரு ஸ்பூன்
வெந்தயம்-------------- அரை ஸ்பூன்
சிவப்பு மிளகாய்--------- 3
தேங்காய்------------------ பல்லு பல்லாக கட் செய்தது ஒரு கைப்பிடி
கருவேப்பிலை-------------- ஒரு ஆர்க்
செய் முறை
வாழைக்காய்களை தோல் நீக்கி சின்னதுண்டுகளாக கட் செய்ஜு மோர்கலந்த தண்ணீரில் போட்டு 10 நிமிடங்களுக்கு வைக்கவும். அப்போதான் காய் கருக்காமல் இருக்கும்.
புளியை 3 கப் அளவுக்கு கரைத்து வைக்கவும்
கடாயில் எண்ணை ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும் தேங்காய் துண்டுகளைப்போட்டு சிவக்க வறுக்கவும்.
அதன் மேல் கட் செய்த வாழைக்காய் களை நன்கு கழுவி சேர்க்கவும்
அதன் மேல் மஞ்ச பொடி, பெருங்காயப்பொடி, சாம்பார் பொடி கருவேப்பிலை போட்டு வதக்கி புளித்தண்ணி ஊற்றி நனகு புளி பொடி வாசனை போக கொதிக்க விடவும்.
நன்கு வெந்த துவரம் பருப்பயும் சேர்த்து எல்லாம் சேர்ந்து கொதிததும் கீழே இறக்கி வெல்லம் சேர்க்கவும்.
சிலர் துவரம் பருப்பு சேர்க்காமல் செய்வார்கள் எங்க வீட்டில் பருப்பு சேர்த்தால் தான் பிடிக்கும். அது தவிர வாழைக்காயில் சாதா பொரியல் செய்தால் என்னம்மா தெவச பொரியல் பண்ணிருக்கேன்னு தொடவே மாட்டாங்க . இப்படி பண்ணினா தான் சாப்பிடுவாங்க. ஒவ்வொருவர் டேஸ்ட் ஒவ்வொரு மாதிரி இல்லியா?

Tweet | |||||
17 comments:
முடிஞ்சா.., இன்னிக்கு இதை ட்ரை பன்னிபார்க்கிறேன்.! (TM 1)
வாழைக்காய் ரோஸ்ட்(மீன் ரோஸ்ட் செய்ற மாதிரி), வாழைக்காய் பொடிமாஸ் இரண்டும் தான் எங்க வீட்டில் உள்ளவர்களுக்கு சாய்ஸ். இது செய்து பார்க்கணும்.
வாழைக்காய் புளிக் கூட்டு நன்றாக இருக்கும். அம்மா செய்யும் போது வடகம் வறுத்து தாளிப்பார்கள்.
உங்கள் செய்முறை படங்கள், நீங்கள் சொல்லிய விதம் அருமை.
புதுசா இருக்கு லக்ஷ்மிம்மா.. எங்கூட்ல வாழைக்காய் துவரனையும், புட்டையும் தவிர வேற செய்ததில்லை. ஒருக்கா செஞ்சு பார்க்கணும். ஆமா, வாழைக்காய், துவரம்பருப்பு ரெண்டுமே வாய்வு இல்லையோ. ஒண்ணு சேர்ந்தா வயித்தை ஒண்ணும் பண்ணாதா?..
படத்துடன் விளக்கமாக எழுதி உள்ளீர்கள் அம்மா ! வீட்டில செய்ய சொல்லிடுவோம் ...
பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...(த.ம.3)
வாழைக்காய் வைத்து அம்மா மிளகூட்டல் என்று செய்வார்கள். பொடிமாஸ் என்றும் செய்வார்கள்...
இது புதிதாக இருக்கிறது. செய்து பார்த்து விடுகிறேன்... :)
த.ம. 4
வரலாற்று சுவடுகள் வருகைக்கு நன்றி
அமுதா கிருஷ்ணா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
கோமதி அரசு வருகைக்கு நன்றி
சாந்தி நீ சொல்வது சரிதான் வாயுதான் புளி பெருங்காயம்லாம் சேர்த்து செய்யும் போது வாயு மட்டுப்பட்டுடும் அதனாலதான் சில பேரு துவரம் பருப்பு சேர்க்காம பண்ணுவாங்க.
வெங்கட் வருகைக்கு நன்றி
நல்லா இருக்கும்மா! தேங்காய் வறுத்துப் போட்டு செய்வது புதுசா இருக்கு!
மஹி வருகைக்கு நன்றி
வெங்காயம்-தக்காளி இல்லாம ஒரு சைட் டிஷ் என நினைச்சப்ப இந்த குறிப்புதான் நினைவு வந்து ஓடிவந்து :) பார்த்தேன், கரெக்ட்டுதான்! ஆனால் தேங்காப் பல் இல்லை! தேங்காய்த் துருவல் சேர்த்து செய்து பார்க்கிறேன்மா.
மஹி தேங்காயை எப்படி சேர்த்தாலும் நல்லாதான் வரும்
:) செய்துட்டேன்மா! வெந்தயத்தின் லேசான கசப்பு, வெல்லத்தின் லேசான இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, உப்பு -காரம் எல்லாம் சேர்ந்து நல்லா இருந்தது! :)
மஹி உடனே செய்து பாத்துட்டியா குட். நன்றி
Post a Comment