Google+ Followers

Pages

Wednesday, July 11, 2012

கோவா (2)

இரவு நான் கொஞ்சமா தயிர் சாதம் மட்டுமே சாப்பிடுவேன் ஸோ மாடியில் என்ரூமில் கொண்டு த ந்துட்டாங்க.டி.வி.யில் அவங்க GOD சேனலில் ஏதோ பிரசங்கம் கேட்டுட்டு இருந்தாங்க. கம்ப்யூட்டரும் நெட் பிடிக்கவே மாட்டேங்குது.9 -மணிக்கே பெட்ரூமில் ஏ.சி. போட்டு கதவையும் சாத்திட்டு போயிட்டாங்க. எனக்கு 9- மணிக்கெல்லாம் தூக்கமே வராது.புது இடம் வேர. புரண்டு புரண்டு படுதுட்டே இருந்து அப்புரமா தூங்கினேன்.காலை 9-மணிக்கு எழுந்து பல்தேச்சு குளிச்சுட்டு கீழேபோனேன். நான் எப்பவருவேன்னு நாய்தான் காத்துக்கிட்டே மாடிப்படிகீழயே நின்னுட்டு இருந்தது.வந்ததுமே காலை நக்கி பின்னாடியே சுத்தி சுத்தி வந்தது. கார்டனில் சுத்தி அரைமணி நேரம் வாக்
                         
போனேன்.வந்து காபி பிஸ்கெட்ஸ்.அவங்கல்லாம் 9 மணிக்கே பிரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டாங்க.அவங்க இருவருமே 90 வயசை நெரிங்குரவங்க. பெரிய வீடு சகல் வசதிகள் எல்லாமும் இருக்கு. அவங்க வயசுகாரணமாக உடல் நிலையில் பல பிராப்லங்கள் வாக்கர் உதவியுடந்தான் நடக்கவேமுடிகிரது. அவர்களை கவனித்துக்கொள்ள இரண்டு வேலைக்கார பெண்கள் வீட்டோடயே தங்கி இருக்காங்க.பாதுகாப்புக்கு நாய் . அவங்க பெண் பிள்ளைகள் அடிக்கடி வந்து கவனிச்சுக்கராங்க.

 நானும் மகனும் மருமகளும் 11- மணிக்கு வெளியே கிளம்பினோம் mapusa  மெயின் மார்க்கெட் போனோம் திரும்பின பக்கமெல்லாம் மீன் காய வச்சிருக்காங்க. மூக்கிலிருந்து கர்ச்சீப்பை எடுக்கவே முடியல்லே. அங்க  எல்லா கடைகளிலும் முந்திரு பருப்பு ப்ரௌன் கலர் தோலுடன் ஃப்ரெஷாக மலிவாக கிடச்சுது. அதுமட்டும் வாங்கினோம்..ஊரைச்சுத்தி நிறையா பீச் தான். நல்ல டூரிஸ்ட் ஸ்பாட்டுன்னு சொல்ராங்க. பழமையும் புதுமையும் கலந்துதான் இருக்கு ஊரு. ரோடெல்லாம் ரொம்பவே சுமார் ரகம்தான்.ஒவ்வொரு இடத்தயும் விவரித்துக்கொண்டே வந்தான் மகன்.மட்காவ் என்னுமிடத்தில் அவன் ஒரு பங்களாகட்டி இருக்கான்
                                   
முதலில் அங்க போனோம்.கோடிக்கணகில் செலவுபண்ணி இங்க ஒரு பங்க்ளாகட்டி அதைப்பூட்டி போட்டுட்டு வெளி நாட்ல லஷக்கணக்கில் வாடகை கட்டி அங்க இருக்கான் என்ன வேடிக்கை இல்லியா?இந்த வீட்டை ஒருகேர் டேக்கர் பார்த்து கவனிச்சுக்கரான். வீட்டைச்சுத்தி தென்னை, மா,
                                   
வாழை மரங்கள் முன் புறம் பூவகைகள் என்று நல்லாவே பராமரிக்கரான்.வீட்டைப்பாத்துட்டு அது இருக்கும் பகுதிWHISPERING PALMS
                             
COWK.அங்கேந்து COLVA BEACH, MAJORDA CONSAULIM, PANJIM, NERUL,  இப்படி பல இடங்கள் சுத்திட்டுஹோட்டல் போனோம்.பேருSATKAAR.  சாப்பிட்டு வீடு வர்ம்போது 3- மணிக்கு மேல ஆச்சு. மாடில போயி படுத்துட்டேன். மறுபடி 5 -மணிக்கு எழுந்து டீ குடிச்சுட்டு நானும் மகனும் மட்டும் CALANGUTE  பீச் போனோம்.
                               
எந்த நேரம் பீச் போனாலும் நிறையா வெள்ளைக்காரங்க உடம்பு பூராவும் எண்ணை தடவிண்டு ஸன்பாத் எடுக்கரேன்னு சூடு மணலில் புரண்டுகிட்டே இருக்காங்க. அவங்களுக்கு  நம்மப்போல ப்ரௌன் ஸ்கின் வேனுமாம்.  நம்ம  மக்களோ சிவப்பழகு க்ரீம்பூசி வெளுப்பாக ட்ரை பண்ணுராங்க.வேடிக்கைதான். இர்ந்த எல்லா நாட்களும் கோவாவை பூராவும் சுத்தி காட்டினான். ஒவ்வொரு இடமாக பேர் சொல்லிண்டே வந்தான் எல்லாமே நினைவில் வச்சுக்க முடியல்லே   பீச் பேரெல்லாம் நினை வில் இருக்குCOLVA BEACH, CALANGUTE BEACH,   WAGHATOR BEACH, CONTOLIM BEACH  எல்லாம் போய் சூரிய அஸ் த்மனம் எல்லாம் பாத்தோம். மறு நாள் மர்கெட் ஏரியா மாபுசா போனோம். ந்யூடௌன் கண்டொலிம்னு ஒரு இடம்,கலங்கோட் டிண்டோன்னு ஒரு இடம் இரவு ஐஸ்க்ரீம் பாஸ்கின்&ரபின்ஸ் போனோம்.  இப்படியே 5 நாள் கோவா சுத்தி ஹோட்டலில் சாப்பிட்டு நாய் கூட விளையாடி நல்லா டைம் பாஸ் பண்ணினேன். கிளம்பும் அன்று நாய் பாவம் பேசத்தெரியல்லியே தவிர அதன் கண்களில் நாங்க கிளம்பரோம்னு சோகம் தெரிஞ்சது.. என்ன பண்ண முடியும் கொஞ்ச நாள் வீடு பூராவும் எங்களைத்தேடிண்டே இருக்கும். 5-ம் தேதி பாம்பே. வந்து வரிசையா விசேஷங்களில் கலந்து கொள்ள வேண்டி வந்தது. எல்லாம் முடிந்து அம்பர்னாத் வந்து15 நாள் ஆச்ச்சு மழை பிச்சு வாங்குது.இன்னும் 3- மாசத்துக்கு பாம்பே மழையில்தான் குளிச்சுட்டு இருக்கும்.

30 comments:

துளசி கோபால் said...

//நான் எப்பவருவேன்னு நாய்தான் காத்துக்கிட்டே மாடிப்படிகீழயே நின்னுட்டு இருந்தது.வந்ததுமே காலை நக்கி பின்னாடியே சுத்தி சுத்தி வந்தது. //


இது...... இதுதான் உண்மையான அன்கண்டிஷனல் லவ்.

இந்த ஜீவன்களின் அன்புக்கு அளவே இல்லை.

நான் எப்பவும் நாயாள்தான். பூனா வாழ்க்கை முடிஞ்சு ஃபிஜி போனதும் நாயுடன் கூட பூனை. நியூஸி வந்தால்..... பூனை மடும் என்றாகிவிட்டது வாழ்க்கை.

யானை, வாழ்க்கை முழுசும் மனசில்:-)

பால கணேஷ் said...

வெள்ளைக்காரங்க நம்மள மாதிரி பரவுன் ஸ்கின்னுக்கு ஆசைப்படுறதும். நாம சிவப்பழகுக்கு ஏங்கறதும்... இக்கரைக்கு அக்கரை பச்சை. ஹா... ஹா... பயண அனுபவங்களை உங்களின் எளிமையான எழுத்தில் படிக்கிறபோது நல்லா இருக்கு.

radhakrishnan said...

என்னம்மா, டூர்சுற்றிக் கொண்டே இருக்கிறீர்களே?கால்வலி பிரச்சினை
என்றும் சொல்கிறீர்கள். உங்களைப் பார்த்துத்தான் நாங்களெல்லாம் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று
நினைக்கிறேன்.கிடைத்த வற்றை ரசித்து,
அநுபவித்துவாழ உங்கள் பதிவுகள் பெரிதும் உதவுகின்றன. புதிய நாய்கூட
உங்களிடம் உடனே பழகி அன்புசெலுத்த என்ன வசியம் வைத்திருக்கிறீர்களோ?
பதிவும் படங்களும் அருமை. நன்றி
அம்மா

Niranjanaa -Niru said...

போன பதிவைப் பாக்காததும் நல்லதாப் போச்சு எனக்கு, இப்ப சேத்து ரெண்டையும் படிச்சுட்டேன். நான் கோவா போனதில்லைங்கறதால எனக்கு உங்களோடவே ட்ராவல் பண்ணினதுல ரொம்ப சந்தோஷம்.

ராமலக்ஷ்மி said...

ஐந்து நாட்களும் இனிதே கழிந்தது அறிந்து மகிழ்ச்சி.

இராஜராஜேஸ்வரி said...

கோவா பயண அனுபவம் அருமை..

இராஜராஜேஸ்வரி said...

கோவா பயண அனுபவம் அருமை..

வெங்கட் நாகராஜ் said...

என்னம்மா ஐந்து நாள் பயணத்தை இரண்டே பகுதியில் முடிச்சீட்டீங்களே. உங்க கூடவே கோவா சுத்திப் பார்க்கலாம்னு நினைச்சேன்...

சுவையான பகிர்வுக்கு நன்றிம்மா.

மகேந்திரன் said...

இனிய அனுபவம் அம்மா....

கோமதி அரசு said...

உங்களுக்கு மகன் , மருமகளுடன் மகிழ்ச்சியான சுற்றுப் பயண அனுபவங்கள், எங்களுக்கு அருமையான பயண அனுபவங்கள்.

புதுகைத் தென்றல் said...

கோவா போனதில்லை. மும்பையில் மழை பெய்யுதா. சந்தோஷம் இங்க மழையைக்காணோம். :(( (இங்கயும் இப்ப மழை சீசன் தான்)

எஞ்சாய் செய்யுங்க

Lakshmi said...

துளசி கோபால் சீக்கிரமே யானை வாங்குங்க. அதைக்கட்டி தீனி போட நல்ல வசதியான வாழ்க்கை அமைய வாழ்த்துகள்.

Lakshmi said...

கணேஷ் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

ராதா கிருஷ்னன் சார் வெரும் ஆர்த்தரைட்டீஸ் மட்டுமீல்லே உச்சந்தலைலேந்து உள்ளங்கால் வரையிலும் ப்ராப்லம்தான். ஹா ஹா.அதோடுதான் சுத்திகிட்டு இருக்கேன்.

Lakshmi said...

நிரு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

ராமலஷ்மி வருகைக்கு நன்றி

Lakshmi said...

இராஜராஜேஸ்வரி நன்றி

Lakshmi said...

வெங்கட் இன்னும் நிறையா எழுதனும்னுதான் நினைச்சேன். படிக்கிரவங்களுக்கு போரடிச்சுடக்கூடாதில்லியா அதான் ரெண்டே பதிவில் முடிச்சுட்டேன்.

Lakshmi said...

மகேந்திரன் நன்றி

Lakshmi said...

கோமதி அரசு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

புதுகைத்தென்றல் நீங்க எங்க இருக்கீங்க. வருகைக்கு நன்றி

துளசி கோபால் said...

ஆஹா ஆஹா..... எனக்கு ஆசை இருக்கு தாசில் பண்ண:-)

இங்கத்து குளிருக்கு யானை இருக்காது.

எங்கூர் ஜூவில் கூட யானை கிடையாதுன்னா பாருங்க:(

யானை பார்க்கணுமுன்னா ஆக்லாந்துக்கோ இல்லை அஸ்ட்ராலியாவுக்கோதான் போகணும்.

அதான் ப்ரிஸ்பேன் பதிவுகள் மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதித்தள்ளறேன்:-)))))

பார்த்துட்டு வந்த யானைகளை அப்படியே வ்ட்டுட முடியுதா? :-))))

அமைதிச்சாரல் said...

ஐஸ்க்ரீம் சாப்பிட்டு சுத்துப்பயணத்தை நிறைவா நாங்களும் முடிச்சோம் :-)

புதுகைத் தென்றல் said...

புதுகைத் தென்றல் இப்போ மையம் கொண்டிருப்பது ஹைதராபாத்தில். :))

(பாம்பேலேர்ந்து டைரக்ட் ட்ரையின் நிறைய்ய இருக்கு. கண்டிப்பா வாங்க)

Lakshmi said...

இண்டியாலதான் நிறையா யானைகள் இருக்கே. எதுக்கு அவ்வளவு தூரம் வரனும்?

Lakshmi said...

சாந்தி ஐஸ்கிரீம் என்ன ஃப்ளேவர் சாப்டிங்க?

Lakshmi said...

ஹைதராபாத்தா போனவருஷம் வந்தேனே ஒரு மாசம் அங்கதான் இருந்தேன் என் பெண் அங்க சைனிக் புரில இருக்கா.

துளசி கோபால் said...

அட ராமா!!!!!!!!

நான் நியூஸிலாந்துவாசியாச்சே:(

25 வருசமா இங்கேதான் குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேன்.

இந்தியக்கோவில்களில் யானையை காசு வாங்கப் பழக்கி வச்சுருப்பதைப் பார்த்தால் மனசுக்கு பேஜார்:(

Lakshmi said...

ஆமாங்க அனிமல்களை அதனதன் கூட்டத்தோட இருக்கவிடுவதுதான் நல்லது

புதுகைத் தென்றல் said...

சைனிக் புரியா பக்கத்துலதான். அடுத்தவாட்டி வரும்போது மெயில் அனுப்புங்க. பதிவர் சந்திப்பு வெச்சு கலக்கிடலாம். :))

என்னை ஆதரிப்பவர்கள் . .