Google+ Followers

Pages

Monday, July 9, 2012

கோவா (1)

ஜூன்மாசம் 1-ம் தேதி கோவா போய் வந்தேன். இங்க வந்ததும் வரிசையா விசேஷங்களில் கலந்து கொள்ள வெண்டி வந்தது. ஸோ அந்தப்பதிவெல்லாம் முதல்ல போட்டேன். கோவா பின் தங்கி விட்டது. ஏர்போர்ட் போய் வழக்கமான பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிந்து போர்டிங்க் பாஸும் வாங்கிண்டு செக்கின் முடிந்து உள்ள போய் உக்காந்து வேடிக்கை பாக்க ஆரம்பிச்சேன். ஃப்ளைட்2 மணிக்குதான் இருந்தது வீட்லேந்து ப்ரேக்ஃபாஸ்ட் பிஸ்கெட் காபி குடிச்சுட்டு 11 மணிக்கு கிளம்பி 12- மணிக்கு ஏர்போர்ட் போயாச்சு.2- மணி வரை டைம் பாஸ் பண்ணனுமே. கொஞ்ச நேரம் ஏர்போர்ட் சுத்தி பாத்தேன் கொஞ்ச நேரம் புக் படிச்சு வாக் மேனில் பாட்டுகேட்டுன்னு டைம் பாஸ் பண்ணினேன் நேரம் ஆனதும் எல்லாரும் வரிசையில்  நின்னா நானும்போய் சேர்ந்துண்டேன். எனக்கு முன்ன 25-பேரு வரிசையில் இருந்தா. க்யூ ரொம்ப ஸ்லோவா நகர்ந்தது. என் ஆர்த்தரட்டீஸ் ப்ராப்லம்னால என்னால பத்து நிமிஷம் சேர்ந்தாப்ல ஒரு இடத்தில் நிக்க முடியாது. ஸோ பாத்ரூம் வரை போயி வந்துடலாம்னு போனேன். அது கொஞ்சம் தள்ளி இருந்தது. என்னால மெதுவாதான் நடக்கமுடியும். அது எங்கியோ ஒரு ஓரமா இருந்தது. அங்கபோயிட்டு வெளில வந்து தண்ணி குடிக்க போனேன். அப்போ என் மகனின் போன் வந்தது. அம்மா எங்க போயிட்டேள் எல்லாரும் ஃப்ளைட்டில் ஏறியாச்சு உங்களைக்காணோம்னு அங்க தேடிண்டு இருக்கா ஓடுங்கோன்னு அவசரமா சொன்னான்.

நான் இங்க தானேடா இருக்கேன் க்யூவில நிக்க முடியல்லே க்யூ ரொம்ப மெதுவா நகருதுன்னு பாத்ரூம் பக்கம் வந்தேன்னு சொன்னேன். அவசரமா எண்ட்ரன்ஸ் பக்கம் போனேன். அங்க யாருமே இல்லே டிக்கட் செக் பன்ரவன் மட்டும் இருந்தான் எங்க போயிட்டீங்க மேடம்னு ஒரு முறை முறைச்சான். சாரி, சாரின்னு சொல்லிட்டு பஸ்ல போயி ஏறிண்டேன் பஸ்சில் என்னையும் ட்ரைவரையும் தவிர யாருமே இல்லே. எனக்கே ஒரு மாதிரி ஆச்சு. எவ்வளவுதடவை ஃபலைட்பயணம் போயிருக்கேன் இப்படி ஒருதடவைகூட ஆனதில்லே. சரி இதுவும் ஒரு அனுபவம்னு நினச்சேன்.ஃப்ளைட்டில் முதல் வரிசையிலேயே ஸீட் ஒதுக்கி இருந்தா. கால் நீட்டிண்டு வசதியா உக்கார முடிஞ்சது. இது பட்ஜெட் ஃப்ளைட். உள்ள சாப்பிடவோ குடிக்கவோ எதுவும் தரமாட்டா. ஏதானும் வேனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுத்து வாங்கிக்கனும்.  காலேலயே பிஸ்கெட் மட்டும் சாப்பிட்டு கிளம்பிட்டதால ஒரு காபியாவது குடிக்கலாம் போல இருந்தது. கேட்டு வாங்கினேன். ஒரு பேப்பர்கப்பில் தந்தா. டேஸ்ட் ஓக்கேதான். 100- ரூவா கொடுத்தேன் 30- ரூவா பாக்கி தந்தா. அங்க பேரமா பேச முடியும்? தரையில் ஒரு காபி 10 ரூவாய்க்கு கிடைக்கும் ஆகாயத்தில் 70- ரூவா. விலையும் இறக்கை கட்டி பறக்கும் போல இருக்கு. 45- நிமிஷத்தில் கோவா வந்தது. சின்னப்பையன் ஏர்போர்ட் வந்திருந்தான்.   காரில் ஏறினதுமே என்னமா பாம்பே ஏர்போர்ட்டில் அமர்க்கள்ம் பண்ணிட்டியே எவ்வளவுதரம் ஃப்ளைட்ல போயிருக்கே ஏன் இப்படி பன்னினேன்னு கேக்கரான் என்னத்த சொல்ல?கோவா ஏர்ப்போர்ட்பேர்.   DOBOLIM. காரில் போகும்போதே
                                                   
 முக்கியமான இடங்களின் பெய்ர்கள் சொல்லிண்டே வ்ந்தான்.திரும்பின இடம் எல்லாம் சர்ச் தான் நிறையா இருக்கு. ஏர்போர்ட் பக்கத்தில் உள்ள சர்ச் பேரு,BAMBLIN HOLY CROSS CHURCH  .  நாங்க யாரு வீட்டுக்கு போனோமோ
    அவங்க கிறிஸ்டியன்ஸ். நான் வெஜ் இல்லாம சாப்பிடவே தெரியாது அவங்களுக்கு.ஏர்போர்ட்லேந்து ஒரு மணி நேரம் காரில் போகனும். அப்பவே 3- மணீ ஆச்சு என்னை ஒரு ஹோட்டல் கூட்டின்டு போனான். ஒரு வெஜிடேரியன் ஹோட்டல் கூட கண்ணில் படலே. தேடிப்பிடிச்சு எங்கியோ இருந்த ஒரு ஹோட்டல் கூட்டிண்டு போனான். NAVTARA PORVORIM என்று பேர் போட்டிருந்தது. ரவாதோசையும் காபியும் சாப்பிட்டோம்.
CALANGUTE  CAROLINA VILLA  COBRA VADDO  என்று அவர்கள் வீடு வரும்போது 4
                                      
 -மணி ஆச்சு. வீட்டுக்குள் நுழைத்ததுமே ஒரு ஜெர்மன் ஷெப்பேர்ட் நாய் ஓடிவந்து குலைத்து மேலே ஏறி நக்க ஆரம்பிச்சது. நல்ல பெரிய சைஸ். நாய்
    பாக்கவே பயம்மா இருந்தது.அது பேரு மேக்ஸ்.மாடியும் கீழுமா பெரிய விஸ்தாரமான பங்களா.90- வயசில் கணவனும் மனைவியுமாக இருவர் இருக்காங்க. அவங்க பெண்,   பிள்ளை  எல்லாரும் வெளி நாட்டில் இருக்காங்க. இவங்க வயசு காரணமாக இவங்களை அங்க கூட்டி போக முடியல்லே.அம்மா நீ மாடில போயி ரெஸ்ட் எடுத்துக்கோன்னு சொன்னான். மேல போனேன் 20 பேருக்குமேல படுத்து புறளலாம் போல பெரிய பெட் ரூம் நடுவில் பெரிய கட்டில் ஃபோம் மெத்தை எல்லாம் இருந்தது. படுத்துட்டேன் 6- மணிவரை படுத்துட்டு கீழ வந்தேன் ரெடியா டீ போட்டுதந்தா.தனி வீடு சுத்திவர் பெரிய தோட்டம் தென்னை, பழ, மரங்கள் வாசல் பக்கம் பூசெடிகள் என்று வீடு விஸ்தாரமா இருந்தது.

அன்று ரொம்ப நேரமாகிவிட்டதால் எங்கும் சுத்த முடியல்லே. நான் சோபாவில் உக்காந்ததுமே நாய் ஒரு குழந்தைபோல மடியில் வந்து படுத்துவிட்டது.
       நாங்களும் ஜபல்பூரி இருந்தப்போ வீட்டில் நாய் வளர்த்திருக்கோம். அதனால பயம்லாம் இல்லே ஆனா புது ஆட்களைக்கண்டதும் நாய் எதிர்ப்பு கிலப்பும் இல்லியா . அப்புரம் நல்லா பழகிட்டுது என் காலையே நக்கி என்னையே  சுத்தி சுத்தி வந்தது.
( நன்றி கூகுல் இமேஜ்)                                                      (தொடரும்)

22 comments:

ராமலக்ஷ்மி said...

கூடவே வந்து கொண்டிருக்கிறோம்:).

Ramani said...

நாங்களும் உங்களுடன் கிளம்பிவிட்டோம்
ஏற்கெனவே பார்த்த இடம் என்பதால்
கூடுதலாக உங்கள் பயணப்பதிவை
ரசிக்க முடியும் என நினைக்கிறேன்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Ramani said...

tha.ma 2

துளசி கோபால் said...

ஹைய்யா!!!! நாய் வந்துட்டாலே ஜாலிதான்.

பால கணேஷ் said...

கோவா பத்தி நிறையப் படிச்சிருக்கேனே தவிர ஒரு முறை கூட போய்ப் பாத்ததில்லை. இப்ப உங்க கூட நானும் வரப் போறதுல ரொம்ப சந்தோஷம் எனக்கு. தொடர்கிறேன்.

Avargal Unmaigal said...

செலவில்லாமல் கோவா பயணமா நாங்க ரெடி அதுல கலந்துகிறதுக்கு...உங்கள் பயண அனுபவங்கள் எல்லாம் படிப்பதற்கு நன்றாக இருக்கிறது. எதோ ஒரு குடும்பத்துடன் படிப்பவர்களும் சேர்ந்து போவது மாதிரி ஒரு உணர்வு

athira said...

ஆஹா லக்ஸ்மி அக்கா, கோவா தொடர் ஆரம்பமோ சூப்பர்... சமையல் வகைகள், குறிப்புக்களையும் இடையிடை சேர்த்துச் சொலுங்கோ.. கோவா ஸ்பெஷல்.

அமைதிச்சாரல் said...

கோவா சுத்திப்பார்க்க நாங்களும் கூடவே வர்றோம் லக்ஷ்மிம்மா..

Lakshmi said...

ராமலஷ்மி வாங்க வருகைக்கு நன்றி

Lakshmi said...

ரமணி சார் வருகைக்கும் கருத்துக்கும் ஓட்டுக்கும் நன்றி

Lakshmi said...

துளசி கோபால் உங்களுக்கு நாய் ரொம்ப பிடிக்குமா. வருகைக்கு நன்றி

Lakshmi said...

கணேஷ் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

அவர்கள் உண்மைகள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

அதிரா கோவாஸ்பெஷல் எல்லாமே SEA FOOD தானே. அதனால சாரி. வருகைக்கு நன்ரீ

Lakshmi said...

சாந்தி வா வா கோவா சுத்திகாட்டரேன்

இராஜராஜேஸ்வரி said...

ரசிக்கவைக்கும் பகிர்வுகள் அம்மா !

கோமதி அரசு said...

கோவா பயணக்கட்டுரையா !
தொடர்ந்து வருகிறேன் லக்ஷ்மி அக்கா.

Lakshmi said...

இராஜராஜேச் வரி வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோமதி அரசு வாங்க வருகைக்கு நன்றி

வெங்கட் நாகராஜ் said...

உங்களோடவே கோவா வர நானும் ரெடி...

Lakshmi said...

வாங்க வெங்கட் நாம எல்லாருமா கோவாவை சுத்திட்டு வரலாம்.

மாதேவி said...

கோவா பிடித்த இடம். போனதில்லை. உங்ககூட வருகின்றேன்.

என்னை ஆதரிப்பவர்கள் . .