Google+ Followers

Pages

Saturday, August 6, 2011

எங்க ஊரு நல்ல ஊரு (தொடர் பதிவு)

அஸ்மா தொடர்பதிவுக்கு அழைச்சிருக்காங்க. நன்றி அஸ்மா.
 யாரெல்லாம் என்னெல்லாம் சொல்லி இருக்காங்கன்னு பொயி
 பாத்துட்டு தான் வந்தேன். எல்லாரும் ஹிஸ்ட்ரி, ஜாகர்பி என்று
 கல்ந்துகட்டி அவங்க, அவங்க ஊரு பத்தி கலக்கி இருக்காங்க.
 எனக்கு ஹிஸ்ட்ரி, ஜாகர்பின்னா என்னன்னே தெரியாது. எனக்கு
 தெரிந்த விதத்தில் எங்க ஊருபத்தி சொல்ரேன்.


எங்க ஊரு க்ரேட் கல்லிடைக்குறிச்சி. திருனெல் வேலி ஜில்லாவில்
 இருக்கு. கல்லிடை ஒரு சின்னகிராமம்தான்.பக்கத்தில் உள்ள சற்றே
 பெரிய ஊரு என்றால் 35 கிலோ மீட்டரில் இருக்கும் திரு நெல் வேலி
 தான். ஒரு சமயம் ஜகத்குரு காஞ்சி பரமாச்சாரியார் அவர்கள் பாத
 யாத்திரையாக அந்தபக்கம் வந்தப்போ நாதஸ்வரத்தில் கல்யாணப்
 பாடல்கள் வாசிக்கும் சப்தம் அவர்கள் காதில் கேட்டதாம். அதனால
 அந்த ஊருக்கு கல்யாண்புரி என்று நாம கரணம் சூட்டினார்களாம்.
  விட்டதாம். இது பெய்ர்காரணம். நாளாவட்டத்தில் கல்லிடைக்
 குறிச்சியாகி விட்டது. இந்த ஊரின்பக்கம் அகஸ்த்தியர்கூடம் என்னும் அழகான இடம்
 இருக்கு.மருந்து மூலிகைச்செடிகள் சூழ ரம்யமாக இருக்கும்.
  மூலிகை கல்ந்த அருவி நீரும் வருடம் பூராவும்கொட்டீக்கொண்டே
  இருக்கும். இங்குள்ளவர்கள் இந்த இடத்தை ஏழைகளின் ஸ் விஸ்
  என்றே அழைப்பார்கள். மணி முத்தாறு  நதி, தாமிர பரணி நதியுடன்
 கலக்கும் இடத்தில் சின்னசங்கரன் கோவில் அமைந்திருக்கு. இது
 கல்லிடையில் இருந்து 3-கிலோ மீட்டரில் அமைந்துள்ளது, கன்யா குமாரி 70-கிலோ மீட்டரில் இருக்கு. ஊரைச்சுற்றி தாமிர
 பரணி ஆறு ஓடுகிறது. நிறைய பெருமாள் கோவில், சிவன்கோவில்
 என்று எல்லா சாமிகளுக்கும் கோவில்கள் அதில் சிறப்பாக பூஜை
  வழிபாடுகள் நடந்து வருகிறது.7,8, வது கிலோ மீட்டர்களில்
 பாவ நாசம், விக்கிரம சிங்க புரம்,அம்பாசமுத்திரம் என்னும்
  ஊர்கள் இருக்கு. மணிமுத்தாறு டேமும்வாட்டர் ஃபால்சும்
கல்லிடையில் இருந்து 6-வது கிலோ மீட்டரில் இருக்கு.வருடம்
 பூராவும் அருவியில் தண்ணீர் வரத்து இருக்கும்.அருமையான
 சுற்றுலா தலங்கள். அதற்கும் மேலே போனால் மாஞ்சோலை
 என்னும் டீ எஸ்டேட் பசுமை நிறைந்து இருக்கு.     
  மணிமுத்தாறு போகும் வழியில் தெற்கு பாப்பாங்குளம் என்னும்
 சிறிய ஊர் இருக்கு. கல்லிடையில் பெரும்பாலானவர்களின்
 குலதெய்வமான சடையுடையார் கோவில் அங்கு இருக்கு.
  அங்கே போக ஆண்களுக்குமட்டுமே அனுமதி உண்டு.     
 கல்லிடையில் மெயின் குடிசைத்தொழிலாக அப்பளாம் தயார்
  செய்யும் தொழில்இருக்கு.முன்னேல்லாம் அதாவது 50 வருடம்
  முன்ன்னே, தெருவுக்கு ரெண்டு அப்பளாக்கடை இருக்கும்.அப்போ
  மொத்தமே 18 தெருக்கள் தான் இருந்தது. எந்த தெரு வழியாக
  ப்போனாலும் பச்சை அப்பள மாவு வாசனை மூக்கைத்துளைக்கும்.
  இப்போ நான் சமீபத்தில் ஊர் போனப்போ ஒருசில வீடுகளில் தான்
 அப்பள தயாரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தது.இளைஞர்கள்
 சிறியவர்கள் எல்லாம் நல்ல வேலைதேடி வெளி ஊரு வெளி மானிலம்
 என்று ப்பொய் விட்டதால வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை.அப்படியு
 மிஷின் வாங்கி அப்பளாம் தயாரிக்கும் தொழிலை தொடர்ந்து செய்து
  வருகிரார்கள்.

   
   அத்துடன் மனோகரம்,வெல்லச்சீடை, உப்பு சீடை, முறுக்கு தட்டை
  என்று எல்லாவித தின் பண்டங்களும் சுகாதாரமான முறையில்
  தயார் செய்து, வெளி ஊர், வெளி நாடுகளுக்கும் அனுப்பி வருகிரார்
 கள். கல்லிடை அப்பளம் என்றால் அதற்கென்றே  நிறைய ரசிகர்கள்
 எல்லா ஊர்களிலும் நிறையா இருக்காங்க.தாமிரபரணி தண்ணீருக்கே
  ஒரு தனி ருசி உண்டு. அது அந்த தின்பண்டங்கலின் சுவையில் தெரியும்
  அந்தப்பொருட்களுக்கு எல்லா இடங்காளிலும் நல்ல வரவேற்பு இருக்கு.                                   
  50 வருடம் முன்பு ஆஸ்ரமம், முதியோர் இல்லம் என்றால் என்னன்னே
  தெரியாது. இப்போ திரும்பின பக்கமெல்லாம், முதியோர் இல்லம், ஆஸ்ரமம்
  கண்களில் படுகிரது. இதுகொஞ்சம் மனதை பாதிக்கும் விஷயம்.சிறியவர்
   கள் வேலை நிமித்தமாக வெளியில் போய் விடுவதால ஊர் பூராவும்
  வயதான பெரியவர்களையே நிறைய பார்க்கமுடிகிரது. மிகவும் முடியாத
  வர்களை நல்ல மனம் படைத்த சிலர் ஆஸ்ரமத்தில் அவர்களைச்சேர்த்து
  ஆதரவும் பாதுகாப்பும் கொடுத்து வருகிரார்கள்.

           


குற்றாலம்30 கிலோ மீட்டரில் இருக்கு. பொதிகை மலை ஊரை சுற்றி
 இருப்பதால் குற்றாலத்தில் சீசன் ஆரம்பித்ததும் கல்லிடையில் மித
   மான சாரல் தூற ஆரம்பித்து ஊரே குளு, குளுன்னு ஆயிடும்.கல்லிடை
 யில் மேல் படிப்பு படிக்க காலேஜ் வசதி இல்லே.10-வதுவரைதான்.
 பிறகு ஆழ்வார்குறிச்சி பரமகல்யானி காலேஜ் போகனும். விக்கிரமசிங்க
 புரத்திலும் காலேஜ் இருக்கு.திருனெல்வேலி இருட்டுக்கடை அல்வாவை
 விட கல்லிடையில் தயாராகும் லாலா கடை அல்வா சூப்பர் சுவையுடன்
 இருக்கும்.                         

 எல்லாவிஷயங்களும் இங்கியே சொல்லிட்டா என் பயணக்கட்டுரையில்
 சொல்ல விஷயமே இருக்காதே. அதனால ஊர் பெருமையைஇங்கேயே
 முடிச்சுக்கரேன். இந்த தொடர் பதிவுக்கு நான் யாரையுமே மாட்டி விடப்
  போரதில்லே(எல்லாரும் ஜோரா ஒருதரம் கைதட்டிடுங்க  ஓக்கேவா)       
 போனதொடர்பதிவு க்கு நான் அழைத்திருந்தவர்கள் ஏற்கனவே அந்த
  பதிவு எழ்திட்டதா சொல்லிட்டாங்க. ஒருமாசம் ப்ளாக் பக்கமே வரா
  ததால யாரெல்லாம் என்ன எழுதி இருக்காங்கன்னு பாக்க முடியல்லே.

65 comments:

HVL said...

//சிறியவர்கள் வேலை நிமித்தமாக வெளியில் போய் விடுவதால ஊர் பூராவும்
வயதான பெரியவர்களையே நிறைய பார்க்கமுடிகிரது.//
எல்லா ஊரிலும் இப்போது இந்த நிலை தான்!

அந்நியன் 2 said...

//குற்றாலம்30 கிலோ மீட்டரில் இருக்கு.//

இது ஒன்றே போதுமே ஊரின் சிறப்பை விளக்குவதற்கு.

மிக அருமையாக விளக்கியுள்ளிர்கள் நாங்களும் உங்கள் ஊரை பற்றி தெறிந்து கொண்டோம்.

நன்றிமா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

கல்லிடக்குறிச்சி அப்பளத்திற்கு பெயர்போன ஊராக இருந்தது என்பது பழைய ஆட்கள் எல்லோருக்குமே தெரியும். இன்று எல்லா ஊர்களிலுமே அப்பளம் தயாரிக்கப்படுகிறது.

தங்களின் இந்தப்பதிவு நல்லா அருமையான படங்களுடன் அசத்தலாக உள்ளது. சமீபத்தில் சொந்த ஊருக்குப் போய்வந்ததால் ஏற்பட்ட எழுச்சி பதிவினில் நன்கு காண முடிகிறது. பாராட்டுக்கள்.

நானும் இதே சொந்த ஊர் (திருச்சி) பற்றிய பதிவு வெளியிட்டேன். முடிந்தால் படித்துப்பாருங்கோ.
http://gopu1949.blogspot.com/2011/07/blog-post_24.html

அன்புடன் vgk

அஸ்மா said...

உங்களுக்கு பதில் கொடுத்துட்டு வந்து பார்த்தால் உடனே எழுதிட்டீங்க :) நன்றி லஷ்மிம்மா.

//மருந்து மூலிகைச்செடிகள் சூழ ரம்யமாக இருக்கும்.
மூலிகை கல்ந்த அருவி நீரும் வருடம் பூராவும்கொட்டீக்கொண்டே
இருக்கும்//

//குற்றாலத்தில் சீசன் ஆரம்பித்ததும் கல்லிடையில் மித
மான சாரல் தூற ஆரம்பித்து ஊரே குளு, குளுன்னு ஆயிடும்.//

கேட்கவே ஆசையா இருக்கு :) 'ஏழைகளின் ஸ்விஸ்' அகஸ்த்தியர் கூடத்துக்கு வந்து ஒருநாள் பார்க்கணும் :)

//திருனெல்வேலி இருட்டுக்கடை அல்வாவை
விட கல்லிடையில் தயாராகும் லாலா கடை அல்வா சூப்பர் சுவையுடன்
இருக்கும்//

அப்படியா..?! 'அல்வா'ன்னாலே திருநெல்வேலின்னு பேராக்கிட்டாங்க‌ளே! இனி கல்லிடைக் குறிச்சியை ஃபேமஸாக்கிடுவோம் ;)))

//தாமிரபரணி தண்ணீருக்கே
ஒரு தனி ருசி உண்டு. அது அந்த தின்பண்டங்கலின் சுவையில் தெரியும்//

இதுல ரொம்ப நாளா ஒரு குழப்பம் இருக்கு லஷ்மிம்மா! அதெப்படி அந்த தண்ணீர் மாசு/தூசு இல்லாம சாப்பிடும் உணவுடன் கலக்குமளவுக்கு சுத்தமா இருக்குமா? அல்லது அதை சுத்தப்படுத்திய பிறகு சேர்ப்பார்களா?

ஆமினா said...

கலக்கல் லெட்சுமி ஆண்ட்டி!!!

நிறையா விஷயம் கத்துகிட்டேன் :)

வெங்கட் நாகராஜ் said...

கல்லிடையின் பெருமையைச் சுருங்கச் சொன்னாலும் நிறைவாகச் சொல்லி அழகு படுத்தி இருக்கீங்கம்மா. சொன்ன விதமும், இடங்களும் என்னை அங்கே அழைக்கின்றன....

யாரங்கே.... சீக்கிரம் கல்லிடைக்கு ஒரு டிக்கெட் பதிவு செய்யுங்கப்பா.... :)))

வெங்கட் நாகராஜ் said...

கல்லிடையின் பெருமையைச் சுருங்கச் சொன்னாலும் நிறைவாகச் சொல்லி அழகு படுத்தி இருக்கீங்கம்மா. சொன்ன விதமும், இடங்களும் என்னை அங்கே அழைக்கின்றன....

யாரங்கே.... சீக்கிரம் கல்லிடைக்கு ஒரு டிக்கெட் பதிவு செய்யுங்கப்பா.... :)))

கவி அழகன் said...

அருமையாய் எழுதி உள்ளீர்கள்

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

கோமதி அரசு said...

ஊர் பெருமையை நல்லா அழகாய் சொல்லி விட்டீர்கள்.
எனக்கும் உங்கள் பக்கம் தான் சொந்தஊர்.
(பாளையங்கோட்டை)

என் புகுந்தவீடு ஆழ்வார்குறிச்சி.
பரமகல்யாணி கோவில் போய் இருக்கிறேன்.

கல்யாண பலகாரத்தில் மனோகரம், முறுக்கு கண்டிப்பாய் இடபெறும்.
கல்லிடைகுறிச்சி அல்வா சாப்பிட்டுப் பார்க்க ஆவல்.

Lakshmi said...

H.V.L. இது காலத்தின் கட்டாயம். இதில் யாரையுமே குறை சொல்ல முடியாதுதான்.

Lakshmi said...

அந்நியன்2 நீங்க எல்லாரும் உணரும்படி என் ஊரைப்பற்றி சொல்லிட்டேன்னு
நினைக்கிரேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

கோபல் சார் ஒவ்வொருவருக்கும் பிறந்த ஊர்னா அதன் நினைவுகள் பெருமைக்குறியதுதான். ஆனா 25 வருடம் கழித்து நான் பார்த்த என் ஊர்
பழைய ஊரா இல்லே. பல மாற்றங்கள்.
ஜீரணிச்சுதான் ஆகணும். உங்க திருச்சி
பதிவு இன்னும் படிக்கலே. போயி பாக்கரேன். வருகைக்கு நன்றி.

Lakshmi said...

அஸ்மா நீங்க அழைச்சதாலதானே உங்க
எல்லாருடனும் எங்க ஊரு பெருமையை பகிர்ந்து கொள்ள முடிந்தது. உங்களுக்கு தான் முதல் நன்றி.தாமிரபரணி தண்ணீர்
எப்பவுவே பளிங்குபோல சுத்தமானது தான். அதை சுத்தப்படுத்த வேண்டிய அவசியமே இல்லே.

Lakshmi said...

ஆமி என்ன கத்துகிட்டீங்கம்மா. வருகைக்கு நன்றி.

Lakshmi said...

வெங்கட் உங்களுக்கு கல்லிடைக்கு டிக்கட் ரெடி. எப்ப வரீங்க எங்க கல்லிடைக்கு?

Lakshmi said...

கவி அழகன் நன்றிங்க.

Lakshmi said...

கருன் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் எல்லாருக்கும்.

Lakshmi said...

கோமதி அரசு அப்போ நாம ரொம்ப நெருங்கிட்டோம் இல்லே. எப்போ கல்லிடை வரீங்க?

பலே பிரபு said...

ஒரு முறையாவது உங்கள் ஊர்ப்பக்கம் போக வேண்டும்.

Nagasubramanian said...

எல்லாரும் ஜோரா ஒருதரம் கைதட்டிடுங்க ஓக்கேவா.

ok ok

இராஜராஜேஸ்வரி said...

தாமிரபணித்தண்ணீராய் பரணி பாடிய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

தமிழ்வாசி - Prakash said...

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

NADESAN said...

ஊர் பூராவும்
வயதான பெரியவர்களையே நிறைய பார்க்கமுடிகிரது. மிகவும் முடியாத
வர்களை நல்ல மனம் படைத்த சிலர் ஆஸ்ரமத்தில் அவர்களைச்சேர்த்து
ஆதரவும் பாதுகாப்பும் கொடுத்து வருகிரார்கள்.

Rathnavel said...

கல்லிடைக்குறிச்சியைப் பற்றி நிறைய தகவல்கள்.
நன்றி அம்மா.

Lakshmi said...

பிரபு அவசியம் பாக்கவேண்டிய ஊருதான் வா வா.

Lakshmi said...

நாகசுப்ரமனியம், கை தட்டினீங்களா?

Lakshmi said...

ராஜராஜேஸ்வரி நன்றி

Lakshmi said...

பிரகாஷ் நண்பர்கள்தின நல் வாழ்த்துக்கள்.

Lakshmi said...

நடேசன் ஆமாங்க இன்னும் கருணை
உள்ளங்கள் இருக்கு.

Lakshmi said...

ரத்னவேல் வருகைக்கும் கருத்துக்கும் நன்ரிங்க ஐயா

ஸ்ரீராம். said...

ஊர் நினைவுகள் மனதில் ஊரும் நினைவுகளாய்....ஊர் சுற்றி வந்த உணர்வு.

ஸாதிகா said...

ல்லாரும் ஹிஸ்ட்ரி, ஜாகர்பி என்று
கல்ந்துகட்டி அவங்க, அவங்க ஊரு பத்தி கலக்கி இருக்காங்க.
எனக்கு ஹிஸ்ட்ரி, ஜாகர்பின்னா என்னன்னே தெரியாது. எனக்கு
தெரிந்த விதத்தில் எங்க ஊருபத்தி சொல்ரேன்.
லக்‌ஷ்மிம்மா,இப்படி சொல்லியே சூப்பரா ஊரைச்சொல்லி கலக்கிட்டீங்க.

Lakshmi said...

ஸ்ரீ ராம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

ஸாதிகா, ஹா ஹா ஹா நன்றிம்மா.

shunmuga said...

தாமிரபருணி ஆற்று நீரில் போகப் போகத்தான் நிறைய கழிவுகள் இப்பொழுது சேருகின்றன !

Unknown said...

ரஜினி வெளிச்சத்திற்கு மீண்டும் உள்ளது மற்றும் வில்லன்கள் வரை பூ l தும் குற்றம் முன் எப்போதும் போல. அவரை அவரது புதிய சின்னம் உள்ள பார்க்க இங்கே சொடுக்கவும்
http://bit.ly/n9GwsR

• » мσнαη « • said...

அடுத்த டூர் ப்ரோக்ராம் கல்லிடை பக்கம்தான்.........ஏற்கனவே சங்கரன் கோவில் ,தென்காசி வரைக்கும் போயிருக்கேன் ...நல்ல பசுமையான ஊர்கள் தான்...அறிமுகபடுத்தியதற்கு நன்றி...

Lakshmi said...

shunmuga அப்படில்லாம் இல்லியே.

Lakshmi said...

மோஹன் வாங்க கல்லிடைக்கு நல்ல
அனுபவங்கள் கிடைக்கும்.

Lakshmi said...

அன்னோன் வாங்க, வாங்க.

முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...

சகோ.லக்ஷ்மி,
தங்கள் மீது ஸலாம் உண்டாகட்டுமாக.
//...அதனால
அந்த ஊருக்கு கல்யாண்புரி என்று நாம கரணம் சூட்டினார்களாம்.
விட்டதாம். இது பெய்ர்காரணம். நாளாவட்டத்தில் கல்லிடைக்
குறிச்சியாகி விட்டது...//

---என்று சொல்லிவிட்டு, அது எப்படி

//க்ரேட் கல்லிடைக்குறிச்சி//

---என்றானது என்று பதிவை படித்து அறிந்து கொள்ளும்படி அருமையாக எழுதியுள்ளீர்கள் சகோ.

நன்றி.

நீங்கள் சொன்ன ஏரியாக்கள் எல்லாமே... தூத்துக்குடியில் நான் பணியாற்றிய சமயம் நான்கைந்து பைக்களில் நண்பர்கள் புடைசூழ நன்கு சுற்றிப்பார்த்துள்ளோம்.

Lakshmi said...

முஹம்மது ஆஷிக் வருகைக்கு நன்றிங்க. நீங்க எங்க ஊர் பக்கம்லாம்
வந்திருக்கீங்களா? கேக்கவே சந்தோஷமா இருக்கு.

அம்பாளடியாள் said...

//சிறியவர்கள் வேலை நிமித்தமாக வெளியில் போய் விடுவதால ஊர் பூராவும்
வயதான பெரியவர்களையே நிறைய பார்க்கமுடிகிரது.//

மிகவும் சரியாகச் சொன்னீர்கள் அம்மா .இது நம்ம நாட்டிலையும்விட
வெளிநாடுகளில் இன்று அதிகம் நிகழ்கிற ஒன்று .பாவம் ஒன்றுமே
அறியாத பெரியவர்களிடம் போகும்போது தமது பிள்ளைகளையும்
பராமரிக்கு பொறுப்பை ஒப்படைத்துச் செல்கின்றனரே இது எவ்வளவு
கொடுமையம்மா?...இதை பலமுறை நேரில்க்கண்டு நான் மனம்நொந்த
சம்பவங்கள் மறக்க முடியாத ஒன்று.இந்தநிலை மாறவேண்டும்.பிள்ளைகள்
தம்மைப் பெற்றவர்களுக்கு இச்சுமையைக் கொடுப்பதைக் கைவிட வேண்டும்.
தொடர்ந்தும் நல்ல பகிர்வை வெளியிடும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
அம்மா

RAMVI said...

கல்லிடைக்குறிச்சி பெயர் காரணம் நன்றாக விளக்கி இருக்கீங்கம்மா.படங்கள் அருமை. நல்ல பகிர்வு.நன்றி அம்மா.

Lakshmi said...

அம்பாளடியாள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

ரமா வருகைக்கு நன்றி.

M.R said...

கல்லிடைக்குறிச்சி பற்றி எழுதி உள்ளீர்கள் .

உங்கள் ஊரைப் பற்றித் தெரிந்து கொண்டேன் அம்மா .

நான் திருநெல்வேலி பக்கம் இட்டமொழி ,உவரி பக்கம் தான் வந்துள்ளேன் .

ஊருக்கான பெயர்காரணம் அருமையாக விளக்கியுள்ளீர்கள் அருமை அம்மா .
நன்றி பகிர்வுக்கு .

கோவை2தில்லி said...

கல்லிடைக் குறிச்சியின் சிறப்புக்களை அழகாக சொல்லியிருக்கீங்கம்மா.

எங்கள் வீட்டிலும் கல்லிடைக்குறிச்சி அப்பளம் உபயோகித்திருக்கிறோம்.
”அம்மாமி அப்பளம்” சரியாத் தெரியவில்லை.

Lakshmi said...

M.R. வாங்க. முதல்முறை வரின்ங்களா. அடிக்கடி வாங்க. நன்றி.

Lakshmi said...

கோவை2தில்லி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Jaleela Kamal said...

//எனக்கு ஹிஸ்ட்ரி, ஜாகர்பின்னா என்னன்னே தெரியாது//

தெரியாதுன்னு சொல்லிட்டு இப்படி சூப்பரா எழுதி இருக்கீங்கலே,

அப்பளம் தகவல் ஒகே

ஜோரா கை த்ட்டிட்டேன்ன்

Lakshmi said...

ஜலீலா வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

NARAYYANA ATHIMBER said...

kallidai ashrama photo pottadharku mikka nanri naan thamizhileye ezhutha asaippadukiren.eppadi enruthaan theriavillai. Narayana athimber.

Lakshmi said...

அதிம்பேர் உங்களை இங்க பாக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் அங்கைருக்கும்போதே உங்களுக்கு தமிழ்ல எழுத சொல்லிதடரனும்னு நினைச்சேன். டைம் சரியா அமையல்லே.

மாய உலகம் said...

உங்கள் பதிவு படங்களுடன் பார்க்கும்போது பசுமையான தென்றல் வீசும் இடத்திற்கு வந்தது போல் இருந்தது... நீங்கள் குறிப்பிட்டுள்ள மணிமுத்தாறும்,குற்றாலமும் வந்திருக்கிறேன்... ஆஹா..ஜோரா கை தட்டிட்டோம் விசில்களுடன்.பகிர்வுக்கு நன்றி அம்மா

Lakshmi said...

மாய உலகம் எங்க ஊர்பக்கம் வந்திருக்கீங்களா. சந்தோஷமா இருக்கு.

Ramani said...

பெயர்க்காரணம் தங்கள் சொல்லித்தான் தெரியும் அருமை
படங்களும் பதிவும் மிக மிக அருமை
தரமான பதிவு.வாழ்த்துக்கள்

Lakshmi said...

ரமணி சார், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

மாதேவி said...

கல்லிடைக் குறிச்சி நிறைவான பகிர்வு.

Lakshmi said...

மாதேவி, வருகைக்கு நன்றி.

துபாய் ராஜா said...

உங்கள் பூர்வீகம் கல்லிடைக்குறிச்சி என அறிந்து மிக்க மகிழ்ச்சி. நானும் உங்கள் ஊர்க்காரன்தான். பணிக்காக உலகமெங்கும் சுற்றினாலும் எனது உள்ளமும், உறவுகளும் ஊரிலேதான் இருக்கின்றன.நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தவணை முறையில் தாமிரபரணிக் கரையில் வாழ்ந்து வருகிறேன்.

Anonymous said...

பதிவில் சில விஷயங்கள் அருமையாகவும்
சில விஷயங்கள் சுவையாகவும்...
சில விஷயங்கள் மனதில் பதிக்கிறது
""திருனெல்வேலி இருட்டுக்கடை அல்வாவை
விட கல்லிடையில் தயாராகும்
லாலா கடை அல்வா சூப்பர் சுவையுடன்
இருக்கும்.""- திருநெல்வேலிகே அல்வா குடுக்கலாம்னு
பெருமையா சொல்லிருக்கிங்கமா ... நன்றி...

Lakshmi said...

துபாய் ராஜா நீங்களும் கல்லிடை என்பது அறிந்து ரொம்ப சந்தோஷமா இருக்கு எந்த இடத்தில் இருக்கீங்க கல்லிடையில்.

Lakshmi said...

சின்னத்தூறல் பதிவு போட்டு இவ்வளவு நாள் கழிஞ்சும்கூட வந்து பாராட்டி இருக்கீங்க நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .