Google+ Followers

Pages

Saturday, August 27, 2011

மெட்ராஸ், நல்ல மெட்ராஸ் (4)

 மறு நாகாலை 3மணிக்கே எழுந்து திருப்பதி பயணம். அது பத்தித்தான்
 இன்னொரு பதிவுல சொல்லிட்டேனே. இங்க மறுபடியும் வேண்டாம்.
 அதுக்கு அடுத்த நாள் வழ்க்கமான காலை வேளை ரசிப்பு. எழுத்துவேலை..
 பாலாஜி தரிசன் எனக்கு கிடைக்காதது, என்னை விட அவாளுக்களுக்குத்தான்
 மிகவும் கஷ்ட்டமா இருந்தது. சொல்லிண்டே இருந்தா. இன்னிக்கு பாத்ரூமில்
 குளிக்காம கிணத்தடிலயே குளிக்கலாம்னு நினைச்சேன். தகர வாளில தாம்பு
 கயிறு கட்டி தண்ணீ கிணத்லேந்து இறைத்து சுகமான குளியல்.கயிறு இழுத்து
 இழுத்து  உள்ளங்கை பூரா காச்சு போச்சு. ஒரே காந்தல். அடுத்த நா கிணத்துல
 தண்ணி இறைக்க மோட்டார் போட்டா. மேல டாங்க ரொம்பியதும் மேலேந்து
 ஓவர்ப்ளோ தண்ணி அருவி மாதிரி ஜோரா கொட்டிட்டு இருந்தது அன்றைய
 குளியல் அருவி குளியல்.(குளியல் பத்தில்லம் கூட பதிவுல எழுதனுமா?)
 அது ஒன்னுமில்லே. சரியான சிட்டி லைஃப், நாலு சுவத்துக்குள்ளயே குளித்
து குளித்து இந்தகிராமத்துக்குளியல் கொஞ்சம் புது அனுபவாமைருந்ததா அதான்.

 அதான்.அன்று கால் டாக்சி பூரா நாளுக்காகவும் புக் பண்ணீ மெட்ராஸ் சுத்திப்பாக்க
 தெரிஞ்ச சொந்தக்காராளை பாக்க கிளம்பினோம்.வெளில வேடிக்கை பாத்துட்
 டே வரனும்னு ட்ரைவர்பக்கத்ல முன் சீட்லயே உக்காந்தேன். பின்னாடி
 அவங்க கூட உக்காந்தா பேசிட்டே வருவாங்க வெளில பாத்து ரசிக்கவே
முடியாதே. சினிமாலயும், டி.வி, லயுமே பார்த்திருந்த இடங்களை நேரில்
 பார்க்க, பார்க்க ரொம்ப நல்லா இருந்தது. முதலில் ராஜா அண்ணாமலை
 புரத்தில் சாந்தோம்ரோடில் இருக்கும் ஒரு சொந்தக்காரா வீடுபோனோம்.
ரஹேஜா க்ரூப் வீடுகள். அவ்வளவு சூப்பாரா இருந்தது. காத்து வெளிச்சமும்
 நிரையவே இருந்தது. வீடும் வசதியா பெரிசாவே சகல வசதியுடனும் இருன்
தது. கொஞ்ச நேரம் அங்க பேசிட்டு கிளம்பினோம்.அங்கேந்து ரங்காச்சாரி
 பிரசாந்தி புடவைக்கடைகள்(கடை இல்லே,  கடல்கள்). படையெடுப்பு.
 நான் துணிக்கடைலாம் போவதே கிடையாது. குழந்தைகளே எல்லா பண்டி
கைகளுக்கும் எடுத்துடுவா.

புடவகளில் எத்தனை விதம், எத்தனை ரகம் கண்ணைக்கட்டுது. நான் அவாளுக்
கு, அவா எங்களுக்குன்னு புடவை கள் எடுத்தோம்.பல வெரைட்டி, பலகலர்கள் என்று புடவைகள் குவிந்து இருக்கு. அங்கேந்து கிளம்பி பள்ளிக்கரணை எனும்
 இடம்போனோம். தெரிஞ்சவாளைப்பாத்துட்டு திரும்ப வே று ஒருவரைப்
 பார்க்க செம்பாக்கம் போயி அவாளை பாத்துட்டுஇன்னும் சிலரை பாத்துட்டு வீடு திரும்ப இரவு 9 மணி ஆயிடுத்து. ஒவ்வொன்னு ஒவ்வொரு இடத்ல
இருக்கு. கார்ல சுத்தினாகூட அலுப்பாதான் இருந்தது. இரவு சாப்பாடு அவால்லாம் வழக்கம்போல சீக்கிரமே தூங்கினா. இன்னிக்கு எழுத்துவேலை
 நின்னு போச்சு.12 மணி வரை மொபைல் பாட்டு. ஹால் சோபாவில் தான்
 படுத்தேன். மறு நாலும் கால் டாக்சி வர சொல்ல் இருந்தா.காலை சீக்கிரமே
எல்லாரும் சாப்பிட்டு கிளம்பினோம். உனக்கு என்ன பிடிக்கும்னு கேட்டு
 கேட்டு பிடிச்சதை மணக்க மணக்க பண்ணிப்போடரா.எனக்குதான் என்ன பிடிக்கும்னே சொல்லத்தெரியல்லே.

முதலில் அண்ணா நகரில் தெரிஞ்சவா வீடுபோய் பேசிட்டுஒரு ப்ளாக் ஃப்ரெண்ட் பக்கத்தில் இருந்தார் அவர்கூட பேசினேன்.பாக்கலே.அங்கேந்து
 மெட்ராஸ்பூரா சுத்தினோம் ஈ.சி. ஆர் ரோடில் பயணம் செய்வது நல்லா
 இருந்தது.க்ராண்ட் ஸ்வீட்சில் சில ஐட்டங்கள் வாங்கினோம் நங்க நல்லூர்
 போயிஅங்குபேசி காபி குடித்து வழியில் நிறைய கோவில்களில் தரிசனம்
வெய்யில் ரொம்ப அதிகம்.குழாப்புட்டு பாத்திரம்புது விதகாபி பில்டர் எனக்கு
 கிஃப்டா தந்தா,. நானும் கொஞ்சம் கிப்ட் ஐட்டம் வாங்கி கொடுத்தேன்
 படப்பை போய்வந்தோம் . அனேகமா மெட்ராஸ்பூரா சுத்தினோம்னு தான்
 நினைக்கிரேன். வழியில் தென்பட்ட ஏர்டெல் கடைகளில் எல்லாம் ரோமிங்க்
ஆக்டிவேட் பத்தி கேட்டேன். யாருக்குமே அதுபத்தி சரியா தெரிஞ்சிருக்கலே.
 இது ரொம்ப  ஆச்சர்ய்மாஇருக்கு.போகும் எல்லார் வீடுகளிலும் காபி குடிச்சு
 குடிச்சு வயிரே ஒருமாதிரி ஆச்சு.

45 comments:

விக்கியுலகம் said...

இந்தப்பதிவு மூலம் ஒவ்வொரு மனிதரும் எப்போதும் குழந்தை(வெளிப்படையா காட்டாமல் இருந்தாலும்!) மனதுக்காரறேன்னு நீங்க சொல்ல வருவது புரிகிறது...பகிர்வுக்கு நன்றி!

சத்ரியன் said...

உலகம் சுற்றி வாலிபி-ன்னு சொல்லுங்க.

தமிழ்வாசி - Prakash said...

நல்ல பகிர்வு

M.R said...

ஆஹா தங்கள் பதிவை படிக்கும் பொழுது மெட்ராச சுத்தி பாக்க போறேன்...பாட்டு பாடத் தோனுது அம்மா.

அனுபவம் தொடரட்டும் ,தொடர்கிறேன்

M.R said...

thamil manam 3

அம்பலத்தார் said...

அந்த நாட்களில் மணியனின் இதயம் பேசுகிறது தொடர் தேடித்தேடிப் படிப்பதுபோல, உங்கள் பயண அனுபவங்களையும் ஆவலுடன் படிக்கமுடிந்தது வாழ்த்துக்கள். இந்த பேச்சுவழக்கு ஐயராத்து மொழியோ?

இராஜராஜேஸ்வரி said...

அழ்கான பகிர்வுக்கு பாராட்டுக்கள் அம்மா.

Madhavan Srinivasagopalan said...

எழுதும் விதம் இயற்கையாக இருக்கிறது..
தொடந்து எழுதுங்க அம்மா..

மகேந்திரன் said...

தமிழ்மணம் 5

தங்களின் பயண அனுபவங்கள்
படிப்பதற்கு இனிமையாக இருக்கு அம்மா.
சென்னையை சுத்தி பார்த்தது போல ஒரு உணர்வு....

RAMVI said...

சென்னைக்குள்ளேயே ஒரு கிராமத்து சூழ்நிலையை அனுபவிச்சிருக்கீங்கம்மா..
நல்ல பயண அனுபவங்கள். தொடர்ந்து உங்க கூட வருகிறேம்.
நானும் சென்னைக்கு போய் 6 மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. உங்க பதிவை படித்து கொஞ்சம் ஆறுதல் அடைகிறேன்.

G.M Balasubramaniam said...

சினேகிதியே சினேகிதியே முதல் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் 4 வரை படித்தேன். ஒவ்வொரு பதிவும் படித்ததும் நான் எங்கோ படிக்காமல் விட்டு விட்டேனோ என்று தேடினேன். எல்லாப் பதிவுகளுமே விட்டு விட்டது போல் ஒரு எண்ணம் .பிறகுதான் புரிந்தது பதிவே அவ்வளவுதான் என்று. இன்னும் கொஞ்சம் டீடெய்ல்டாக எழுதி இருக்கலாமோ.?வாழ்த்துக்கள்.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தமிழ்மணம் 7..

Rathnavel said...

நல்ல பதிவு.
நன்றி அம்மா.

மாய உலகம் said...

தமிழ் மணம் 9

மாய உலகம் said...

எலிக்கு பயந்து ஹாலில் சோபாவில் படுத்து விட்டிர்ர்களா....ஹா ஹா .... பதிவு படிக்க எதார்த்தமாக உள்ளது அனுபவங்களை அழகாக பகிர்ந்துள்ளீர்கள்

kavithai said...

நல்ல எளிமையான அனுபவங்கள். எளிமையாகவும் எழுதப்பட்டுள்ளது மிக மிக ரசித்தேன் நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

Anonymous said...

ரசித்தேன்...அருமை...ரெவெரி

வெங்கட் நாகராஜ் said...

இயல்பான எழுத்து நடை... உங்கள் கூடவே இருந்து உங்கள் பேச்சினைக் கேட்பது போன்ற உணர்வு....

தொடருங்கள் உங்கள் பயணம் குறித்த பகிர்வுகளை...

Lakshmi said...

விக்கி உலகம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

சத்ரியன், ஆமாங்க உலகம் சுற்றும்
கிழவிதான். ஹ ஹா

Lakshmi said...

M.R. வருகைக்கு நன்றி

Lakshmi said...

அம்பலத்தார், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.அமா இது ஐயர் பேச்சு வழக்குதான். தமிழ் எத்தனை தமிழ்.

Lakshmi said...

இராஜ ராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

Lakshmi said...

மாதவன், வருகைக்கு நன்றி

Lakshmi said...

மகேந்திரன் நன்றிங்க.

Lakshmi said...

ரமா, வருகைக்கும் நன்றிம்மா.

Lakshmi said...

பாலசுப்ரமணியம் ஐயா வருகைக்கு நன்றிங்க. இதுவே பலபேருக்கு நீள் பதிவா தோனுதே ஐயா. இன்னும் டீடெயிலா எழுதினா எப்படி?

Lakshmi said...

கருன், வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி

Lakshmi said...
This comment has been removed by the author.
Lakshmi said...

மாய உலகம், வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி

Lakshmi said...

கவிதை, வேதா. லங்கா திலகம், வரு
கைக்கு நன்றி

Lakshmi said...

ரெவரி, நன்றி

Lakshmi said...

வெங்கட் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Sumitra srinivasan said...

maami
super eliku kooda ungalai romba pidichirukku


usual a ellorum sollara comment
madras manusha polladava
nallavalum irukkom
unga kitte niraya kathukannum
bye maami
sumi

Lakshmi said...

சுமி என் பதிவெல்லாம் ரெகுலரா படிக்கிரயா. பொல்லாதவான்னு யாருமே கிடையாதும்மா. எல்லாருமே நல்லவாதான் . நாம இன்னொருமுறை
ச்ந்திச்சிருக்கலாம். முடியாமபோச்சு பாக்கலாம்.

கவி அழகன் said...

அருமையான பதிவு
சுவாரசியம்
அழகு

வாழ்த்துக்களும் வாக்குகளும்

Lakshmi said...

ரத்ன வேல் ஐயா வருகைக்கு நன்றி

மாதேவி said...

கிணற்றுக்குளியல் ,அருவிக்குளியல் எல்லாம் ரசித்தோம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகான அனுபவப்பகிர்வுக்கு பாராட்டுக்கள். நன்றிகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகான அனுபவப்பகிர்வுக்கு பாராட்டுக்கள். நன்றிகள்.

அம்பாளடியாள் said...

அருமையான பகிர்வு .எலிகடிச்சதா உங்களுக்கு?...இப்ப
சரி ஆகிவிட்டதா?.......பாத்தும்மா உடம்பக் கவனியுங்க .
உங்கள் அனுபவப் பகிர்வு படிக்கும் போதே நாங்களும்
உங்க வீட்டுப் பிள்ளைகள்போல் ஆகிவிட்டோம் .இதுக்கெல்லாம்
வலைத்தளங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் .
நன்றி அம்மா பகிர்வுக்கு .

Lakshmi said...

கோபால் சார் வருகைக்கு நன்றி

Lakshmi said...

அம்பாளடியாள் வருகைக்கு நன்றி. கண்டிப்பா
நீங்க சொல்வது போலவலைத்தளங்களுக்கு நன்றிதான் சொல்லனும்.

நிரூபன் said...

கிராமத்துக் குளியலில் மனதைப் பறி கொடுத்து, சென்னையின் புற நகர் அழகினை ரசித்து மகிழ்ந்த அழகினையெல்லாம் நீங்கள் பதிந்துள்ள போது,
எனக்கும் சென்னைக்கு வரவேண்டும் எனும் ஆவல் எழுகின்றது.

கோவை2தில்லி said...

கிணத்தடி குளியலா!! பிரமாதம்.
தொடர்ந்து வந்துட்டே இருக்கிறோம்.

என்னை ஆதரிப்பவர்கள் . .