Google+ Followers

Pages

Friday, August 19, 2011

மெட்ராஸ், நல்ல மெட்ராஸ்

ஊருக்கெல்லாம் போய் வந்து அது பத்தி ஏதாவது சொல்லலைன்னா எப்படி?
எனக்கு மெட்ராஸ்னுதான் சொல்லத்தான் வருது. சென்னைனு சொல்லவே வரலே.
  எனக்கு ஒரு குணம், என் பசங்க வீட்லகூடவே போயி ஒரு நாள் தான் தங்க
 முடியும். சனிக்கிழமை சாயங்காலம் போனா,சண்டே எல்லாரும் வீட்ல இருப்பாங்க. ஒரு நா பூரா அவங்க கூடவே இருந்துட்டு அன்னிக்கு சாயங்காலமே
 கிளம்பிடுவேன் . அப்ப்டி இருக்கும்போது தூரத்து சொந்தக்காரங்க வீட்டில்
 எல்லாம் போயி ஒரு வாரம் 10 நாட்கள் எல்லாம் என்னால தங்க முடியுமான்னு
 ஒரே யோசனைதான் முதல்ல இருந்தது. என் ஃப்ரெண்ட்( அதான் என் அத்தை)
 ரொம்ப கூப்பிட்டா. வாடி அப்படியே நம்ம ஊர்பக்கமும் போயிட்டு வரலாம்னா. அவகூட கிளம்பினே. மும்பைலேந்து  ஒரு கல்யானத்தில் கலந்துகிட்டு
 அடுத்த நாளே மெட்ராஸ் கிளம்பினோம் இருவரும்.காமராஜர் ஏர் போர்ட்டில்
 இறங்கும் போதே மெல்லிசா தூறல் எங்களை வர வேற்றது.டாக்சி பிடித்து
 தாம்பரம் போனோம். வழியில்  தென்பட்ட காட்சிகளை ரசித்துக்கொண்டே
 அரைமணி நேர ப்பயணம் சுகமா இருந்தது. எல்லா பஸ் களிலும் தமிழ்
 எழுத்துக்கள் கடைகளிலும் தமிழ் எழுத்துக்கல் பாக்கவே நல்லா இருந்தது.
 ஆனா அந்த தமிழ் புரிஞ்சுக்க கஷ்ட்டமா இருந்துச்சு. மிதவை பேரூந்துன்னு
 ஒரு பஸ் பின்னாடி எழுதி இருந்தது. அப்படின்னா என்னன்னு ட்ரைவரிடம்
 கேட்டேன். அவரால சிரிக்கத்தான் முடிந்தது,எனக்கு விளக்கம் சொல்லத்
 தெரியல்லே.கடைகளிலும் தமிழ் விளம்பர போர்டுகள் புரியாத தமிழில்.
 ஏர் போர்ட்டில் இறங்கியதும் வெல்கம்சென்னைன்னு செல்போனில் மெசேஜ்
 வந்தது. ஏர்டெல் மொபைல். அதன் பிறகு அது ஒர்க் பண்ண்வே இல்லே.
மஹாராஷ்ட்ரா விட்டு தமிழ் நாடு வந்ததால ரோமிங்க் ஆக்டிவேட் ஆகல்லே.
அஙக் இருந்த 15 நாளும் ஏர்டெல் மொபைல் ஒர்க் பண்ணவே இல்லே.

யாரோடும் பேசமுடியல்லே. நல்ல வேளையா இன்னொரு மொபைலும்
 வச்சிருந்தேன். அது  டொகோமா வோடது. அது ஒர்க் பண்ணிச்சு. அது எப்படி?
 ரெண்டுமே மஹாராஷ்ட்ரா சிம்தான். சரி இதுவாவது ஒர்க் பண்ணுதேன்னு
 அதிலேந்து எல்லாருக்கும் கால் பண்ணி பேசினோம். எல்லாரிடமும் ஏர்டெல்
 நம்பர்தான் கொடுத்திருந்தோம். டொகோமோ நம்பர் கொடுக்கலே.மறுபடி
 எல்லாருக்கும் டொகோமோ நம்பர் கொடுத்து அதில் கால் பண்ண சொன்னேன். அந்த டாக்சியில் எங்க கூட ஒரு ஃப்ரெண்டும் அவ கணவரும்
 கூடவே வந்தாங்க. அவங்க டாக்சி ஏதும் ஏற்பாடு பண்ணிக்கலே. அவங்க என்
 ப்ளாக் ரசிகர்கள். நாங்க போகும் வழியில்தான் அவங்க வீடு இருந்தது.
பெருங்களத்தூர்ங்க்ர இடத்தில். நாங்க அவங்க வீட்டுக்குள்ள வந்து ஒரு
 வாய் காபி யாவது குடிச்சுட்டுத்தான் போகணும்னு அன்பு கட்டளை இட்டாங்க.                         
   நல்ல கிராமத்து சீனரிகள்.  அவங்க வீட்டு வாசலில் அழகா சின்னதா ஒரு பிள்ளையார் கோவில் கட்டி இருந்தாங்க. சுத்திவர தென்னை வாழை மா
 மரங்கள்.இவங்க முதல் மாடியில் இருந்தாங்க. முதல்ல அவங்க வீடு போ
 நோம். அதுக்குள்ள நாங்க போக இருந்த சொந்தக்கார்ங்க 2,3 வாட்டி போன்
 ப்ண்ணிட்டாங்க. எங்க இருக்கீங்க. நேரமாச்சேன்னு. இதோ வந்துண்டே
 இருக்கோம்னு சொல்லிட்டு இவங்க வீடு போனோம். விஸ்தாரமான பெரிய
 ஹால், நடுவில் பெரிய மர ஊஞ்சல். இருந்தது. அது பாத்ததும் நான் குழந்தை
 போல ஊஞ்சலில் ஏறி உக்காந்து ஆட ஆரம்பிச்சேன். அவங்கல்லாம் கேலி
 ப்ண்ணினாங்க.வீடை சுத்திகாட்டினாங்க. கிச்சன் வாசலில் துவார பாலகர்
 போல ரெண்டு ஃப்ரிட்ஜ் இருந்தது. ஒன்னு பூ பழம் காய் வைக்கவாம். இன்னொன்னு பால் தயிர் சமைக்கு பண்டங்கள் வைக்கவாம். அங்கே காபி
 வீட்டு மரத்தில் பறித்த மாம்பழம் எல்லாம் கொடுத்து உபசரிச்சாங்க.
 7 மணிக்கு மேல அங்கெந்து கிளம்பி தாம்பரம் 7.30-க்கு போனோம். வாசலி
லேயே அவங்க காத்துகிட்டு நின்னாங்க. அன்பாக கட்டி அணைத்து வார்ம்
 வெல்கம் கொடுத்தாங்க.
                                இரவு நேரம் எதுவும் சரியா தெரியல்லே. வீட்டுக்குள்ள போனோம். பழைய
 கால வீடு. நுழைஞ்சதுமே நீள பெரிய காரிடார் போல ஒரு ஹால். சிமெண்ட்
 தரை.ஜில்லுனு இருந்தது. வழக்கமான விசாரிப்புகள்.சிரிப்பு பேச்சுகள்.
 அந்தவீட்ல 4 வயதான பெண்மணிகள் தான் இருக்காங்க. ஆண் வாசனையே
 இல்லாத அல்லி ராஜ்யம்தான்.80+, 70+, 60+,50+ வயதுகளில் பெண்கள் இருந்தா.
 இப்ப நாங்க ரெண்டு பேரும் சேந்துண்டோம்.பழைய கதைகள்பேசி சிரித்து
 இரவு சாப்பாடு. அன்று ஏகாதசியாம் அந்தவீட்டு பெண்கள் பட்டினியாம்  எங்க
 இருவருக்கும் சாப்பாடு உபசாரம்.

71 comments:

அரவிந்த் குமார்.பா said...

நல்ல பதிவு.. அம்மா..!!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அருமையான அனுபவ பகிர்வும்மா

ஈரோடு தங்கதுரை said...

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே..... இந்த நாள் அன்று போல் இல்லையே ....... இல்லையே

கோமதி அரசு said...

ஊஞ்சல் ஆசைக்கு வயது என்ன அந்தக் கால ஊஞ்சலைப் பார்த்தா ஆசை தான் ஆட.

பதிவு நல்லா இருக்கு.

ஆமினா said...

//காமராஜர் ஏர் போர்ட்டில்//
மாமி..........
சென்னை மீனம்பாக்கம் ஏர்போர்ட் தானே சொல்றீங்க...
அண்ணா பன்னாட்டு விமானநிலையமாக்கும் :)

அம்பாளடியாள் said...

ஆகா மீண்டும் உங்கள் அனுபவப் பகிர்வா!.....அருமை
அருமை தொடருங்கள் பாராட்டுக்கள் உங்களுக்கு .அருமையாக மிக நேர்த்தியாக உங்கள் நினைவுகளைப்
பகிரும்விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது .நன்றி அம்மா
தங்களின் தொடர் அனுபவப் பகிர்வுக்கு .

அம்பாளடியாள் said...

இரண்டு ஓட்டுகள் பரிசாகப் போட்டுவிட்டேன்........

தமிழ்வாசி - Prakash said...

நல்ல அனுபவம். பகிர்வுக்கு நன்றி

விக்கியுலகம் said...

நல்ல பதிவு.. அம்மா நன்றி!

Rathnavel said...

நல்ல பதிவு.
பதிவர் சந்திப்பு.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நினைவுகளுக்கு நன்றி,,

HVL said...

நல்லா ரசிச்சு படிச்சேன்!

கோவை2தில்லி said...

சிறு தூறலுடன் கூடிய பயணம் பிரமாதமாய் இருக்கும்.

ஊஞ்சல் ஆசை என்றுமே தீராது.

நல்ல பகிர்வும்மா.

RAMVI said...

நல்ல பயண அனுபவம்.தொடர்ந்து எழுதுங்க அம்மா ரசிக்கிறோம்.

மாய உலகம் said...

அனுபவ பகிர்வு அருமை அம்மா

மனோ சாமிநாதன் said...

பயண அனுபவங்களை வழக்கம்போல அழகாக சுவை பட எழுதியிருக்கிறீர்கள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஊஞ்சலில் அமர்ந்து நானும் ஆடுவது போல கற்பனை செய்துகொண்டு தங்களின் இந்தப் பதிவைப்படித்தேன்.

அருமையாக செல்கிறது உங்கள் பயணக்கட்டுரை. தொடருங்கள்.

நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
vgk

வெங்கட் நாகராஜ் said...

நமது சென்னையில் எழுதி இருக்கும் தமிழ் வார்த்தைகள் புரிவதில்லை...

பயணம் பற்றி எழுத ஆரம்பித்தது நன்றாக இருக்கிறது அம்மா. தொடருங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

நமது சென்னையில் எழுதி இருக்கும் தமிழ் வார்த்தைகள் புரிவதில்லை...

பயணம் பற்றி எழுத ஆரம்பித்தது நன்றாக இருக்கிறது அம்மா. தொடருங்கள்.

M.R said...

அன்பான அனுபவங்கள் .

நன்றாக ரசித்துள்ளீர்கள் அம்மா .

அதனை எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி .

M.R said...

தமிழ் மணம் 7

அமைதிச்சாரல் said...

பயணக்கட்டுரைகளின் சுவாரஸ்யமே தனிதான். ஊஞ்சல்ல உங்க கூட ஆடினேனே :-)

கோகுல் said...

அனுபவம் அருமை.
பகிர்வுக்கு நன்றி!

இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

ஜெய்லானி said...

நான் சமீபத்துல ஊர் வந்த போதும் என்னுடைய இரெண்டு சிம் (துபாய் ) தமிழ்நாட்டுல வேலை செய்யல . இன்னும் குழம்பிகிட்டு இருக்கேன் .


அழகான அனுபவப்பதிவு :-)

மாய உலகம் said...

thamilmanam 8

Lakshmi said...

அரவிந்த் குமார், வருகைக்கு நன்றி

Lakshmi said...

சதீஷ், வருகைக்கு நன்றி.

Lakshmi said...

ஈரோடு தங்கத்துரை வருகைக்கு நன்றி
ஆமா இந்த நாள் அன்றுபோல்
இல்லேதான்.

Lakshmi said...

கோமதி அரசு, வருகைக்கும்
கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

ஆமி,டொமஸ்டிக்ல காமராஜர்
டெர்மினல்னும், இண்டெர்
நேஷனல்ல அண்ணா டெர்
மினல்னும் இருக்கு.

Lakshmi said...

அம்பாளடியாள், வருகைக்கும்
கருத்துக்கும் ஓட்டுக்களுக்கும்
நன்றி.

Lakshmi said...

பிரகாஷ், வருகைக்கு நன்றி.

Lakshmi said...

விக்கி உலகம், வருகைக்கு
நன்றி.

Lakshmi said...

ரத்னவேல் ஐயா, வருகைக்கு
நன்றிங்க.

Lakshmi said...

கருன் வருகைக்கு நன்றி.

Lakshmi said...

H.V.L.வருகைக்கு நன்றி.

Lakshmi said...

கோவை2தில்லி, வருகைக்கு நன்றி

Lakshmi said...

ரமா, வருகைக்கு நன்றி.

மாதேவி said...

இனிய பதிவு.

Lakshmi said...

மாய உலகம் ராஜேஷ், வரு
கைக்கு நன்ரி.

Lakshmi said...

மாய உலகம் ராஜேஷ், வரு
கைக்கு நன்ரி.

Lakshmi said...

மனோ மேடம், வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோபால் சார், வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி

Lakshmi said...

வெங்கட், வருகைக்கு நன்றி.

Lakshmi said...

M.R. வருகைக்கு நன்றி.

Lakshmi said...

அமைதிச்சாரல் வருகைக்கும்
கருத்துக்கும் நன்றி.சுட்டிக்காட்டி
திருத்திக்கொள்ள உதவியதற்கும்
மிகவும் நன்றி

Lakshmi said...

கோகுல், வருகைக்கு நன்றி.

Lakshmi said...

ராஜேஸ்வரி, வருகைக்கு
நன்றி.

Lakshmi said...

ஜெய்லானி, நீங்களும் இந்த
பிரச்சினையை சந்திதீங்களா?
எவ்வள்வு கஷ்ட்டம் இல்லியா?

Lakshmi said...

மாய உலகம் ஓட்டுக்கு நன்றி

kavithai said...

நல்ல அனுபவப் பகிர்வு. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

Reverie said...

அருமையான அனுபவ பகிர்வும்மா... எனக்குப்பிடிக்காத ஊரை பிடிக்க செய்துவிடுவீர்கள் போல...

புலவர் சா இராமாநுசம் said...

சுவை மிக நன்றே-எடுத்துச்
சொன்னீர் நன்றே
புலவர் சா இராமாநுசம்

Lakshmi said...

kavithai, thanks.

Lakshmi said...

reverie, thanks.

Lakshmi said...

புலவர் சா.இரானுசம், வருகைக்கு நன்று ஐயா

அந்நியன் 2 said...

அருமையான தொடர் இல்லை..இல்லை...பகிர்வு

தோழிகளின் ஃபோட்டோக்களை பார்க்கும் போது டீவியில் வருகிற(சீரியல்)மாமி போலவே இருக்கு.

வாழ்த்துக்கள்.

Lakshmi said...

அந்நியன்2 வருகைக்கும் கருத்
துக்கும் நன்றி

Sumitra srinivasan said...

maami
thanks
romba nanna ezhudi irukkel unge madras visit pathi
naan iruppadum tambaram than
unga friends veedu engathil irundu
1 km than
pl continue

Lakshmi said...

சுமி, வருகைக்கு கருத்துக்கும் நன்றி

ஸ்ரீராம். said...

பாதியில் நிற்கிறதே...தொடருமா?

Lakshmi said...

ஸ்ரீ ராம் தொடரும்தான்.

கவி அழகன் said...

சுவாரசியமா எழுதி உள்ளீர்கள்

Lakshmi said...

கவி அழகன் நன்றி.

Ramani said...

பயண அனுபவங்களை அருமையாகப்
பகிர்ந்த மாதிரி அனுபவமிக்க நண்பர்களுடன்
பகிர்ந்து கொண்ட பயனுள்ள விஷயங்களையும்
பதிவர்களுடன் பகிர்ந்து கொண்டால் அனைவருக்கும்
பயனாக இருக்குமே
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Lakshmi said...

ரமணி சார் வருகைக்கும்
கருத்துக்கும் நன்றி.

Jaleela Kamal said...

மெட்ராஸ் ல எங்க வந்து தங்கினீங்க. மைலாப்பூரா>

லக்‌ஷ்மி அக்கா நானும் மெட்ராஸ் தான்

Lakshmi said...

ஜலீலா தாம்பரம் வந்தேன்மா.
நீங்க எங்க இருக்கிங்க.திரும்ப
நவம்பரில் வரேன். சொல்லுங்க
சந்திக்கலாம்.

மகேந்திரன் said...

அருமையான அனுபவ பகிர்வு அம்மா

நிரூபன் said...

பழங்கதைகள் பேசி, இனிமையாய் மகிழ்ந்திருந்த நினைவு மீட்டல்களை, அனுபவப் பதிவாகப் பகிர்ந்திருக்கிறீங்க.
அடுத்த பாகத்தினைப் படித்து விட்டு வருகிறேன்,

என்னை ஆதரிப்பவர்கள் . .