Google+ Followers

Pages

Tuesday, August 16, 2011

சினேகிதியே,,,, சினேகிதியே.......
                             
 நானும் என்ஃப்ரெண்டும் கடந்த 65- வருடங்களாக நெருங்கிய தோழிகள்.
  நாங்க, பிறந்தது, வளர்ந்தது, ஒத்துமையா , கட்டிப்பிடித்து சந்தோஷங்கள்
 பட்டது அடிச்சு பிடிச்சுண்டு சண்டை போட்டுண்டது எல்லாமே ஒரே வீட்டில்.
  ஆச்சரியமா இருக்கு இல்லியா. அவ வேர யாரும் இல்லீங்க.என் அப்பாவின்
 கடைசி தங்கைதான் அவ. எங்க ரெண்டு பேருக்குமே ஒரு 6- மாசம்தான் வித்
 யசம் வயசுல. அவளுக்கு அவ அம்மாஅவளோட4வயசுலேயேஇறந்துட்டாங்க.
 என் அம்மாதான் அவங்க 7- குழந்தைகளுடனும் அவளையும் 8-வதுகுழந்தையா
 நினைத்து வளர்த்தாங்க.அம்மா இல்லாத குழந்தைன்னு அவளுக்கு அதிகச்
சலுகைகள் காட்டுவாங்க. நாங்க இருவரும் கிட்டத்தட்ட ஒரே வயசுன்னால
எங்களுக்கு எல்லாமே சமம்மா தான் செய்வாங்க. பாக்கப்போனா அவளுக்கு
 ஒரு படிமேலாகவே கவனம் கொடுப்பாங்க. நகையோ, துணிமணியோ எல்லாமே எங்க இருவருக்கும் ஸேமா எடுப்பங்க. ட்வின்ஸ் மாதிரி ஒன்னுபோல அலங்காரங்கள் செய்வாங்க. எங்க இருவரையும் எங்கயுமே
 தனியே பாக்க முடியாது. சேர்ந்தாப்போலவே சுத்துவோம்.                               

 ஊர்லசின்ன வயசுல எங்களைப்பார்க்கிரவங்க பஞ்ச பாத்திரம், உத்தரனி
 ந்னுதான் கூப்பிடுவாங்க.அதிக செல்லம் அவளுக்கு கொடுத்ததால அவகொஞ்சம் பிடிவாதக்காரியா வளர்ந்தா. அவ சொல்ரதத் தான் எல்லாரும்
 கேக்கனும்னு டாமினேட் பண்ணுவா.ஆனா மிகவும் அன்பானவ. பாசமானவ.
 அவளைச்சுற்றி எப்பவும் மனிதர்கள்கூட்டமா இருந்துண்டே இருக்கணும்.
 எல்லாருடனும் கலகலப்பாகப் பேசி சூழ் நிலையே கலகலப்பாக ஆக்கிடுவா.
 ஆனா நான் சின்ன வயசிலேந்தே கொஞ்சம் ஒதுங்கியே இருப்பேன். கலகல்ப்
 பால்லாம் பேசவே மாட்டேன். கோவம்னா என்ன வென்றே தெரியாது.வீடு
 ஜாயின் ஃபேமிலி அதனால எப்பவுமே குழந்தைகள் , பெரியவான்னு வீடு
 எப்பவுமே கல்யாண கலகல்ப்புடனே இருக்கும்.அவளைப்பொல யாருடனும்
 கல்ந்து பழக மாட்டேன். இருவருக்குமே எதிர் எதிர் குணங்கள் தான். ஆனாலும்
 எதிர், எதிர் காந்தம்தானே ஈர்க்கும். அதுபோல எங்க இருவருக்கும் மத்தில
 கண்ணுக்குத்தெரியாம ஒரு நெருக்கம் எப்பவுமே இருந்துண்டு இருந்தது.                             

 சொந்தம் என்பதை விட நெருங்கிய தோழியாகவே இருவரும் பழகிவந்தோம்.
 எந்தவிஷயம் பற்றியும் பேசிப்போம். எந்த ஃபீலிங்க்ஸையும் ஷேர் பண்ணிப்
 ப்போம். நான் இல்லாம ஒரு நிமிஷம் கூட அவ இருக்கமாட்டா.வீட்டுவேலை
 கள் , சமையல் கற்றுக்கொள்ள அவளுக்கு மிகவும் விருப்பம் இருந்தது.
 என் அம்மா விடம் கேட்டு, கேட்டு ஒன்னொன்னா தெரிஞ்சுண்டா. நான்
 கத்துக்கலே. ஒன்லி திங்க் அவளுக்கு பள்ளிக்கூடம் செல்வதிலோ படிப்பிலோ
 விருப்பம் இருந்ததெ இல்லே. அதனால என்னையும் படிக்க விடலை. ஹா, ஹ
அப்படியே குழந்தைப்பருவம் முடியும் முன்பே இருவருக்கும் திருமண்ம்
 நடந்தது.ஒரே சமயம். அவ பாம்பே, போனா, நான் பூனா போனேன். அப்பகூட
 என்னைப்பிரியனுமேன்னு அவதான் விசிச்சு விசிச்சு அழுதா. எனக்கு ஏனோ
 அழுகையே வல்லே. என்மனதிலும் அவமேல அன்பு பாசம் எல்லாம் இருந்தது
 காட்டிக்கத்தெரியல்லே. அதான் உண்மை.

ஒரெசமயம் குழந்தை பிறப்பு. ஒரே சமயம் ரெண்டு பேர் கணவன் மார்களும்
 இறந்ததுன்னு என்று பலவிதங்களிலும் எங்க வாழ்க்கை பின்னி பிணைந்தே
 இருந்தது. ஆனா ஒரு சோகம் என்னன்னா எங்க இருவர்கணவன்மார்களுக்கும்
 மத்தியில் ஒரு தவரான புரிந்துகொள்ளல் ஏற்பாட்டு விட்டது. எப்படி? ஆண்ட
 வனுக்குத்தான் தெரியும். நாங்க இருவருமே அவர்களை மீறி பாத்துக்கவோ
 பெசிக்கவோ லெட்ட்டர் போட்டுக்கவோகூட முடியாமல் ஆச்சு,20- நீண்ட
 வருடங்கள் எங்க பிரிவு. அவ அமெரிக்கவில் பசங்ககூட போயி செட்டில்ஆனா
 நான் மும்பையில். குழந்தைகள செட்டிலாகி அவரவர் குடும்பம் குழந்தைகள்
 என்று செட்டிலான பிறகு எங்க நட்பு மீண்டும்துளிர்விட்டது.அமெரிக்காலேந்து
 மும்பை வந்து இத்தனை நாள் பிரிந்ததை எண்ணி கட்டிப்பிடிச்சு அழுது
 சிரித்து எல்லாம் பண்ணினோம். எங்க நட்பு மீண்டும் புதுப்பொலிவுடன்
 துளிர்த்ததைக்கொண்டாட வேண்டாமா/ அதுக்குத்தான் நாங்க பிறந்த
 ஊரான கல்லிடைக்கு நாங்க இருவரும் போனோம்.

25- வருடங்கலௌக்குமுன் பார்த்தகல்லிடையை அங்கே பாக்க முடியல்லே.
 எல்லாமே மாறி இருந்தது.எங்க வீட்டுக்குள்ள போனோடனே கணகள்
 முட்டிண்டு அழுகை பொத்துகிட்டு வந்தது. இருவருக்குமே தொண்டை அடைக்
 க்குது. பேச்சே வரலே. ஒவ்வொரு ரூமா போயி தொட்டு தடவிப்பார்த்து
 இங்கதானே இதிப்பண்ணினோம், அங்க்தானே அதைப்பண்ணினோம் என்று
 பழைய நினைவுகளில் மூழ்கிட்டோம்.தாமிரபரணிபோயி ஆசை தீர நீஞ்சி
 மகிழ்ந்தோம்.தண்ணியைவிட பாறைகள் தான் அதிகம் இருந்தது. இப்போ எல்லார் வீடுகலிலும் ஆற்றிலிருந்து குழாய் போட்டு தண்ணீர் எடுக்கிரார்கள்.
எல்லார் வீட்டுக்குள்ளுமே தாமிரபரணி கொட்டட்டிண்டு இருக்கா.அதனால்
 ஆற்றில் தண்ணீரே இல்லை.கோவில் கோவிலா போனோம். அங்கயும்
 பழைய நினைவுகள் கூடவே வந்தது.பெருமா கோவிலில் கருட சேவை, சிவன்கோவிலில் மண்டல அபிஷேகம் என்று செய்து பூஜைகளில் கல்ந்து
 கொண்டோம். ஓரள்வு திருப்திதான்.

சென்னையிலு சொந்தக்காரர்கள் வீட்டில் தங்கி எல்லா இடங்களும்சுற்றி
 நோம். இருவருமே ஒருவரை விட்டு ஒருவர் ஒரு நிமிஷம் கூட பிரியாம
 கூடவே இருந்து பழையகதைகள்பேசி சிரித்து அழுது சின்னவயசுக்குள்ளேயே
 போய்வந்தோம்.உர்ர் சுற்றி வந்ததும் அவ அமெரிக்க போயிட்டா. அங்க அவ
 க்ரீன்கார்ட் ஹோல்டர்/ அமரிக்கா சிட்டிசன். நான் வழக்கம்போல மும்பை
வாரத்துக்கு ரெண்டு முறை போன் பண்ணிடுவா. டைம் டிபரண்ட் இருப்பதால அவபோன் எனக்கு இரவு 11 மணிக்குதான் வரும். அப்பவும் ஒரு அரைமணி
 நேரமாவது பேசிடுவா.மறுபடியும் எங்க க்ளோஸ் ஃப்ரெண்ட்ஷிப் தொடங்கி
 விட்டது.இருவர்க்குமே அதில் ரொமவே சந்தோஷம்தான்,.

  இன்னொரு விஷயதிலும் ரொம்பவே ஒத்துமை. இருவருமே ஹார்ட் பேஷண்ட் தான். அவ பைபாஸ் பண்ணீகிட்டா, நான் பண்ணீக்கலே.

60 comments:

Thanai thalaivi said...

அம்மா நான் தான் first,

மிக அற்புதமான பதிவு. படித்து நெகிழுந்து போனேன்.

RAMVI said...

உங்க நட்பை பற்றி மிக அருமையாக சொல்லியிருக்கீங்க அம்மா. அந்த காலத்து படங்கள் ரொம்ப அழகா இருக்கு.

சி.பி.செந்தில்குமார் said...

முதல் வாசகன்

சி.பி.செந்தில்குமார் said...

இருவரும் சகோதரிகள் போலவே ஃபோட்டோவில் இருக்கீங்க..

வெங்கட் நாகராஜ் said...

உங்களது நல்லதோர் சினேகிதி பற்றி இப்பகிர்வு மூலம் தெரிந்து கொண்டோம் அம்மா. எத்தனை வருடம் ஆனாலும் தொடர்ந்து இருப்பது தானே உண்மையான நட்பு...

நல்லதோர் பகிர்வுக்கு மிக்க நன்றிம்மா.

ஸாதிகா said...

அத்தையே ஸ்நேகிதியாக...விவரிப்பு அருமை லக்‌ஷ்மிம்மா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அத்தைக்கும் மருமாளுக்கும் ஆறு மாதமே வித்யாசம் என்பது இப்போதெல்லாம் ஆச்சர்யமான விஷயமாகும். அந்த நாட்களில் இதெல்லாம் மிகவும் சகஜமாகும்.


மலரும் பழைய நினைவுகளும், கருப்பு வெள்ளைப்புகைப்படங்களும் அருமை.

கவி அழகன் said...

இப்படி ஒரு உறவு கிடைக்க உங்க நண்பி இல்லா உங்க உடன்பிறப்பு கொடுத்துவைக்கணும்

பலே பிரபு said...

ஒற்றுமை மேல் ஒற்றுமை.

முதல் கருப்பு வெள்ளைப் படத்தில் நீங்கள் இருவரும் எங்கே உள்ளீர்கள் அம்மா?

கோவை2தில்லி said...

அத்தைக்கும், மருமாளுக்கும் இடையே ஏற்பட்ட நட்பை எண்ணி வியக்கிறேன். படங்கள் அழகா இருக்கும்மா. தொடருங்கள் உங்கள் நட்பை.

athira said...

லக்ஸ்மி அக்கா... என்ன ஒரு நட்பு.. உறவு.... இப்படி நட்பு எல்லோருக்கும் கிடைக்காது.

இடையில் பேச முடியாமல் போனது... எவ்வளவு துன்பத்தை ஏற்படுத்தியிருக்கும்...

ஒன்றை இழக்கும்போதுதான் இன்னொன்றைப் பெற முடியும் என்பார்கள்... அது உங்கள் வாழ்வில் நிஜமாகியிருக்கு....

கணவர் கிடைத்ததும் நட்பை இழந்தீங்க..

கணவரை இழந்த கவலையை மறக்கப்பண்ண மீண்டும் நட்பைத் தந்திருக்கிறார் ஆண்டவன்... இப்படித்தான் மனதை தேற்ற வேண்டும்.

HVL said...

மிகவும் நெகிழ்வாக இருந்தது இந்த பதிவு. உங்கள் தோழமைக்கு வாழ்த்துகள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அற்புதம்..நீங்க இன்று இணைந்து ஊர் சுற்றிய விசயம் படித்து மிக்க மகிழ்ச்சி..

Madhavan Srinivasagopalan said...

உங்கள் நட்பு, பாசம், பந்தம் கண்டு.. மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது..

Amutha Krishna said...

ஆஹா அத்தையே நண்பரா? இரண்டு பேருக்கும் ஜாடை நிறைய உள்ளது.

ஆமினா said...

மாமி
அந்த மாமியும் உங்கள மாதிரியே இருக்காங்க... நான் கூட ட்வின்ஸ்ன்னு நெனச்சே....

விஷாரிச்சதா சொல்லுங்கோ மாமி!

உங்க நட்பு மீண்டும் மலர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி.
என்ஜாய் :))

அந்நியன் 2 said...

அன்பான உறவும்
பண்பான பிறகும்
கருங் குயிலாக
நடன மயிலாக
மங்கையரின் காட்சியினை
காணும் போது
ஒரு பிரமிப்பு

காரணம்
காணா கிடைக்கா
ஒற்றுமைகள்

வாழ்த்துக்கள்மா....

அழகான ஒரு நினைவுகள்

கோமதி அரசு said...

எங்க க்ளோஸ் ஃப்ரெண்ட்ஷிப் தொடங்கி
விட்டது.இருவர்க்குமே அதில் ரொமவே சந்தோஷம்தான்,.//

மறுபடியும் உங்கள் நட்பு தொடர்வது அறிந்து மகிழச்சி.

காலமெல்லாம் நட்பு வாழ்க!

நெகிழவான பகிர்வு.

Lakshmi said...

தானைத்தலைவி வருகைக்கு நன்றி.
உங்க ப்ளாக் ஓபன் ஆகவே மாட்டேங்குதே. ஏதும் எழுதலியா நீங்க?

Lakshmi said...

ரமா, வருகைக்கு நன்றிம்மா.

Lakshmi said...

செந்தில் வருகைக்கு நன்றி.

Lakshmi said...

வெங்கட் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

ஸாதிகா வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோபால் சார், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

Lakshmi said...

கவி அழகன் வருகைக்கு நன்றி.

Lakshmi said...

பிரபு அந்த கருப்பு வெள்ளைப்படத்தில் என்னை கண்டு பிடிக்க முடியல்லியா. ஒன்னுபோல பாவாடை சட்டை போட்டிருக்கோமே. நான் முன்னாலும் அவ என் பின்னாடியும் நிக்கரா.

Lakshmi said...

கோவை2 தில்லி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

அதிரா ஆமா, நீங்க சொல்வது முற்றிலும் உண்மைதான். கணவரை
இழந்தபிறகுதான் எங்க நட்பு திரும்பவும்
துளிர் விட்டது. அதிரா எனக்கு உங்க
ப்ளாக் ஓபன் ஆகமாட்டேங்குதே?

Lakshmi said...

H. V. L. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

முத்து லட்சுமி, வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஆமி, இப்ப மெட்ராஸ்போனோம் இல்லியா அங்க நம்ம ப்ளாக் நண்பர்கள்
என்னை சந்திக்க வந்தாங்க. அவளுக்கு
நம்பவே முடியல்லே. நானா எழுத்ரேன்
என்று கேட்டுகிட்டே இருந்தா. இவ்வளவு ரசிகர்களா, அதுவும் வீடு
தேடி வந்து பாராட்டும் அளவுக்கு
உனக்கு எழுத வருமான்னு கேட்டுகிட்டே
இருந்தா.

Lakshmi said...

அந்நியன்2 வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

Lakshmi said...

மாதவன் வருகைக்கு நன்றி.

Lakshmi said...

அமுதா, நன்றிம்மா.

Lakshmi said...

கோமதி அரசு வருகைக்கு நன்றி,

Murthy SEO said...

உங்கள் நட்பின் மலரும் நினைவுகளில், நான் என் நட்பை பிரிந்த உணர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. நட்பு கிடைத்தற்கரிய ஒரு பொக்கிஷம். அதை பாதுகாப்பாக வைப்பதில்தான் தவறிவிடுகிறோம். பிரியும்போதுதான் நட்பின் ஆழம் புரியும்.

உங்கள் பதிவு மிகவும் அருமை. உடம்பை சில்லிட வைக்கிறது.

Lakshmi said...

மூர்த்தி, முதல் முறை வரீங்களா?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அடிக்கடி வாங்க.

இராஜராஜேஸ்வரி said...

என் அப்பாவின் கடைசித் தங்கை என்னை விட ஆறுமாதம் சிறியவள்.
நாங்களும் ஒன்றாக சுற்றுவோம்.
மூக்குகுத்திகொள்ள அவள் முதலில் உட்கார்ந்து கத்திய கத்தலில் நான் எழுந்து ஓடிவிட்டேன்.

மூக்கு குத்திக்கொள்ளவில்லை என்றும்.

மலரும் நினைவுகள் அருமை அம்மா.

Thanai thalaivi said...

எல்லோரும் என் ப்ளாக்கிற்கு வர முடியவில்லை என்று தான் சொல்கிறார்கள். என்ன காரணம் என்றே எனக்கும் புரியவில்லை!?

Lakshmi said...

ராஜேஸ்வரி நீங்களும் எங்களைப்போலத்தானா. சூப்பர்.7 வயசிலேயே ரெண்டு மூக்கும் குத்திடுவாங்க எங்க வீட்ல. உங்க கதை
போலத்தான் . யாரு மூக்கு குத்திண்டாலோ அவ கத்தவே இல்லெ பாத்துக்கொண்டிருந்தவதான் கத்தினா.
ஹா ஹா

Lakshmi said...

தானைத்தலைவி இப்ப கூட ட்ரை பண்ணினேன், உங்கபக்கம் ஓபனே ஆரதில்லே

கே. பி. ஜனா... said...

அற்புதமான நட்பு! இருபது வருட பிரிவை எப்படி சகித்துக் கொண்டீர்களோ? மீண்டும் சந்தித்தது மகிழ்வைத் தந்தது!

கே. பி. ஜனா... said...

அற்புதமான நட்பு! இருபது வருட பிரிவை எப்படி சகித்துக் கொண்டீர்களோ? மீண்டும் சந்தித்தது மகிழ்வைத் தந்தது!

Lakshmi said...

கே. பி. ஜனா, சகிப்புத்தன்மைதானே
நட்பின் இயல்பு.

ஸ்ரீராம். said...

ஆச்சர்யமான ஒற்றுமைகள். நட்பான உறவு அல்லது உறவான நட்பு. மன உணர்வுகளை எழுத்தில் காட்டியிருக்கிறீர்கள்.

Lakshmi said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீ ராம்

Mahi said...

அழகான நட்பு & உறவு லஷ்மிம்மா! போட்டோஸ் எல்லாம் சூப்பர்! அதிலும் அந்த கருப்பு ஸாரி கலக்கலா இருக்கு! :)

இது போன்ற பதிவுகள் படிக்கையில் மனசு நெகிழ்கிறது.பகிர்வுக்கு நன்றிகள்!

மாய உலகம் said...

உங்களது நட்பு மீண்டும் இணைந்ததை படிக்கும்போது உங்களுக்கு எவ்வளவு சந்தோசம் இருந்ததோ...அதே சந்தோசம் எங்களுக்கும் படிக்கும்போது ஏற்பட்டது... உங்களது நட்பில் சந்தோசம் நிரம்பி வழியட்டும் வாழ்த்துக்கள்

Lakshmi said...

மஹி வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

Lakshmi said...

மாய உலகம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Jaleela Kamal said...

ரொமப் கியுட்டான புகைப்படம்
நானும் டிவின்ஸ் என்று தான் நினைத்தேன்.
மற்ற கருப்பு வெள்லை புகைபடங்கலும் அருமை
நெகிழ்வான பதிவு லஷ்மி அக்கா

என் பக்கம் நீங்க வந்து நெடு நாட்கள் ஆச்சே

அம்பாளடியாள் said...

எந்த விசயத்திலும் இணைபிரியாத நட்பு .
உங்கள் இருவரையும் பார்க்கும்போது
மனதுக்கு சந்தோசமாய் உள்ளது .ஆனால்
ஒரெசமயம் குழந்தை பிறப்பு. ஒரே சமயம் ரெண்டு பேர் கணவன் மார்களும்
இறந்ததுன்னு என்று பலவிதங்களிலும் எங்க வாழ்க்கை பின்னி பிணைந்தே
இருந்தது இதுகொஞ்சம் சந்தோசத்தையும் துக்கத்தையும் கலந்தே
கொடுத்துள்ளது .நன்றி அம்மா அனுபவப் பகிர்வு ஒன்றின
வழங்கியமைக்கு

Lakshmi said...

ஜலீலா வருகைக்கு நன்றிம்மா. ஊருக்கு போயிட்டேன் இல்லியா அதான் ஒருமாசமா வர முடியல்ல்லே, இதோ வரேன்

Lakshmi said...

அம்பாளடியாள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

M.R said...

தங்கள் நட்பு இன்னும் ஏழேழு ஜென்மத்திற்கும் வளர வேண்டும் அம்மா

பகிர்வுக்கு நன்றி

Lakshmi said...

M.R. வருகைக்கு நன்றி.

மாதேவி said...

படம் அழகாக இருக்கிறது.

நட்பு தொடர்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

Lakshmi said...

மாதேவி வருகைக்கு நன்றி

A and A said...

Hello, Came here thru blog hopping. Don't how or why, somehow i get caught with blogs written with Tirunelveli people :) Very nice blog and continue writing...

Lakshmi said...

A AND A, எப்படி வந்தாலும் சந்தோஷமே. நீங்களும் திரு நெல் வேலியா? வருகைக்கு மிகவும் நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .