Google+ Followers

Pages

Thursday, August 25, 2011

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் (3)

சாப்பிட்ட பிறகுஹாலில் எல்லாரும் டி, வி பாத்துண்டு இருந்தோம்.ஓடுகள்
 வேய்ந்த கூரைதான். நல்லா சூடு.அப்போ பின் வாசல் வழியா ஒரு சுண்டெலி
 முன் வாசல் வழியா ரெண்டு பெரிய எலி ஓடி வந்தது. பெட் ரூமிலும் சாமி
 ரூமிலும் ஓடிப்போனது. நான் சேரில் காலை தூக்கி மேலே வச்சுண்டேன்.
 அப்போ வாசல் புறமிருந்து ஒரு பூனை ஓடிவந்து பெட் ரூமுக்குள்ள போயி
 எலியை கவ்விண்டு போச்சு. ஓட்டுமேல பல்லி ஊறுது. கிச்சன் கீழேல்லாம் கரப்பு ஓடுது. என்னது இதுன்னு எனக்கு ஒருமாதிரி ஆச்சு, ஆனா அவாளுக்
 கெல்லாம் தினமும் பாத்து பாத்து பழகின விஷயமா இருந்தது. அதுபாட்டுக்கு
 வரும் போகும் நீ பயப்படாதே நம்மைல்லாம் ஒன்னுமே பண்ணாதுன்னு வேர
சொல்ராங்க.
  நான் கால்களைச் சேரில் தூக்கி வச்சுண்டதை பார்த்த அந்த வயசான பாட்டி
 என்னாச்சுன்னு கேட்டா. நான் எலின்னு சொன்னேன். ஓ, இம்புட்டுதானா
 நான் என்னமோன்னு நினைச்சேன். எலி அம்மணமா ஓடரதுங்கிரியேன்னு
 சொன்னா. இன்னொரு சின்னவயது மாமி ஆமாம்மா, எலி அம்மணமா
 ஓடாம கோவணம் கட்டிண்டா ஓடும்னு கேக்கரா. அங்க ஒரே சிரிப்பு அலைகள்.
 இவாள்ளாம் இப்படி கல கல்ப்பாக பேசியே தங்கள் வாழ்க்கையை உயிரோட்ட
 முள்ளதா ஆகிக்கராங்க. 80+ வயசிலும் என்ன ஒரு சென்ஸ் ஆஃப் ஹ்யூமர்.?
 அந்த வயசான பாட்டிம்மா வாயைத்திறந்தாலே பழமொழிகளா அடுக்குராங்க.
 அனுபவம் பேசுரது. .வாசல் கதவும் பின்கதவும் சொர்க்க வாசல் கதவு போல எப்பவுமே திறந்து தான் வக்கரா. 5 மணிக்கு காபி குடிச்சுட்டு நான் நோட்டும் பேனாவும்
 எடுத்துண்டு கிணத்தடிக்கு கிளம்பினேன்.

 அவால்லாம், எச்சிமி நீ இப்படி தனியே போய் உக்காந்துக்கவா பாம்பேலேந்து
 கிளம்பி இங்க வந்தே, இங்க எல்லாருடனும் உக்காந்து பேசிண்டு இருன்னு
 சொல்ரா.என்னபெரிசா எழுதி கிழிக்கப்போரேன்னு வேர. அக்கம் பக்கம் உள்ள
 வங்க நாங்க வந்திருப்பது தெரிந்து எங்களை பாக்க வந்துண்டே இருந்தா.
 என் அத்தை எல்லாருடனும் கலகலப்பாக பேசி அவர்கள் யாரு என்னனு
 விசாரித்து பூரா விபரமும் தெரிஞ்சுண்டா. அவளுக்கு எப்பவுமே அவளை சுத்தி
 மனுஷா இருந்துண்டே இருக்கணும். எல்லார்கூடவும் நிறையா பேசனும்
எல்லாரைபத்தியும் பூரா விவரமும் தெரியனும். அதனால கலகலதான் எப்பவுமே. நான் நேர் மாறாதான் இருப்பேன். அதிகம் பேசத்தெரியாது கேட்ட
 கேள்விக்கு மண்டை ஆட்டியே சின்னதா ஒரு பதில் சொல்வேன் அவ்வளவு
 தான். மத்தவங்க பத்தி தெரிஞ்சு என்ன பண்ணப்போரோம்? ஒரே அமைதிதான்.

 அக்கம் பக்கம் இருக்கரவா எல்லாருமே தூரத்து, கிட்டத்து சொந்தக்காராளாவே இருக்கா. இவர்களும் எல்லாருடனும் நல்லா பழகரா,
 மத்தவங்களும் இவங்க கூட நல்லா பழகிண்டு இருக்கா. நல்லது ,பொல்லாதது
 எல்லாத்லயும் கலந்துக்கரா. ஒருத்தருக்கு ஒருத்தர் நிறையா ஹெல்ப்பும்
 பண்ணிக்கரா.யாரு வந்தாலு ம் காபி டிபன் உபசாரங்கள் நல்லாவே பண்ரா.
ஒருமணி நேரத்துக்கு குறையாம பேசிட்டு பிறகுதான் கிளம்பரா. எச்சுமி
 ஏன் பேசவே மாட்ரான்னு அத்தை கிட்ட கேக்கரா. என்னைப்பத்தி அத்தைக்
 கு நல்லாவேதெரியும் ஏதானும் சொல்லி சமாளிச்சுடுவா. அவங்கல்லாம்
 என்னல்லமோ பேசிண்டே இருப்பா.    என் கண் அவங்களை பாத்துகிட்டு
 தான் இருக்கும். மனசெல்லாம் என் எழுத்துவேலை ஆக மாட்டேங்குதேன்னு
 நினைப்பிலே தான் இருக்கும்

 ஒரு வழியா வந்தவங்க கிளம்பினா எல்லாரும் வாசல் வரை போயி வழி
 அனுப்பினோம். மேல நிமிந்து பாத்தா எதிர்வீடு, பக்கத்துவீடு எல்லாம்
 ப்ளாட் டைப் வீடுகளா இருந்தது. இவாதான் இன்னமும் மாத்தி க் கட்டலெ.
 ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மா மரம் காய்ச்சு மாங்காய்கள் கொத்து, கொத்தா தொங்கிண்டு இருந்த்து. ஜூலை முடியப்போகுது இப்ப எப்படி
 இவ்வளவு மாங்கா ந்னு கேட்டேன். யாரும் பரிக்க மாட்டங்களான்னும்
 கேட்டேன். எல்லாரும் பரிச்சு ஊருகா எல்லாம் போட்ட பிறகும் காலி
 ஆகவே இல்லே. இந்தமரத்ல எப்பவுமே மாங்கா காய்ச்சு தொங்கிண்டேதான்
 இருக்கும்னு சொல்ராங்க.. இதுவும் எனக்கு கொஞ்சம் அதிசயம்தான்.
 ப்ளாட் டைப் வீடில்தானே பாம்பேல இருக்கேன். அடுத்த டோர்ல யாரு
 இருக்கானு கூட யாரும் தெரிஞ்சுக்கவே மாட்டாங்க.சாத்தின கதவு தொறக்
கவே தொறக்காது.வீட்ல யாரானும் இருக்கங்களா வெளில போயிருக்காங்களானுகூட தெர்யாது. அப்படி இருக்கும் எனக்கு இங்க
 பார்ப்பது எல்லாமே புது அனுபவமாதான் தெரிஞ்சது.னல்லாவே இருக்கு.

இரவு 8 மணிக்கெல்லாம் சாப்பிட்டு 9 மணிக்கு தூங்க ஆரம்பிச்சுடராங்க.
 எனக்கோ 12 மணி வரை தூக்கமே வராது. அவங்கல்லாம் லைட் அணைச்சு
 படுத்தபிறகு நான் என்ன செய்ய்ன்னே தெரியாதுஇருட்ல புக் படிக்கவும்
 முடியாது. மொபைலில் ஹெட் போன் மாட்டிண்டு 12-மணிவரை பாட்டு
 கேட்டுண்டே இருப்பேன்.அப்படி ஒரு நா நான்கட்டில்ல தூங்க   ஆரம்பிச்சு
 அரை மணி நேரத்த்ல என்கையை  விரல்களை யாரோ சுரண்டுவர்து போல
 இருந்தது. கயை உதறிட்டு திரும்பி படுத்தேன். மறுபடி கை விரலில் சுளீர்னு
 ஊசி போட்டது போல வலி. என்னாகுதுஇங்க்ன்னு லைட்டு போட்டு பாத்தா
 எலி  கீழ படுத்திருக்கரவாளை எல்லாம் ஒன்னொமே பண்ணாம கட்டிலில்
படுத்திருக்கும் என்னை வந்து கடிச்சிருக்கு. அதுக்கப்பரம் சிவ ராத்திரிதான்.
அடுத்த நாள் நா இந்தபெட்ரூமில் படுக்க மாட்டேன்னுட்டேன். பெரிய ஹாலில்
 ஒரு சோபா செட் இருந்தது அங்க படுத்தென். எலி கடிச்சதில் நாலு நால்
 கையில் ஒரே கடுப்பு வலி. எழுதமுடியாமப்போச்சு.

54 comments:

RAMVI said...

நல்ல பயண அனுபவம் அம்மா.தொடர்ந்து எழுதுங்க படிக்க காத்திருக்கிறோம்.

எலி கடிச்சது என்னாச்ச்சு? ஊசி போட்டுக்க வேண்டுமே! டாக்டரிடம் காட்டினீங்களா?/

kavithai said...

''...அதுபாட்டுக்கு
வரும் போகும் நீ பயப்படாதே நம்மைல்லாம் ஒன்னுமே பண்ணாதுன்னு வேர
சொல்ராங்க...''மற்றவர்களுக்கு சாதாரணமான விடயம் சில சமயம் எமக்கு சங்கடமாயும், விசேடமாயும் தெரியும். நல்ல அனுபவம் .சுவையாக உள்ளது பகிர்வுக்கு நன்றியம்மா.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

M.R said...

அனுபவம் தொடரட்டும் அம்மா ,தொடர்கிறேன்.அனுபவம் சுவாரஸ்யம்.

விக்கியுலகம் said...

பகிர்வுக்கு நன்றிங்க அம்மா!

தமிழ்வாசி - Prakash said...

அனுபவ பகிர்வு அருமை....

எலிக்கு உங்கள ரொம்ப பிடிச்சு போயிருக்கும். அதான்...

இராஜராஜேஸ்வரி said...

எலி கடிச்சதில் நாலு நால்
கையில் ஒரே கடுப்பு வலி. எழுதமுடியாமப்போச்சு...//

எலி கடிச்சால் டெட்டனஸ் ஊசி போடணுமே !

வை.கோபாலகிருஷ்ணன் said...

எலிக்கதை கேட்க நல்லாவே உள்ளது. கடிபட்ட உங்களுக்குத்தான் மிகவும் கஷ்டமாக இருந்திருக்கும்.

//80+ வயசிலும் என்ன ஒரு சென்ஸ் ஆஃப் ஹ்யூமர்.? அந்த வயசான பாட்டிம்மா வாயைத் திறந்தாலே பழமொழிகளா அடுக்குறாங்க.
அனுபவம் பேசுகிறது.//

ஆம் இது போல பலருடன் எனக்கும் பழக்கம் உண்டு. என் அத்தை மகள் ஒருத்தி. என்னை விட 50 வயது பெரியவங்க. இப்போது அவர்கள் இல்லை.

அவர்கள் பேச்சை கேட்பதென்றால் எனக்கு வெல்லம் சாப்பிடுவது போல. சரளமாக, செக்ஸியாக, கலகலப்பாக பேசிக்கொண்டே இருப்பார்கள்.

ஆண், பெண், பெரியவங்க, சின்னவங்க, சிறுவர், சிறுமியர் அருகில் இருக்கிறார்களே என்ற தயக்கமே இல்லாமல் அவங்க ஸ்டைலில் அள்ளித்தெளிப்பார்கள். காதால் கேட்கும் நமக்குத்தான் மிகவும் கூச்சமாக இருக்கும்.

அவர்கள் பேச்சை தொடர்ந்து கேட்க விருப்பம் இருந்தும், ஏதோ ஒரு சங்கடத்துடன் நான் பலமுறை நகர்ந்து சென்று விடுவதுண்டு. அவர்கள் வாயால் கேட்ட ஒருசில விஷயங்கள் இன்றும் என் நெஞ்சில் நிறைந்துள்ளன. [யாரிடமும் எளிதில் பகிர்ந்து கொண்டுவிட முடியாதவை அவை]

பயணக்கட்டுரைக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். vgk

கோவை2தில்லி said...

அக்கம் பக்கம் இருக்கறவங்க பேசிண்டு இருந்தாலே மனசு நல்லா இருக்கும். இங்க தில்லியிலும் அடுத்த வீட்டில் என்ன நடந்தாலும் தெரியாது. கதவை திறக்கவே மாட்டாங்க.

எலி பயம் எனக்கும் நிறையவே உண்டு. கட்டில் மேல தான் ஏறிக்குவேன்.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அனுபவம்...

athira said...

உங்கள் அனுபவம் படிக்க சுவைக்குது.

//எச்சிமி// இதென்ன இது... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).

பாரத்... பாரதி... said...

வணங்கங்களும், வாக்குகளும்..

கோகுல் said...

உங்க எழுத்துநடை அவ்ளோ சுவாரஸ்யமா இருக்குங்க!
படிக்க படிக்க ஆனந்தம்!

Anonymous said...

நல்ல பயண அனுபவம் அம்மா...அனுபவம் தொடரட்டும் ...தொடர்கிறேன்

அந்நியன் 2 said...

இவ்வளவு பேரு சொன்ன பிறகு நான் என்னத்தை சொல்லப் போறேன் எழுதுங்கள் அம்மா.

எலியை பிடிக்க காத்திருக்கோம்.

சாரி..சாரி..நிறைய படிக்க காத்திருக்கோம்.

தமிழ் மணம் ஓட்டும் போட்டாச்சு.

Madhavan Srinivasagopalan said...

// எலி கீழ படுத்திருக்கரவாளை எல்லாம் ஒன்னொமே பண்ணாம கட்டிலில் படுத்திருக்கும் என்னை வந்து கடிச்சிருக்கு. //

அதான.. அக்கிரமா இல்ல..
மறுபடியும் வரட்டும் அந்த எலி.. கவனிச்சுக்கறேன்.

சுவைபட எழுதுகிறீர்கள் நீங்கள்.. தொடர்ந்து எழுதவும்.

vidivelli said...

அதிகம் பேசத்தெரியாது கேட்ட
கேள்விக்கு மண்டை ஆட்டியே சின்னதா ஒரு பதில் சொல்வேன் அவ்வளவு
தான். மத்தவங்க பத்தி தெரிஞ்சு என்ன பண்ணப்போரோம்? ஒரே அமைதிதான்.

எனக்கும் இதுதான் பிடிக்கும்..

அம்மா வல்ல பகிர்வு..
வல்ல சுவாரசிகமான எழுத்தோட்டம்....
அன்புடன் பாராட்டுக்கள்...

மாய உலகம் said...

சேம் ப்ளட்.... என்னையும் எலி கடிச்சுருக்கு ஹி ஹி ஹி

Lakshmi said...

ரமா, வருகைக்கு நன்றிம்மா.

Lakshmi said...

கவிதை, வருகைக்கும் கருத்துக்கும் நன்ரி.

Lakshmi said...

எம்,ஆர். வருகைக்கு நன்றி

Lakshmi said...

விக்கி உலகம் வருகைக்கு நன்றி.

Lakshmi said...

பிரகாஷ் எலிக்குமட்டும் என்ன பிடிச்சுதுன்னு நினைக்காத. ரொம்ப வருஷம் கழிச்சு சொந்தபந்தம் எல்லாரை
யும் பாத்தேன்ல, எல்லாருக்குமே என்ன
ரொம்ப பிடிச்சு போச்சு. ஆனா யாரும் என்ன கடிக்கலே. ஹா ஹா ஹா

Lakshmi said...

பிரகாஷ் எலிக்குமட்டும் என்ன பிடிச்சுதுன்னு நினைக்காத. ரொம்ப வருஷம் கழிச்சு சொந்தபந்தம் எல்லாரை
யும் பாத்தேன்ல, எல்லாருக்குமே என்ன
ரொம்ப பிடிச்சு போச்சு. ஆனா யாரும் என்ன கடிக்கலே. ஹா ஹா ஹா

Lakshmi said...

ராஜேஸ்வரி, எல்லாருமே ஊசி போடனும்னு சொன்னாங்க. நான் அல்ரெடி ஹார்ட் ப்ராப்லத்துக்காக நிறை
யா மருந்து மாத்திரை எடுக்கரேன்.
அப்போ வேர ஊசியோ மருந்தோ
எடுத்துக்க முடியாது. அதனால டாக்டர் கிட்டல்லாம் போகவே இல்லே

Lakshmi said...

ஆமா, கோபால் சார் நீங்க சொல்வது சரிதான். 80- வய்சுக்காரங்க என்ன
ஜோராபழமொழிஎல்லாம் சொல்லி
கலக்குராங்க. பக்கத்ல யாரு இருக்கங்கரதெல்லாம் பாக்கரதே இல்லே.
நம்ம போல வயசான வங்களுக்கு இந்த
அனுபவங்கள் கிடைச்சிருக்கும்.
நம்மால் சொல்ல க்கூடியதை மட்டும்
எல்லாருடனும் பகிர்ந்துகொள்ளலாம்

Lakshmi said...

கோவை2தில்லி நீங்களும் டில்லிவாசின்னால நான் சொல்வது புரிஞ்சுக்க முடியும் இல்லியா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Lakshmi said...

கருன் வருகைக்கு நன்றி.

Lakshmi said...

அதிரா வீட்ல என் பேரு எச்சிமிதான்.
அந்தபெயர் எப்படி வந்ததுன்னு பெயர் காரணம்னு ஒரு தொடர் பதிவுல
சொல்லி இருக்கேனே. போய்ப்பாருங்க.
வருகைக்கு நன்றி.

Lakshmi said...

பாரத்...பாரதி, வருகைக்கும் வாக்குகளுக்கும் நன்றிங்க.

Lakshmi said...

கோகுல் வாங்க என் எழுத்து சிலருக்கு பிடிக்குது, சிலருக்கு போர் ஆகுது.
என்ன பண்ண எனக்கு இப்படித்தான் எழுத வருது

Lakshmi said...

ரெவரி, நீங்க தொடர்ந்து வந்து கருத்துக்களும் சொல்வதற்கு நன்றி

Lakshmi said...

அந்நியன்2 வருகைக்கும் கருத்துக்கும்
வாக்குக்கும் நன்ரி. எவ்வளவு எலி பிடிச்சீங்க?

Lakshmi said...

மாதவா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அந்த எலிகிட்ட சொல்ரேன் இனிமேல வந்தா உன்னை பிடிக்க மாதவன் காத்துகிட்டு இருக்கார்னு

Lakshmi said...

விடிவெள்ளி, வருகைக்கும் கருத்துக்கும் நன்ரி.

Lakshmi said...

மாய உலகம் உன்னையும் எலி கடிச்சுதா. என்ன ஒரு ஒத்துமைபாரு.

சி.பி.செந்தில்குமார் said...

3 vadhu வது பாகமா? 10 பாகம் தேத்திடுவீங்க போல்

Thanai thalaivi said...

அம்மா, எலி கடித்த விவரம் டாக்டரிடம் சொல்லி அதற்கேற்றார் போல் வைத்தியம் செய்து கொள்ளுங்கள். எங்க தலைவரை கண்டால் மூஞ்சுருக்கு ரொம்ப பிடிக்கும். வந்து அவரை மட்டும் லேசாக சுரண்டிவிட்டு போகும். அவரும் அதை சந்தோஷமாக ரசித்துகொள்வார்.

நானும் தாம்பரத்திற்கு அருகில் தான் இருக்கிறேன். நீங்கள் வரும் போது எனக்கு email மூலம் விவரம் தெரியபடுத்தவும். வரவேற்க காத்திருக்கிறேன்.

Lakshmi said...

என்ன செந்தில் 3-வது பாகத்லேயே
ரொம்ப போர் ஆகுதா. நிப்பாட்டிடவா? சொல்லுங்க.பய்ணம் போவதே பதிவு போட்டு உங்களை எல்லாம் ஒரு வழி
பண்ணத்தானே.ஹா ஹா

Lakshmi said...

தானைத்தலைவி, உங்க அன்பான அழைப்புக்கு நன்றிம்மா. உன்மெயில் ஐ டி தெரியாதே,எனக்கும் உன்னைப்பார்க்க ஆசைதான்.இப்பவும் உன் ப்ளாக் ஓபன் ஆகவே மாட்டெங்குது.

புலவர் சா இராமாநுசம் said...

சொல்லுபவர் திறமை மிக்கவராக
இருந்தால் சாதாரண நிகழ்சி கூட
சுவையாக இருக்கும்
தங்கள் பதிவு சுவையாக
இருக்கிறது.

புலவர் சா இராமாநுசம்

Lakshmi said...

ஐயா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ஸ்ரீராம். said...

எலித் தொந்தரவைப் படித்த போது சொந்தக் கதை படிக்கிறா மாதிரி இருந்தது. சின்ன எலிகள் எலிப் பொறியிலும் மாட்டுவதில்லை!

Lakshmi said...

ஸ்ரீ ராம் வருகைக்கு நன்றி

மாதேவி said...

அய்யோ எலி... ஓடுறேன்.:)

Lakshmi said...

ஹா ஹா, உங்களுக்கும் எலின்னா பயம்மா வாங்க ரெண்டுபேரும் சேந்தே ஓடலாம்.

பித்தனின் வாக்கு said...

good amma. i will also follow your blog

Lakshmi said...

பித்தனின் வாக்கு, வருகைக்கு நன்றி.

சம்பத்குமார்.B said...

உங்கள் அனுபவங்கள்...

தொடரட்டும் அம்மா

பாசத்துடன்
சம்பத்குமார்

(சொன்னது போலவே வரவைத்துவிட்டீர்கள்)

சம்பத்குமார்.B said...

உங்கள் அனுபவங்கள்...

தொடரட்டும் அம்மா

பாசத்துடன்
சம்பத்குமார்

(சொன்னது போலவே வரவைத்துவிட்டீர்கள்)

Lakshmi said...

ஹா ஹா, சம்பத் வருகைக்கு நன்றி.

Jaleela Kamal said...

அங்கு உள்ளவர்களையெல்லாம் எலிக்கு கடித்து பழகி போயிருக்கும் ,
நீங்க தான் அஞ்கு புது ஆள் அதான் உங்கள பிராண்டி இருக்கு.

இது இங்கிருந்து சென்னைக்கு போனா கொசுக்கடி அப்ப எல்லாரும் சொல்வாஙக் யாரையும் கடிக்காம எங்களை மட்டும் க்டிச்சி வைச்சா
கொசுக்கு புது இரத்தம் தேவை என்று.. சொல்வார்கள்

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா உங்கள் எலி பயம் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது சுவாரசியம் எனினும் பயப்படுபவர்களுக்குத் தானே அது புரியும்.... ஆதியும் இப்படித்தான் எலி பார்த்தாலே போதும் அலற ஆரம்பித்து விடுவார்....

பயணம் பற்றிய நல்ல பகிர்வு... தொடருங்கள்..

Lakshmi said...

ஆஹா எலிக்கு பயப்படுரவங்க எனக்கு கம்பெனி கொடுக்கராங்களே. வெங்கட்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நிரூபன் said...

எலி ஜோக் ரசித்தேன்,
ஆனால் எலி கடிச்சது தான் கவலையான விடயம், நல்லதோர் டாக்டரிடம் காட்டுங்கள்.
இல்லையேல் வருங்காலத்தில் ப்ளேக் நோய் வரும் என்று சொல்லுவார்கள்.

என்னை ஆதரிப்பவர்கள் . .