Google+ Followers

Pages

Friday, August 5, 2011

மூணு, மூணாய்த்தான் சொல்லனுமாம்.(தொடர்பதிவு)

கீதா சாம்பசிவம் தொடர்பதிவுக்கு என்னையும் அழைத்து படிக்கும் உங்க எல்லாரையும் என்கிட்ட
மாட்டிக்க வச்சுட்டாங்க. விதி யாரை விட்டது.படிங்க, படிங்க படிச்சுகிட்டே இருங்க.

விரும்பும் மூன்று விஷயங்களில் எதைச்சொல்ல?

சின்ன வயதில் எழுதப்படிக்கத்தெரியாத குறையை இப்போ இந்த வயதில் எல்லா புத்தகங்களையும்
படித்துமுடிக்க நினைப்பேன். சமைக்கும்போதும் சாப்பிடும்போதும், டி, வி பாக்கும்போதும்கூட
ப்ளாக் எழுதும்போதும்கூட இடதுகையில் ஏதாவது ஒரு புத்தகம் கூடவே பிறந்தத் 6-வது விரல் போல
ஒட்டிக்கொண்டே இருக்கும். முதல் விருப்பம் புக்ஸ்.

அடுத்து எனக்கு ம்யூசிக் ரொம்பவே இஷ்ட்டம். கீபோர்டில் தெரிந்த எல்லா பாடல்களையு கற்றுக்கொள்ள
ரொம்பவே விருப்பம். கற்றுக்கொடுக்கத்தான் யாருமே கிடைக்கலே.கீ போர்ட் கூட பசங்க வாங்கி தந்தாங்க. தினசரி அதைதட்டிண்டு இருப்பேன். அதில் சிறப்பாக கத்துக்க ஆசை யாரானும் எனக்கு கத்து தரீங்களா? யாரு என் கிட்ட மாட்டிக்கப்போரீங்க?

அடுத்து இயற்கை கட்சிகளை ரசிப்பது. விடிந்தும் விடியாத காலைப்பொழுது பறவைகளின் உற்சாக
கீச் கீச் குரல்கள் ரொம்பவே நான் விரும்பும் விஷயம்.அடுத்து விரும்பாத மூன்று விஷயங்கள்

எவ்வளவு யோசித்தும் ஏதுமே நினைவில் வரலியே என்ன சொல்ல?

பொதுவா எனக்கு ஆஸ்பிடல் போவதோ மருந்து சாப்பிடுவதோ கொஞம் கூட பிடிக்காதவிஷயம்.
ஆனா என்னஒரு கொடுமைன்னா எதிர்பார்க்காம ரெண்டு ஹார்ட் அட்டாக்கும் ஒரே நாளில்
அட்டாக் ஆயிட்டதால எக்கசக்க மருந்து மாத்திரைகளில் வாழ்க்கை ஓட்டவேண்டி இருக்கு.

மத்தவங்கள்ளைபத்தி குறைகூறுவது சுத்தமா பிடிக்காது. எல்லாரிடமும் ஏதானும் ஒரு பாசிட்டிவ்
குணம் இருக்கத்தான் செய்யும் அதைமட்டுமே பாக்கலாமே. நெகடிவ் பாயிண்ட் தேடிப்பிடிப்பது வேஸ்ட்.

மும்பையில் இப்ப ஜோரான மழைக்காலம். இந்தமழைகாலத்தில் மார்க்கெட் போயி காய் வாங்கிவர
சுத்தமா பிடிக்காது. அங்கு அழுகின காய்களின் கெட்ட வாடையும் சள, சளன்னு சகதியில்
நடக்கவேண்டி வரும் கொடுமையும் பிடிக்கவே பிடிக்காது.
( அப்பாடி ஒரு வழியா தேத்திட்டேன்)

பயப்படும் மூன்று விஷயங்கள்.

பயத்துக்கு என்ன ஸ்பெல்லிங்க்னு கூட தெரியாதே. எதைச்சொல்ல?

இப்ப பயமில்லைன்னா கூட சின்ன வயது பயம் சொல்லலாமே.( சொல்லலாம் தானே)

கிராமத்ல எங்க வீடு ரொம்ப விஸ்தாரமான பெரிய வீடு. டாய்லெட் கொல்லைப்புறம் பின்னாடி
தள்ளி இருக்கும். அங்க தனியே போக பயம். அதுவும் சுத்திவர புளியமரம் வேப்பமரம்லாம் நிறையா
இருக்கும். இருட்டினபிறகு அங்கபோக யாராவ்து கூடவந்தே ஆகனும். பின்ன என்னங்க புளிய
மரம் வேப்பமரங்களில் பிசாசு இருப்பதாக கதை சொல்லும் பெரியவங்க எங்களை நல்லா பயம்
காட்டி வச்சிருந்தாங்களே!!!!!!!

ஆத்தங்கரைக்கு குளிக்கப்போனா மீன்கள் காலை கிசு கிசு மூட்டுவது பொல்ல கடிக்கும். அதுவும் பயம் சொம்பால தண்ணீஎடுத்துதான் குளிப்பேன். ஆத்துல இறங்கி முங்கி குளிக்க பயம்.

இதே வாய்க்காலில் தண்ணீ பாம்பெல்லாம் நிறையாவரும் அது கடிக்காதுதான் ஆனா கூட அதுக்கும் பயம்தான்.

புரியாத மூன்று விஷயங்கள். இதுபத்தி சொல்லலிடலாம்.

நான் எழுதும் எழுத்துக்கு ப்ளாக்கில் இவ்வளவு ஃபாலோவர்ஸ், கமெண்ட் போட இவ்வளவு ரசிகர்கள்
எப்படி வந்தாங்கன்னு எவ்வளவு யோசித்தும் இப்பகூட புர்யல்லே.???????

நான் கம்யூட்டர்லஎழுதுவது சொந்தங்களுக்கு ஏன் பிடிக்க மாட்டேங்குதுன்னும் புரியல்லே.
அவஙகளுக்கு தமிழ் படிக்க வராததால இருக்குமோ???????

எனக்குக்கிடைத்த அனுபவங்களால கோவில்களுக்கு போகப்பிடிக்காமப்போச்சே.அது ஏன்னும் புரியல்லே

மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்.

லாண்ட்லைன் போன், ஒரு பேனா, பெரிய டைரி.( தினசரி டைரி எழ்துவதால) வாராந்திர
மாசாந்திர தமிழ் ஹிந்தி மராட்டி, இங்லீஷ் புக்ஸ். அவ்வளவேதான்.

சிரிக்கவைக்கும் மூன்று விஷயங்கள்.

ப்ளாக் கமெண்டுகளில் சில பதிவர்களின் நகைச்சுவை கமெண்டுகள் அவங்க பேரு பாத்தால்லே
சிரிப்பு பொத்துகிட்டு வரும் குறிப்பா யாரையும் மாட்டி விடக்கூ டாதுல்லே.

பத்த்ரிக்கைகளில் படிக்கு தரமான ஜோக்குகள் தனியே சிரிக்க வைக்கும்.

இங்க்லீஷ் தெரியாம தெரிந்ததுபோல நான் என் மறுமகள்களிடம் மாட்டிக்கொள்ளும் காமெடி களுக்கு
பஞ்சமே இல்லே. என் ப்ளாக் படிக்கிரவங்கள் எல்லாரும் அதைப்படிச்சிருப்பாங்க்ன்னு இங்கே
குறிப்பா எதையும் சொல்லி மாட்டிக்க விரும்பல்லே.

தற்போது செய்துகொண்டிருக்கும் காரியம்.

வேர என்ன ஒரு சைடுல பாட்டு ஓடிட்டு இருக்கு, மறுபுறம் கீபோர்ட் தட்டிட்டு இருக்கேன்
இடை இடையே பசங்களின் போன்கால்களுக்கு தப்பு தப்பா பதில் சொல்லிட்டு முழிச்சுகிட்டு
இருக்கேன்.

ஐயோ 12மணி ஆச்செ இன்னும் சமைய்லே பண்ணலியே என்ன பண்ணனு யோசிக்கிரேன்
ஈசியா சீக்கிரமா என்ன பண்ண முடியும்? தெரிந்தவங்க சொல்லுங்களேன்.

பாதி எழுதும்போது நெட்டோ, கரெண்டோ பிச்சிகிடக்கூடாதேன்னு கவலைப்பட்டுண்டே வேக வேகமா
தப்பும் தவறுமா டைபண்ணிகிட்டு இருக்கேன்.

வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும்காரியங்கள்.

நாமல்லாம் என்ன பெரிய பிரபலமானவங்களா?சாதாரண மனிதர்கள் நாம என்ன செய்துட முடியும்?
யாருக்கும் எந்த தொந்திரவும் கொடுக்காம நம்ம காரியத்தை கடைசி வரை நாமே செய்துக்கணும்.

கூடியமானவரை ஒரு நல்ல மனுஷியாக எல்லாருக்கும் அன்புடன் இருக்கணும் கடைசி வரை.

இதுக்கும் அந்த ஆண்டவர்தானே அருள் செய்யணும் பார்ப்போம் அருள் செய்யராரான்னு.

சேய்து முடிக்கக்கூடிய மூன்று விஷயங்கள்.

நான் 20 வருஷமா தனியேதான் வசிக்கிரேன் என் வீட்டுவேலைகள் வெளி வேலைகள் நானே
தான் செய்துக்கரேன்,ஹெல்த் ப்ராப்லங்கள் நிறையவே இருந்தாலும் அதையெல்லாம் ஒரு
பொருட்டாகவே நினைக்கலே. யார்ருக்கோ என்னமோ நடக்குதுன்னுதான் இருக்கேன்.
இப்படியே மூச்சு நிக்கும் வரை இருந்துடனும்.

குழந்தை களுக்கு இந்தவிஷயம் தான் என்னிடம் பிடிக்காதவிஷயம். நாங்க இவ்வளவு பேரு
இருக்கும்போது நீங்க இப்படி தனியா இருப்பது எஙகளுக்கு ரொம்ப சங்கடமா இருக்குன்னு எப்பவும்
சொல்ரா. என்னோட விருப்பத்துத்தான் மறுப்பு கூறமுடியாம விட்டு வச்சிருக்கா.எங்க எல்லார் மத்தியிலும் நல்ல ரிலேஷன் ஷிப், நல்ல அண்டர்ஸ்டாண்டிங்க் நல்ல பேச்சுவார்த்தை, போக்குவரத்து
எல்லாமே சூப்பரா இருக்கு. எல்லாருமே என்மேல அன்பாவும் ரொம்ப பாசமாவுமே இருக்காங்க.
பேரக்குழந்தைகளோ தினசரி போனில் எங்ககூட வந்திடுங்கோ நாங்க உங்களை ரொம்ப மிஸ்
பண்ரோம்னு அழராங்க.அவர்கள் கூடப்பொய் இருந்து அவர்களை என்னால திருப்தி படுத்தமுடியல்லே

சின்னவயதிலேயே கல்யாணமாகி குடும்ப பொறுப்புகளை அளவுக்கு அதிகமாகவே ஏத்துகிட்டதால
இப்ப மனசு எல்லாத்திலேந்து விட்டு விலகியே நிக்கதோனுது. பந்தம் பாசம் எல்லாத்லேந்தும் விலகத்தான் மனசுசொல்லுது.தனிமை யில்எந்த வருத்தமோ எந்தக்குழப்பமோ இல்லாம மனசு அமைதியுடன்
இருக்கு. அவங்க திருப்திக்கு ஒவ்வொருவருடனும் ஒரு, ஒரு மாசமும் போயி இருந்துட்டு
வரனும். என்னால இதைச்செய்து முடிக்க முடியுமா? தெரியல்லே.

கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்.

ஒருவரைப்பற்றி ஒருவர் பேசும் புறம்பேச்சுக்கள் கேக்கவே பிடிக்காது.


குழந்தைகளை அம்மாக்கள் ரொம்பவே டார்ச்சர் பண்ணுவது பிடிக்கலே
இது காம்பெட்டிஷன்வேர்ல்ட் அதனால இப்படிதான் பசங்க வளரனும்னு
அவங்க பிரியப்படராங்க. அந்தக்குழந்தைகளுக்குள்ளும் ஒரு மென்மையான
குழந்தை மனசு இருக்கும் என்பதை யோசிக்கரதே இல்லே.

சின்னவய்சு பெண்கள் சின்னவயது பையன்களை குழந்தை தொழிலாளர்களாக
என்னால் சகிச்சுக்கவே முடியல்லே.அவர்களை வீட்டு எஜமானிகள் திட்டும்
வார்த்தைகள் கேக்கவே பிடிக்காது.

கற்றுக்கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்.

கத்துக்க எவ்வளவோ இருக்கே,சின்ன சின்ன ஆசைதான்

எம் எஸ் அம்மாபோல சுகமான குரலில்பாட தரமானபாட்டுக்களை கற்றுக்கொள்ள ஆசை.

இங்க்லீஷில் ப்ளூயன்சியாக பேச ஆசை.( யாரு அங்கே சிரிக்கரது)

ட்ராயிங்க் வரைய மிகவும் ஆசை. ஆனா இப்போ கை நடுங்கும் நடுக்கத்தில் கோலம் கூட
போடமுடியல்லே.

பிடித்தமூன்று உணவு வகைகள்

உண்மையில் சொல்லணும்னா மத்தவங்களுக்கு பிச்சதையே எப்பவும் யோசித்து பண்ணிப்போட்டி
ருக்கென். கிச்சன் போயி சமையல் தொடங்கினா எனக்கு என்ன பிடிக்கும்னே தெரியல்லே. அதுபத்தி
யோசித்ததே இல்லே.இப்ப இந்தப்பதிவுக்காக யோசிக்கரேன்

எனி டைம் ஃபேவரிட் தயிர் சாதம் வடுமாங்கா.
ரசம் சாததில் போட்டு சாப்பிட பிடிக்கல்லே. சூப் மாதிரி குடிக்கபிடிக்குது.
கடலைப்பருப்பு, ஜவ்வரிசி வெல்லம் போட்டு என் அம்மா செய்து தரும் பாயசம்.

அடிக்கடி முணு முணுக்கும் மூன்று பாடல்கள்

பழயபாடல் கள்தான். புது பாடல்களில் வார்த்தையே புரிவதில்லே. அப்படியும் சில பாடல் ஓக்கே.
பொதுவா நான் ரொம்ப நாளா ஹிந்திபாட்டுதான் கேக்கரேன். தமிழில் ரொம்ப ரேர்.
வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன்
நினைக்கத்தெரிந்தமனமே உனக்கு மறக்கத்தெரியாதா,

பிடித்த மூன்று படங்கள்.

ஹிந்தியில் சங்கம் (25 தடவை பாத்தேன்)
மலையாளம் மூனாம் முறா
தமிழ் வேதம் புதிது, முதல் மறியாதை

இது இல்லாம வாழமுடியாது மூன்று விஷயம்

படிக்க புக் இல்லாம இருக்கவே முடியாது
அத்போல பாட்டு கேக்காம இருக்கமுடியாது
ஊருக்கெல்லாம் போனப்போ கம்ப்யூட்டரே கிடைக்கலே
அது இல்லாம ரொம்ப க்‌ஷ்ட்டமா ஆச்சு

இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர் ( யாரை மாட்டி விடலாம்)
வை. கோபால் சார், ராம்வி(ரமா), அ ந் நியன்2.

கீதா சாம்பசிவம் என்னை ஏன் தொடர்பதிவுக்கு அழைச்சொம்னு நொந்துடுவாங்க.
பின்ன தொடர் பதிவு எழுதசொன்னா அனுமார் வால் நீளத்துக்கு ராமாயணமா எழுதுவாங்க?

58 comments:

ஆமினா said...

கலக்கல் லெட்சுமிம்மா....

அமைதிச்சாரல் said...

ஜூப்பரா இருக்குது லஷ்மிம்மா.. கத்துக்க நினைச்ச விஷயங்களை சீக்கிரமே கத்துக்க வாழ்த்துகள்..

அமைதிச்சாரல் said...

ஜூப்பரா இருக்குது லஷ்மிம்மா.. கத்துக்க நினைச்ச விஷயங்களை சீக்கிரமே கத்துக்க வாழ்த்துகள்..

விக்கியுலகம் said...

மேடம் அழகா சொல்லி இருக்கீங்க....நெறைய விஷயம் படிப்பினைகளா இருக்கு எனக்கு நன்றி தங்கள் பதிவுக்கு!

ஸ்ரீராம். said...

உலகில் படைக்கப் பட்டுள்ள எல்லாவற்றையுமே விரும்பி விட்டால் வேதனை ஏது? குணத்தில் நெகடிவ் பார்க்காம பாசிடிவ் பார்ப்பது விசேஷம். பொதுவாக நீங்கள் எழுதியுள்ளது எல்லாமே நீங்கள் ரொம்ப பாசமான, பாசிடிவ் ஆன மனுஷி என்பதை காட்டுகின்றன. பாய்ன்ட் பாய்ன்ட் ஆக அடுக்காமல் இயல்பாக பேச்சு வழக்கில் விவரங்களுடன் 'லிஸ்ட்டி'யிருப்பது சுவாரஸ்யம். (இது நம்ம ஏரியா வாசகர்களுக்கான ப்ளாக்.நீங்கள் உட்பட எல்லோரும் பாடி, வரைந்து எழுதி என்று அங்கு இடம் பெறலாம்.எங்களை அறிய 'எங்கள் ப்ளாக்' பக்கமும் வாங்க!)

Amutha Krishna said...

அனுமார் வால் ..நல்லாயிருக்கு அம்மா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நீங்க ஒரு மாதம் ஊரில் இல்லாததால் உங்களுக்கு நாட்டு நடப்பே தெரியவில்லை.

நான் ஏற்கனவே இதுபற்றி நம் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் அன்புக்கட்டளைக்கு அடிபணிந்து எழுதி முடித்து விட்டேன்.

நீங்கள் அதை கீழ்க்கண்ட லிங்க் குக்குப்போய் படித்தால் போதும்.
http://gopu1949.blogspot.com/2011/07/blog-post_18.html

ஆஹா! நல்லவேளை நான் தங்களிடம் இப்போது மாட்டாமல் தலை தப்பினேன் ...
ஹி.. ஹி.. ஹி.. ஹி.

இருப்பினும் தங்களின் அன்பான அழைப்புக்கு நன்றிகள்.

என்றும் அன்புடன் vgk

அந்நியன் 2 said...

நல்லா இருக்கின்றிகளா தாயே!

மிகத் தத்ரூபமாக உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விசயங்களை சொல்லி விட்டிர்கள் கூட என்னையையும் இழுத்து விட்டு விட்டிர்கள்.

என்ன செய்ய எழுதித்தானே ஆகனும்...

தொடர்கிறேன் அம்மா ஆனால் உங்கள் அளவிற்கெல்லாம் எழுத முடியாது தெரிந்தவற்றை எழுதுகிறேன்.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அனைத்தும் மூன்று முத்துக்கள்..

பலே பிரபு said...

அருமை அம்மா. இவ்வளவு காமெடி பண்ணி யாரும் எழுதல.

சிலதுக்கு நல்லாவே சிரிச்சேன்.....

RAMVI said...

மிகவும் அழகான சுவாரசியமான பதில்கள்
நான் இந்த மூன்று பதில்கள் தொடர்பதிவு ஏற்கனவே எழுதிவிட்டேன் அம்மா. எனது 20/7/11 ம் தேதிய பதிவில் இது பற்றி எழுதியுள்ளேன். என்னை தொடர்பதிவிர்க்கு அழைத்ததுக்கு நன்றி அம்மா.

A.R.ராஜகோபாலன் said...

ரசிக்கும் படியான
ரசனையான
எதார்த்தமான
பதில்கள்
அற்புதம்

வெங்கட் நாகராஜ் said...

சுவையான, விளக்கமான பதில்கள். பகிர்வுக்கு நன்றிம்மா...

Lakshmi said...

ஆமி வருகைக்கும்கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

அமைதிச்சாரல் நன்றி.

Lakshmi said...

விக்கி உலகம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

ஸ்ரீ ராம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உங்கபக்கமும்வரேன்.

Lakshmi said...

அமுதா நன்றிம்மா.

Lakshmi said...

கோபால்சார் நீங்கசொல்ரதுபோல ஊருக்குப்போனதால் பழைய ப்ளாக் எல்லாம் படிக்கமுடியல்லே. புதுசா
எழுத ஆரம்பித்து, எல்லா புது பதிவுகள்
படிப்பதிலும் பிசி ஆயிட்டேன் உங்களோட அந்தபதிவு படிச்சுட்டு வந்தேன் நல்லா சொல்லி இருக்கிங்க.

Lakshmi said...

அந்நியன்2 நான் உங்களுக்கு அழைப்பு அனுப்பி மறுமொழி எழுதுவதற்குள்ளேயே
நீங்க அழகா பதிவும் போட்டுட்டிங்க.
நல்லாஇருந்துச்சி.

Lakshmi said...

வேடந்தாங்கல் கருன் நன்றி.

Lakshmi said...

பலே பிரபு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Lakshmi said...

ரமா சாரிம்மா லேட்ட பதிவுலகத்துக்கு
வந்ததால பழையபதிவெல்லாம் பாக்க
முடியல்லே.

Lakshmi said...

A.R. ராஜ கோபாலன் நன்றி.

Lakshmi said...

வெங்கட் நன்றி

மனோ சாமிநாதன் said...

குழந்தைகளை அம்மாக்கள் ரொம்பவே டார்ச்சர் பண்ணுவது பிடிக்கலே
இது காம்பெட்டிஷன்வேர்ல்ட் அதனால இப்படிதான் பசங்க வளரனும்னு
அவங்க பிரியப்படராங்க. அந்தக்குழந்தைகளுக்குள்ளும் ஒரு மென்மையான
குழந்தை மனசு இருக்கும் என்பதை யோசிக்கரதே இல்லே.

அருமை! அருமை! நானும் எப்போதும் ஆதங்கப்படும் விஷயம் இது! நாமெல்லாம் சின்ன வயதில் ஆடிப்பாடி, விளையாடிய அந்த இனிமையை அவர்கள் அனுபவிப்பதேயில்லை!

அப்புறம் உங்கள் தைரியத்திற்கும் வெளிப்படையான எழுத்திற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்!! நீங்கள் மட்டும் இலக்கியங்கள் எல்லாம் முறையாகப் படித்திருந்தீர்களென்றால் எழுத்துலகில் எங்கேயோ போயிருப்பீர்கள்! அத்தனை சிறப்பாக உங்கள் எழுத்து இருக்கிறது!!

Lakshmi said...

மனோ மேடமுங்க பாராட்ட்டு எனக்கு கூச்சமா இருக்கு. நிறைய படிசிருந்தா நானும் ஈகோவில் மாட்டியிருப்பேன்
தப்பிச்சேன். ஹ ஹ ஹ

Rathnavel said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

மூணு மூணா சொன்னது செம கலக்கல் லக்‌ஷ்மிம்மா

சந்திரகௌரி said...

6 ஆவது விரலாகப் புத்தகம் இருக்கின்றது என்றால், உங்கள் ஆறாவது அறிவு எதையும் ஆராயும் தன்மையுள்ளது என்பதை சொல்லவே தேவையில்லை என்று நினைக்கின்றேன். குறையொன்றும் இல்லை எந்தக் குறையுமில்லாது தொடர வாழ்த்துகள்

• » мσнαη « • said...

ஐயோ 12மணி ஆச்செ இன்னும் சமைய்லே பண்ணலியே என்ன பண்ணனு யோசிக்கிரேன்

நேரா நேரத்துக்கு சரியாய் சாப்பிடுங்கோ அம்மா !!

Lakshmi said...

ரத்னவேல் சார் வருகைக்கு நன்றிங்க.

Lakshmi said...

ஸாதிகா நன்றிம்மா.

Lakshmi said...

சந்த்திரகௌரி முதல் வருகையா நன்றி.
அடிக்கடி வாங்க.

Lakshmi said...

மோஹன், முத்ல் முறையா உங்களைப்பார்க்கிரேன். சந்தோஷம். அடிக்கடி வாங்க.

• » мσнαη « • said...

இல்லை அம்மா..முன்பே (உங்கள் பயணத்துக்கு முன்பான பதிவு) வந்துள்ளேன்...நீங்களும் பதில் அளித்துள்ளீர்கள்

Lakshmi said...

மோஹன் எனக்கு நினைவில்லியேப்பா. உன் பின்னூட்டம் பாத்ததும் உன் ப்ளாக் வந்தேன். நோ போஸ்ட்டுன்னு இருக்கே. புதுசா எதுவும் எழுதலியா?

• » мσнαη « • said...

மன்னிக்கவும்அம்மா... முன்பு °•ℛŚℳ●•٠·˙ என்ற பெயரில் கமெண்ட் எழுதினேன் ..தற்போது Mohan ஆக மட்டும் !!!

Lakshmi said...

ஓ அதுதான் நினைவு இல்லே டரியல்
என்ன பேரு?ஹா ஹா ஹா

• » мσнαη « • said...

பதிவுலகத்துக்கு புதிது !!!! விரைவில் ....உங்கள் ஆசியுடன்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க லக்‌ஷ்மிம்மா..

உடம்பை கவனிச்சிக்கோங்க..

Lakshmi said...

மோஹன் ஆல் த பெஸ்ட் எழுத ஆரம்பிச்சுடுங்க. அனேக ஆசிகள்.

Lakshmi said...

முத்து லஷ்மி வருகைக்கு நன்றி

ஜெய்லானி said...

//நான் கம்யூட்டர்லஎழுதுவது சொந்தங்களுக்கு ஏன் பிடிக்க மாட்டேங்குதுன்னும் புரியல்லே.
அவஙகளுக்கு தமிழ் படிக்க வராததால இருக்குமோ???????//

ஹா...ஹா.... டைம் இருந்தா அவங்களுக்கும் கத்துக்குடுங்க :-))

Lakshmi said...

ஜெய்லானி கருத்துக்கு நன்றி. யாருக்கு
டைம் இருந்த??

Kutti said...

Nice write-up Laxmima! :)

தமிழ்வாசி - Prakash said...

அம்மா....அருமையா சொல்லியிருக்கிங்க.... உங்க பதிவுகள் எல்லாமே சுருக்கமா இங்கே தொகுப்பா இருக்குன்னு நினைக்கிறேன்...

கோமதி அரசு said...

நானும் ஊருக்கு எல்லாம் போய்விட்டு வந்து இன்னும் பதிவு போடவில்லை.

உங்களை பார்த்து நானும் சீக்கீரம் பதிவு போட மனம் விளைகிறது.

அது தான் உங்கள் வெற்றி.

அருமையான உண்மையான் பதில்கள்.

உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

Nagasubramanian said...

//நான் கம்யூட்டர்லஎழுதுவது சொந்தங்களுக்கு ஏன் பிடிக்க மாட்டேங்குதுன்னும் புரியல்லே.
அவஙகளுக்கு தமிழ் படிக்க வராததால இருக்குமோ???????//
:) :)

இராஜராஜேஸ்வரி said...

பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

மாய உலகம் said...

புத்தக பிரியர் மேல் எபொழுதும் எனக்கு பிரியமுண்டு... வாழ்த்துக்களம்மா

மாய உலகம் said...

//நாமல்லாம் என்ன பெரிய பிரபலமானவங்களா?சாதாரண மனிதர்கள் நாம என்ன செய்துட முடியும்?//

உண்மையில் ஒரு சமயம் பெரிய பிரபலமானவங்களா ஆகனுங்குறதுல வெறி இருந்துச்சு.... வர வர அது குறைஞ்சுப்போச்சு.. அது இயலாமையினால் அல்ல... ஜெயிக்கப்போராடும்போது சக மனிதர்களின் நடவடிக்கையினால்... அதனால் பிரபலமானவங்களைவிட நல்ல அன்பு உள்ளம் உள்ள நெஞ்சங்கள் தான் உயர்ந்தவர்கள் அம்மா

மாய உலகம் said...

இங்க்லீஷில் ப்ளூயன்சியாக பேச ஆசை.( யாரு அங்கே சிரிக்கரது)//

யாரும் சிரிக்கல ஹா ஹா தாராளமா பேசுங்க... ஹா ஹா

மாய உலகம் said...

எனி டைம் ஃபேவரிட் தயிர் சாதம் வடுமாங்கா.//


எனி டைம் ஃபேவரிட்டா..ஹா ஹா சாப்பிடுங்க...

மாய உலகம் said...

மூன்றுகள் அனைத்தும் படித்து ரசித்தேன்... நீங்கள் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ ஆண்டனை பிரார்த்திக்கிறேன் (ஏனென்றால் கோவில் போவது பிடிக்கவில்லை என சொல்லியுள்ளீர்கள் )புத்தகமே துணையாக இருக்கும் உங்களுக்கும் அந்த புத்தகங்களை எல்லாம் எழுதியவருக்கும் பாராட்டுக்களுடன் நன்றி

Lakshmi said...

மாய உலகம் ஒரே பதிவுக்கு இவ்வளவு
கமெண்ட்சா. நீங்கல்லாம் ரசிச்சு படிக்கும் அளவுக்கு ஏதோ எழுதியிருக்கேன்னு தோனுது. நன்றி.

நானானி said...

கீ-போர்ட் கத்துக்கணும், அதிலே பாட்டுக்கள் வாசிக்கணும்...அம்புட்டுதானே! நெட்லே போய் பாருங்க. சினிமா பாடல்கள வாசிக்க தோதாக அழகாக நோட்ஸ் கொடுத்திருக்கிறார்கள். சுட்டி வேணுமா..? கூகுள்ளாண்டவர் எதுக்கு இருக்கிறார்? சேரியா? அப்படியே நம்ம வீட்டுக்கும் கொஞ்சம் வர்ரது.

Lakshmi said...

நானானி வருகைக்கும் தகவலுக்கும்
நன்றி. நீங்க மெட்ராசா சொல்லுங்க
ஒருமீட்டிங்க் போட்டுடலாம்.

என்னை ஆதரிப்பவர்கள் . .