Pages

Monday, April 30, 2012

பாலக் கீரை

தேவையான பொருட்கள்.
 பாலக்கீரை ------------------    ஒரு கட்டு.
பயத்தம் பருப்பு-------------   100- கிராம்.
 துருவிய தேங்காய்--------    ஒரு மூடி
ஜீரகம்-----------------------   ஒரு ஸ்பூன்
 மிளகா வத்தல்----------    4
கடுகு-----------------------   ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு-----------  ஒரு ஸ்பூன்
கறி வேப்பிலை---------   ஒரு ஆர்க்
தேங்கா எண்ணை--------- ஒரு ஸ்பூன்
 உப்பு ----------------------------   தேவையான அளவு
 செய் முறை

                                       
பயத்தம்பருப்பை நன்கு கழுவவும்.
 கீரையை அலம்பி பொடிசாக நறுக்கி கீரை& பருப்பை தேவையான
தண்ணீர் ஊற்றி ஒரு பாத்திரத்தில் போட்டு குக்கரில் வேக வைக்கவும்.
                                                    
3, 4 விசில் வரும் வரை வேக விடவும்
  துருவிய தேங்காய், ஜீரகம், மிளகாய் சேர்த்து கொஞ்சம் தண்ணீர்
                                          
சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். குக்கர் ஆறி திறந்ததும்
 அரைத்த விழுதை வெந்த கீரையில் சேர்த்து உப்பும் சேர்த்து மத்தால் நன்கு கடையவும்
                                              
அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
                                          
                              
    தேங்கா எண்ணையில் கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளிக்கவும்.

                                
                                            
சாதம் சப்பாத்தி எல்லாவற்றுடனும் நல்லாஇருக்கும்.

35 comments:

மனோ சாமிநாதன் said...

குறிப்பு மிகவும் நன்றாயிருக்கிறது லக்ஷ்மிம்மா! எப்போதும் செய்யும் செய்முறை தான் என்றாலும், உங்கள் குறிப்பில் தேங்காய் நிறைய இருப்பதால் வித்தியாசமான சுவையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

chicha.in said...

hii.. Nice Post Great job.

Thanks for sharing.

கோமதி அரசு said...

பாலக் கீரை செய்முறை விளக்கம், படங்கள் எல்லாம் அழகு.சுவையும் அருமையாக இருக்கும்.
நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான ருசிகரமான கீரையைப்போன்ற பசுமையான பதிவு.

பாராட்டுக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

அருமையாயிருக்கும்மா.. பகிர்வுக்கு நன்றி.

RAMA RAVI (RAMVI) said...

அப்படியே எடுத்து சாப்பிட்டு விடலாம் போல இருக்கு,படங்கள் அற்புதம்.நான் பாலக் கீரை செய்ததில்லை.நீங்கள் சொல்லியிருப்பதை பார்த்தால் சுலபமாக செய்துவிடலாம் போல இருக்கு அம்மா.செய்து பார்த்து விடுகிறேன்.

இராஜராஜேஸ்வரி said...

வித்தியாசமான சுவையான பகிர்வு..

ADHI VENKAT said...

எப்போதும் செய்வது தான் என்றாலும் தங்களுடைய குறிப்பில் மேலும் சுவை கூடுகிறது. பகிர்வுக்கு நன்றிமா.

நிரஞ்சனா said...

எனக்கு இது புதுசாத்தான் இருக்கு. ட்ரை பண்ணிப் பாத்துடறேன்...

Jaleela Kamal said...

மிக அருமையான பாலக் கீரை லஷ்மி அக்கா
இங்கு பாலக் தான் நிறைய கிடைக்கும்.
மனோ அக்கா சொல்வது போல் தேங்காய் அதிகமாக இருக்கும் தேங்காய் சுவையும் அருமையாக இருக்குமே

வெங்கட் நாகராஜ் said...

பாலக் சப்ஜி... எனக்கு மிகவும் பிடித்த ஒன்று....

பகிர்வுக்கு நன்றிம்மா.

ஹேமா said...

உறைப்புக் குறைவா நல்லாயிருக்கும்போல இருக்கே !

Avargal Unmaigal said...

பாலக் கீரை செய்முறை விளக்கமும் அதற்கேற்ற படங்களும் மிக அழகாக வந்துள்ளன. சமையல் செய்ய தெரியாத பெண்களூக்கு இந்த விளக்கம் மிக உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இதை நீங்கள் தனிவலைதளமாக ஆரம்பித்து போட்டால் மேலும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.

கடைசியில் ஒரு கேள்வி எங்கள் வீட்டில் செய்யும் முறையை எப்படி அறிந்து கொண்டீர்கள். ??????

Avargal Unmaigal said...

பாலக் கீரை செய்முறை விளக்கமும் அதற்கேற்ற படங்களும் மிக அழகாக வந்துள்ளன. சமையல் செய்ய தெரியாத பெண்களூக்கு இந்த விளக்கம் மிக உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இதை நீங்கள் தனிவலைதளமாக ஆரம்பித்து போட்டால் மேலும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.

கடைசியில் ஒரு கேள்வி எங்கள் வீட்டில் செய்யும் முறையை எப்படி அறிந்து கொண்டீர்கள். ??????

குறையொன்றுமில்லை. said...

மனோ மேடம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எங்க வீட்ல தேங்காய் நிரையா சேர்த்தாதான் பிடிக்குது.

குறையொன்றுமில்லை. said...

CHACHI.IN வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

அகிலா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோமதி அரசு வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோபால்சார் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

சாந்தி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரமா எங்க போனீங்க ரொம்ப நாளா கானோமே. இந்த முறையில் பாலக் நல்லா டேஸ்டா இருக்கும். செய்து பாருங்க.

குறையொன்றுமில்லை. said...

இராஜராஜேச்வரி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோவை2தில்லி எல்லாருமே இதுபோலதானே செய்வோம் இல்லியா நன்றி

குறையொன்றுமில்லை. said...

நிரஞ்சனா சீக்கிரமே செய்து பாருங்க நல்லா இருக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஜலீலாகமல் இப்ப பசங்களுக்கு பாலக் பனீர் தான் பிடிக்குது. கீரைன்னாலே ஓடிடுவாங்க அதனால தேங்கா கொஞ்சம் கூடவே சேர்க்கவேண்டி இருக்கு. நன்றி

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஹேமா வருகைக்கு நன்றி எனக்கு உறைப்பு கூட வேனும் வீட்ல உள்ளவங்களுக்கு குறைவா வேனும் என்ன செய்ய?

குறையொன்றுமில்லை. said...

அவர்கள் உண்மைகள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஆலோசனைகளுக்கு நன்றி ஏற்கனவே 3- தளங்கள் வச்சுண்டு குழம்பிண்டு இருக்கேன் அதில் இன்னொன்னா சமாளிக்க முடியாதுங்க. உங்க வீட்டிலும் பாலக் இப்படித்தான் செய்வீங்களா?

ராஜி said...

பாலக் கீரைல இதுவரை ஏதும் செஞ்சதில்லை. உங்க ரெசிபி பார்த்து செய்யனும்ன்னு ஆசை வந்திருக்கு. செஞ்சு பார்த்துடுறேன் அம்மா.

ஸாதிகா said...

அருமையான சைட் டிஷ்.

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா வருகைக்கு நன்றி

கே. பி. ஜனா... said...

Looks a tasty and delicious dish! And nutritious too!

குறையொன்றுமில்லை. said...

கே. பி. ஜனா வருகைக்கு நன்றி

radhakrishnan said...

என்னம்மா , தீவிரமாக சமயல் குறிப்பில்
இறங்கிவிட்டீர்கள்? இனிமேல் எப்போது
சமயல் கற்றுக் கொள்வது?பரவாயில்லை.
நல்ல பணிதான். நன்றி அம்மா

குறையொன்றுமில்லை. said...

ராதா கிருஷ்னன் வருகைக்கு நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .