Pages

Tuesday, August 23, 2011

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் (2)

இரவு அவால்லாம் அந்த நீண்ட ஹாலிலேயே ஒரு போர்வை விரிச்சுண்டு
 கீழேயே படுத்துட்டா. எனக்கு கடந்த 20- வருஷமா ஆர்த்த்ரைட்டீஸ் ப்ராப்லம்
 உண்டு.    கால முட்டி மடக்கவே முடியாது. அதனால கீழ உக்காந்து எழுந்துக்கவோ கீழே படுக்கவோ முடியாது. கட்டில்லதான் படுக்கமுடியும்.
 ஒரு ரூம்ல ஒரு இரும்பு கட்டில் போட்டிருந்தா நான் அதில் படுத்தேன். வெண்டி
லேஷனே இல்லே. நல்ல வேர்வைதான். அப்படியும் அலைச்சல் களைப்பு
(ஃப்ளைட்ல வந்துட்டு களைப்பாம்). தூங்கிட்டேன். அவங்கல்லாம் மறு நாள்
 சீக்கிரமே எழுந்து அவங்க வேலை தொடங்கிட்டாங்க. நான் இருக்கும் ரூமில் வெளிச்சமோ சப்தமோ எதுமே வல்லே. 9 மணி வரை தூங்கிட்டேன். 9.30-க்கு
 கரெண்ட் போச்சு. அப்பதான் முழிப்பு வந்தது. யாரும் என்னை எழுப்பவும் இல்லே.கரண்ட்போனாதன்னாலமுழிப்புவந்துடும்னுதான்எழுப்பலேன்னுசொல்ராங்க.



அப்பதான் வீட்டை நல்லா வெளிச்சத்தில் பாக்கமுடிந்தது. நீள் காரிடாரின்
 பக்கவாட்டில் சின சின்னதாக 5 ரூம்கள். ரெண்டு ரூமை கட்டில்போட்டு பெட் ரூம்போல வச்சிருந்தாங்க. அடுத்து பூஜை ரூம் அங்க இல்லாத சாமி படங்க
ளே இல்லை. அந்த்சாமி ரூம் பூராவும் பழைய்கால பித்தளை பாத்திரங்களான
 கொப்பரை ,அண்டான் , குண்டான் ,உருளின்னு நிறையா இருந்தது. இதெல்லாம் பாத்தேவருஷக்கணக்காகுது.பூஜா பாத்திரங்கள் கூட எல்லாம் பித்தளையில்தான் . அதுக்கு அடுத்து சின்னதா ஒருகிச்சன். அதுக்குபக்கமாவே
 இன்னொரு பெரிய மாஸ்ட்டர் கிச்சன்.அங்கு ஆட்டுக்கல், அம்மிக்கல் வாஷிங்க் மிஷின் , வாஷ்பேசின்,குழாய் கேஸ் அடுப்பு என்று பழமையும்
 புதுமையும் கலந்து இருந்தது. அதன்பின்னே பாத்ரூம், டாய்லெட்.பக்கவாட்டில்
 கொல்லைப்புர கதவு. வாசக்கதவும் கொல்லைக்கதவும் நாள் பூரா தொறந்தே
 இருக்கு நாள்பூரா.

வாசலில் சாணி தெளித்து கோலம் போட்டிருந்தா. காலையிலேயே குளித்து
 மடியாக சமையலும் ரெடியா இருந்தது. நேத்து ஏகாதசின்னு அவால்லம்
 சாப்பிடல்லே இல்லியா. இன்னிக்கு துவாதசி பாரணை. சீக்கிரமே சாப்பிடு
 வாளாம்.கொல்லைப்புறம் போயி பாத்தேன். பெரியகிணறு நிறைய தண்ணீருடன், பக்கத்தில் துனி துவைக்கர கல்லு சுற்றி வர தென்னை, வாழை மா என்று மரங்கள். முன்புறமாக பூச்செடிகள், எலுமிச்சை என்று பெரிய
 தோட்டம்.இங்கதான் நல்ல காத்தோட்டமாகவும் வெளிச்சமாகவும் இருந்தது.
 உள்ளே அவ்வளவா வெளிச்சமே இல்லே. எல்லா ரூமும்கொஞ்சம் இருட்டாதான் இருக்கு. 50 வருஷமா இங்கே இருக்காளாம். நல்ல பழங்கால
 வீடு பழங்கால மர பீரோ அதுபோல பழய சாமான்கள்  நிறம்பி இருந்த்து வீடு
 பூராவும். நான் பல்தேய்க்க கிணத்தடிக்கு போனேன். அங்கேயும் ஒரு குழாய்
இருந்தது. வெட்டவெளியில் பல் தேய்ப்பது புது அனுபவம். அப்படியே ஒரு
 கிராமத்து சூழ் நிலைதான். காப்பி வாசனை எல்லாரூமிலும் வந்தது. நான்
 காபி குடிச்சதும் அவாள்ளாம் எச்சுமி குளிச்சுட்டுவா சாப்பிடலாம்னா. ஐயோ
 (10 மணிக்கு சாப்பாடா? என்னால முடியாதம்மா.) காலை 10 மணிக்கு காபிகூட
 4 மேரி பிஸ்கெட் தான் எப்பவுமே என் ப்ரேக் ஃபாஸ்ட்.

 நீங்கல்லாம் சாப்பிடுங்கோ நான் கொஞ்ச நேரம் எழுதிட்டு குளிச்சுட்டு ஒரு
 மணிக்கு சாப்பிடரேன்னு சொன்னேன். என்னது குழந்தைபோல பிஸ்கெட்
 சாப்பிடரேன்னு சொல்ரே. காலல ஆகாரம் சாப்பிடர பழக்கம்னா நாலு
இட்லியோ, நாலு தோசையோ பண்ணித்தரேன் சாப்பிடுன்னு சொன்னா.
 இல்லே, பிஸ்கெட்டே போரும் நீங்கல்லாம்சாப்பிடுங்கோன்னேன்.உன்னை
 விட்டுட்டு நாங்க எப்படி சாப்பிடானு சொல்ரா. அதனால என்ன நேத்து நீங்கல்
ல்லாம் பட்டினி இல்லியா நீங்க சீக்கிரம் சாப்பிடுங்கோன்னு ரொம்ப சொன்னதும் அரைமனசா அவால்லாம் சாப்பிட உக்காந்தா. இவா வீட்ல கம்ப்
யூட்டர் கிடையாது. எனக்கு பார்த்தது, கேட்டது ரசித்தது எல்லாம் உடனுக்குடனே எழுதி வச்சிக்கணும். எப்பவுமே ஒரு பெரிய நோட்டும் 4,5,
பேனாக்களும் கையிலே கொண்டு போயிடுவேன்.அதை எடுத்துண்டு பின்
பக்கம் கிணத்தடியில் இருந்த தோய்க்கர கல்லில் உக்காந்து எழுத ஆரம்பிச்சேன்



                                           



 அந்த வீட்டில் எனக்கு ரொம்ப பிடித்த இடமே இந்த கிணத்தடியும் துவைக்கிர
கல்லும்தான்.மிகவும் ரசனைக்குறிய இடம்.அங்க போயி உக்காண்டுட்டேன்
எழுத உக்காந்தா நேரம் போற்தே தெரியாது எனக்கு. சுற்றுப்புறம் சூழ் நிலை
 எதுவுமே தெரியாது. கூடவே மொபைலில் பாட்டும்போட்டுண்டு உக்காந்தேன்
அருமையா காத்து வீசிண்டு இருந்தது.எவ்வளவு நேரம் எழுதிண்டு இருந்தேன்னே தெரியல்லே. என் ஃப்ரெண்ட் அவர்களுக்கெல்லாம் சாப்பாடு
 பரிமாறி கூட மாட உதவிகள் செய்துண்டு இருந்தா. அம்சான்னு ஒரு வேலைக்
 காரப்போண்ணு வந்து எல்லா வேலைகளும் செய்தா. அவளுக்கும் காபி டிபன் சாப்பாடுன்னுகொடுக்கரா. வீட்ல ஒரு மனுஷி போலவே நடத்தரா. அவளும்
 சந்தோஷமா முகம் சுளிக்காம எல்லா வேலைகளும் நல்லா செய்து கொடுக்
 கரா.12 மணி ஆச்சுடீ குளிக்கப்போன்னு சொல்லவும் தான் டயம் ஆனதே
 தெரிஞ்சது. உள்ள பாத்ரூமில் தண்ணீர்போகும் ஹோல் பெரிசா இருந்தது.
 அது வழியா எலியோ பெருச்சாளியோ எந்த நிமிஷம் வந்துடுமோன்னு
 பயந்துண்டே குளிக்க வேண்டி இருந்த்தது. வேலைக்காரியும் அம்மா துணி
 லாம்  அப்படியே வச்சுடுங்க நாந்துவைச்சு போடுரேனு சொன்னா.குளித்து
 வந்ததும் நானும் அத்தையும் சாப்பிட்டோம்.


54 comments:

ஆமினா said...

அழகான நினைவுகள்

உங்களோட அந்த கிணத்தடில செல்போன் பாட்டு கேட்டுண்டே கத கேக்குற மாதிரி இருக்கு

சுசி said...

பதிவு மிகவும் அருமை. அடுத்த முறை சென்னை வரும் போது கட்டாயம் எங்கள் வீட்டுக்கும் வரவேண்டும். nighty உங்களுக்கு சூப்பராக இருக்கிறதம்மா.
நீங்கள் ஒரு மார்டன் பாட்டி.

ஸாதிகா said...

லக்‌ஷ்மிம்மா..உங்க கூடவே நாங்களும் வந்து பக்கத்தில் உட்கார்ந்து பார்த்ததைப்போலவே அத்தனை யதார்த்தமாக எழுதி இருக்கீங்க.வீட்டையும் சூழ்நிலையையும் வர்ணித்த விதம் சென்னையில் இப்படி வீடுகள் கூட இன்னும் உண்டோ என்று வியப்பாக உள்ளது.தொடருங்கள் லக்‌ஷ்மிம்மா...சுவாரஸ்யமாக உள்ளது.

அமுதா கிருஷ்ணா said...

பார்த்தது, கேட்டது ரசித்தது..

நானும் இந்த ரகம் தான்.படித்து அனுபவித்தேன்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

அனுபவங்கள் அருமையா பகிர்ந்திருக்கிங்க... இன்னும் தொடரட்டும்.

மாய உலகம் said...

ஒரு தெளிவான கதைக்கான ஸ்க்ரிப்ட் வித் செட் ப்ரோப்பர்ட்டிஸ் உடன் அனுபவத்தை பகிரந்த விதம் பதிவை படித்ததை போல் அல்ல நேரில் நானே பார்த்தது போலிருந்தது... பதிவையும் பதிவுலக நண்பர்களையும் எந்த அளவுக்கு நீங்கள் நேசிகிறீர்கள் என்பதற்கு உங்களது ஈடுபாடே உதாரணம்..... வாழ்த்துக்கள் அம்மா

Jaleela Kamal said...

எனக்கும் கிணத்தடி அந்த துணிதுவைக்கும் கல் ரொம்ப பிடிக்கும். சின்னதில் வெளியூரில் இருந்தபோது நாங்க இருந்த இடம் இப்ப பார்த்ததும் பழைய ஞாபகம்.

இப்ப எங்க கிணத்தடி பார்கக் முடியுது

சக்தி கல்வி மையம் said...

அருமையான அனுபவங்கள்..

HVL said...

ரசிக்கும்படியா இருக்கு உங்க பதிவு.

வெங்கட் நாகராஜ் said...

சென்னையில் இப்போதும் இது போன்ற வீடுகள் இருப்பது அதிசயம். பல வீடுகள் இடித்து அடுக்கு மாடி குடியிருப்புகள் ஆக்கி விட்டனர்.

நல்ல பகிர்வுக்கு நன்றிம்மா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல நல்ல அனுபவங்களை அழகாகப் பொறுமையாகப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

ADHI VENKAT said...

கிணற்றடி, தோய்க்கற கல் என் அத்தை வீட்டு ஞாபகம் வந்து விட்டது.

நல்ல பகிர்வும்மா. தொடருங்கள்.

கோகுல் said...

ரசிச்சு எழுதி இருக்கீங்க !தொடருங்கள்!

Anonymous said...

அழகான நினைவுகள்...
இன்னும் தொடரட்டும்...

இராஜராஜேஸ்வரி said...

அழகான நினைவுகள்

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு. அருமையான வர்ணனை. வாழ்த்துக்கள் அம்மா.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html

சம்பத்குமார் said...

தங்களது தளத்தில் இன்றுதான் வந்துள்ளேன்...

மெட்ராஸ் பயணம் படிக்கத் திகட்டாத பசுமை நினைவுகள்

அதில் மாற்றம் ஏதும் இல்லை

பாசத்துடன் புதிய வரவாக...
சம்பத்

கே. பி. ஜனா... said...

பழைய வீட்டு கிணற்றடியில் கையில் பேப்பர் பேனா காதுக்கு மெல்லிசை ...ஆஹா அந்த அனுபவமே தனி!
ரசனைக்குரிய விவரிப்பு!பாந்தமான சொற்கள்!

நானானி said...

துவைக்கிற கல்லும் அதன் குளிர்ச்சியும் நினைத்தாலே சுகம்.

Anonymous said...

வார்த்தைகள் படிக்கும்போது சலிப்பை தராமல் வாசிக்க வைக்கின்றன...

GEETHA ACHAL said...

உங்களுடைய நினைவுகள் அனைத்தும் அருமை...

குறையொன்றுமில்லை. said...

ஆமி முதல் ஆளா என்கூட
கிணத்தடில உக்காந்து கதை
கேக்க வந்தீங்களா. வாங்க.
போரடிக்காம எவ்வளவு நேரம்
ஆனாலும் கதை பேசலாம்
ஓக்கேவா.?

குறையொன்றுமில்லை. said...

தானைத்தலைவி நீங்க மெட்ராசில்
எங்க இருக்கீங்க சொல்லுங்க.
சீக்கிரமே மறுபடி வரப்போரேன்
நாம சந்திக்கலாம். நான் உண்
மையிலுமே மாடர்ன் பாட்டிதான்.
நைட்டி மட்டுமில்லே வெளில
சுத்தும்போது ஸலவார் கம்மீஸ்
போட்டுதான் சுத்தினோம்.அந்த
போட்டோல்லாம் போட்டு உன்களை
யெல்லாம் கஷ்ட்டப்படுத்தவேனாம்னு
விட்டுட்டேன். வருகைக்கும் கருத்து
கும் நன்றிம்மா. ரொம்ப வருஷமா
நார்த்பக்கமே இருப்பதாக்ல இந்த
ட்ரெஸ் எல்லாம் பழக்கமாச்சும்மா

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா, வருகைக்கும் கருத்துக்கும்
நன்றிம்மா.

குறையொன்றுமில்லை. said...

அமுதா வருகைக்கு நன்ரிம்மா.

குறையொன்றுமில்லை. said...

பிரகாஷ் வருகைக்கு நன்றி.

குறையொன்றுமில்லை. said...

மாய உலகம் அழகா பின்னூட்டம்
கொடுத்திருக்கீங்க நன்றி.

குறையொன்றுமில்லை. said...

ஆமா ஜலீலா அந்த கிணத்தடி
உண்மையிலுமே அருமையான
இடம்தான். வருகைக்கு நன்றிம்மா.

குறையொன்றுமில்லை. said...

கருன் வருகைக்கு நன்றி.

குறையொன்றுமில்லை. said...

H.V.L.வருகைக்கு நன்ரிங்க.

குறையொன்றுமில்லை. said...

ஆமா, வெங்கட், எனக்கு கூட
நாம சென்னையில்தான்
இருக்கோமான்னு தோனிச்சு.
வருகைக்கு நன்றி.

குறையொன்றுமில்லை. said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கோகுல் வருகைக்கு நன்றி.

குறையொன்றுமில்லை. said...

ரெவெரி, வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

இராஜராஜேஸ்வரி, நன்றிம்மா.

குறையொன்றுமில்லை. said...

ரத்னவேல் ஐயா,வருகைக்கு
நன்றிங்க.

குறையொன்றுமில்லை. said...

சம்பத்குமார், முதல் வருகைக்கு
நன்றி. இனி அடிக்கடி வருவீங்க
வாங்க.

குறையொன்றுமில்லை. said...

கே.பி, ஜனா, வர்கைக்கும்
கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

கே.பி, ஜனா, வர்கைக்கும்
கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

கே.பி, ஜனா, வர்கைக்கும்
கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

நானானி, உங்களையும் இங்க
முதல் முறையா பாக்கரேன்
சந்தோஷம். வாங்க. நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஷீ நிசி, வருகைக்கு நன்றி
முதல் முறை வரீங்களா/

குறையொன்றுமில்லை. said...

கீதா ஆச்சல் வருகைக்கு நன்றி

virutcham said...

உங்களை மாதிரி வயசானவங்க நேரத்தை வீணாக்காம இப்படி உங்கள் அனுபவங்களை பொறுமையா அருமையா எழுதுவது சந்தோஷமா இருக்கு. கிராமத்து கிணற்றடியில் நைட்டி போட்ட பாட்டி...

குறையொன்றுமில்லை. said...

VIRUTCHAM, வருகைக்கு நன்றி
பாட்டின்னா நைட்டி போடக்கூடாதா
என்ன?

M.R said...

தங்கள் ரசிப்பு நெஞ்சில் புதைந்து கிடக்கும் இனிப்பு. எப்பொழுது அசை போட்டாலும் இனிக்கும் .பதிவு அருமை .

குறையொன்றுமில்லை. said...

M.R. நன்றி. வருகைக்கும் கருத்துக்கும்

RAMA RAVI (RAMVI) said...

நல்ல அனுபவம் அம்மா.இந்த காலத்தில் யார் வாசலில் சாணி தெளிக்கிரார்கள்?பித்தளை பாத்திரமெல்லாம் வைத்திருக்கிறார்கள். நீங்க வீட்டை பற்றி வர்ணனை செய்திருப்பது அதை நேரிலேயே பார்ப்பது போல இருக்கு.

குறையொன்றுமில்லை. said...

ஆமா ரமா இப்ப யாரு வீட்ல
வாசல் இருக்கு?/////

மாதேவி said...

கிராமத்து மணத்தில் மூழ்கிவிட்டோம்.

குறையொன்றுமில்லை. said...

மாதேவி வருகைக்கு நன்றி.

நிரூபன் said...

கிணற்றடியில் பத்திரிகை படித்து, சுற்றுப் புறச் சூழல் அழகில் மனதைப் பறிகொடுத்த நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறீங்க.

அடுத்த பாகத்தில் சந்திக்கிறேன்.

J.P Josephine Baba said...

சூப்பர் அம்மா!

குறையொன்றுமில்லை. said...

j.p. josephien ba ba வருகைக்கு நன்றி. அடிக்கடி வாங்க.

என்னை ஆதரிப்பவர்கள் . .