Pages

Monday, July 2, 2012

கடலைப்பிரதமன்.

தேவையான பொருட்கள்.

 கடலைப்பருப்பு---------------    200 கிராம்.
 ஜவ்வரிசி ------------------------  100 கிராம்.
 வெல்லம் -----------------------   200 கிராம்.
 முந்திரி, கிஸ்மிஸ் ----------  கொஞ்சம்.
 ஏலப்பொடி--------------------- கொஞ்சம்
 பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய்துண்டுகள் ------  ஒரு கைப்பிடி
                                   
 நன்கு காய்ச்சி ஆறவைத்த பால்----------------   250 மில்லி
 செய் முறை
                               
 கடலைப்பருப்பை நன்கு கழுவி குக்கரில் 4 ,5 விசில் வருமளவுக்கு குழைய வேக விடவும். ஜவ்வரிசியை நன்கு கழுவி கடாயில் வேக விடவும். அடியில் ஒட்டாமல் அடிக்கடி கிளறி விடவும். கண்ணாடிபோல் நன்குவெந்ததும் வெந்த
கடலைப்பருப்பயும் வெல்லத்தையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
                                           
வெல்ல வாசனை போக கொதிததும் கீழே இறக்கி காய்ச்சின பால் சேர்த்து நன்கு கலக்கவும்.முந்திரி கிஸ்மிஸ்தேங்கா நெய்யில் சிவக்கவறுத்து மேலாக ப்போடவும். ஏலப்பொடி தூவவும்.மிகவும் சுவையான கடலைப்பிரதமன் ரெடி.இதற்கு தேங்காய்ப்பால் சேர்த்தால் சுவை கூடும். கொலஸ்ட்ரால் ப்ராப்ளத்துக்குபயந்து வெரும் பால் சேர்க்கிரோம்.வெரும் கடலைப்பருப்பு மட்டும் சேர்த்து செய்தால் நீர்க்க இருக்கும் அதனால ஜவ்வரிசி சேர்க்கனும்  சேர்ந்து திக்காக இருக்கும். சுவையாகவும் இருக்கும்.
                                                

28 comments:

ஸாதிகா said...

வாவ்..பிரதமன் வாசனை மூக்கை துளைக்கிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

இவ்வளவு சிம்பிளா இருக்கே ... வீட்டில் செய்ய சொல்லி விடுவோம். நன்றி அம்மா ! (TM 3)

MARI The Great said...

பசியை தூண்டுகிறது!

Avargal Unmaigal said...

பக்குவம் நன்றாக இருக்கிறது. கூடிய சீக்கிரம் செய்து பார்த்துவிட வேண்டியதுதான்

சாந்தி மாரியப்பன் said...

எங்க வீட்லயும் தேங்காப்பால்தான் சேர்ப்போம். அதுவும் மூன்று முறை பாலெடுத்து முதலிரண்டையும் கடலைப்பருப்புடன் சேர்த்து அதுலதான் பருப்பு வேகும். கடைசியில் இறக்கப்போகும்போது முதலாம் பாலைச் சேர்த்து கொஞ்சம் இறுகினாற்போல் வந்ததும் இறக்குவோம். வாசனை பிச்சுட்டுப்போகும் விருந்துல :-)

கே. பி. ஜனா... said...

பார்க்க நல்லா இருக்கு!

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்புக்கு நன்றி லஷ்மிம்மா.

சாந்தி சொல்வது போல் தேங்காய் பால் சேர்க்கும் வழக்கம் உண்டு.

@ சாந்தி,

/முதலிரண்டையும்/

பின்னிரண்டையும்..., இல்லையா? சொதிக்கும் அப்படிதானே செய்வோம்:)?

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா முதல் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

திண்டுக்கல் தனபாலன் வருகைக்கு நன்றி வீட்டில் செய்து பாக்க சொல்லுங்க நல்லா இருக்கும்.

குறையொன்றுமில்லை. said...

வரலாற்று சுவடுகள்வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

அவர்கள் உண்மைகள் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஆமா சாந்தி இந்த பாயசம் வாசனை ருசி எல்லாமே நல்லாதான் இருக்கும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராமலஷ்மி வருகைக்கு கருத்துக்கு நன்றி

கோமதி அரசு said...

எனக்கு பிடித்தது.
மிக ருசியாக இருக்கும்.
தேங்காய் பால் சேர்க்கலாம், தேங்காய்பல்லை நெய்யில் வறுத்து கொட்டினால் சுவையும், வாசனையும் மனதை அள்ளும்.
உங்கள் குறிப்புகள் அருமை.

சாந்தி மாரியப்பன் said...

@ ஆமா ராமலக்ஷ்மி,.. கடைசி இரண்டு முறை எடுத்த பாலில்தான் வேகும். சேமியா, அடை, பாசிப்பயிறு பாயசத்தையும் இதே முறையில் செய்யலாம். கடலைப்பருப்பு பிரதமன் எங்கூர்ல சப்ஸ்டிட்ட்யூட் மாதிரி,.. சக்கைப்பழம் இல்லாத சமயங்களில் கை கொடுக்கும் :-))

ராமலக்ஷ்மி said...

@ அமைதிச்சாரல்,

எங்க ஊர்ப்பக்கமும் பாசிப்பயறு பாயாசம்தான் ஃபேமஸ். அப்புறம்தான் கடலைப்பருப்பு:).

குறையொன்றுமில்லை. said...

கோமதி அரசு வருகைக்கு நன்றி. தேங்கா பல்லு நெய்யில் வறுத்து போடனும்னு குறிப்பில் சொல்லி இருக்கேனே

குறையொன்றுமில்லை. said...

சாந்தி மறு முறை வந்து விளக்கம் கொடுத்ததற்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராமலஷ்மி நன்றி

கோமதி அரசு said...

முந்திரி கிஸ்மிஸ்தேங்கா நெய்யில் சிவக்கவறுத்து மேலாக ப்போடவும்//


தேங்கா குறிப்பை பார்த்து விட்டேன்.

வெங்கட் நாகராஜ் said...

பார்க்கவே நல்லா இருக்கும்மா....

மும்பை வரும்போது செஞ்சு தருவீங்க தானே.... :)

Mahi said...

புது காம்பினேஷனா இருக்கும்மா! எங்க ஊர்ப்பக்கம் வெறுமனே கடலைப் பருப்பு பாயசம், ஜவ்வரிசி பாயசம் செய்வாங்க. இது புதுசா இருக்கு. சீக்கிரம் செய்து பார்க்கிறேன். குறிப்புக்கு நன்றி!

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் மும்பை வாங்க கண்டிப்பா செய்து தரேன்

குறையொன்றுமில்லை. said...

மஹி ஆமா கடலைப்பருப்பும் ஜவ்வரிசியும் சேர்த்து பண்ணமாட்டாங்க ஆனா இது நல்ல சுவையாகவும் திக்காகவும் இருக்கு

குறையொன்றுமில்லை. said...

கோமதி அரசு நன்றி

Geetha Sambasivam said...

தேங்காய்ப்பால் சேர்த்து அரிசிப் பாயசம் தான் செய்திருக்கேன். இது புதுசா இருக்கே! கடலைப்பருப்பு தான் கொஞ்சம் அலர்ஜி! :)))

குறையொன்றுமில்லை. said...

கீதா வாங்க நன்றி

மாதேவி said...

பிரதமன் சுவையாக இருக்கின்றது.

என்னை ஆதரிப்பவர்கள் . .