Pages

Tuesday, October 25, 2011

1960- ல் தீபாவளி (தலைதீபாவளி)













 தலைதீபாவளி கல்லிடைக்குறிச்சியில்தான் கொண்டாடினோம். கல்யாணம் ஆகி 6-வது மாசமே தீபாவளி வந்தது.பூனாவிலிருந்து நான்
 கணவர், மாமியார், மாமனார், மாமியாரின் அப்பா என ஐவரும் கிளம்பி
 கல்லிடை போனோம். எங்கதாத்தா அஞ்சு பேருக்கும் பர்ஸ்ட் க்ளாசில்
 டிக்கட் எடுத்துதந்தாங்க. பூனா டு மெட்ராஸ் ஒன்னரை நாள் ஆகும் மெட்ராஸ்டு திருனவேலி ஒன்னரை நாள் ஆகும். திருனவேலி டு கல்லிட
 பாசஞ்சர்தான்.புகுந்த வீட்டில் வெளியில் எதுவும் வாங்கி சாப்பிட மாட்டாங்க. வீட்லேந்தே (பத்தில்லாம) சப்பாத்தி, பூரி,சட்னி,அவல் வெல்லம் கலந்து என்று மூனு  நாளுக்கு தேவையான உணவுகள் தயார் செய்து எடுத்துக்கனும். அது தவிர ரெண்டு ப்ளாஸ்க் நிறைய  சூடுதண்ணி கொதிக்க கொதிக்க எடுத்துண்டு பால் பவுடர், ப்ரூ காபி பொடி ஜீனி எல்லாமும் தனியே எடுதுப்போம் இடையில் கொறிக்க கொஞ்சம் டிட்பிட்ஸ் எல்லாமும் உண்டு.
அந்தக்கால பர்ஸ்ட்க்ளாஸ் கம்பார்ட்மெண்ட் எல்லாம் தனி ரூம்போல விஸ்தாரமா இருக்கும் அட்டாச்டு பாத்தும் இருக்கும்.


 ஒருவாரம் முன்பே ஊர்போனோம். எங்க வீடு கூட்டுக்குடும்பம். வீடு நிறைய மனுஷா இருப்பா எப்பவுமே. இப்ப பண்டிகை நாள். கேக்கவே வாண்டாம். பட்சணங்கள் பண்ணஎன்று அக்கம்பக்கத்தில் உள்ளவங்க தூரத்து சொந்தங்க எல்லாரும் எங்க வீட்டில் இரு ந்தாங்க. அதுவும் தலை தீபாவளி இல்லியா. 4-ஸ்வீட்ஸ், 4-காரம் என்று அமர்க்கள்மா தயார்பண்ண வீட்டின் கொல்லைப்புறமாக 4 கோட்டைஅடுப்புதோண்டிபட்சண ஏற்பாடுகள் எல்லாம் அமர்க்களமா பண்ணிட்டு இருந்தாங்க.வந்தவங்க எல்லாருக்குமே நம்ம வீட்லதான் விருந்து சாப்பாடு ரெடிபண்ணூவாங்க.பந்தி பந்தியா சாப்பாடு, டிபன் எல்லாமே ஒருபக்கமா ரெடி ஆகும்.சிரிப்பு கேலி என்று கல்யாணகல,கலப்புதான் வீடுபூராவும்.

பெண்ணு மாப்பிள்ளைக்கு பட்டுத்துணிமணிகள், சம்பந்திக்காரங்களுக்கு துணிமணிகள் எல்லாம் எடுத்திருந்தாங்க. சிவகாசி போயி ஒரு வெடி கடையே கொண்டுவந்துட்டாங்க.ஒருவாரம் முன்பிருந்தே எங்க தெரிவில் வேர யாரு வீட்லயும் சமைக்கவே மாட்டாங்க எல்லாருக்குமே எங்க வீட்லதான் சாப்பாடு.தாத்தாவுக்கு நான் முதல் பேத்தி அதனால ரொம்ப பிரியம் பாத்துப்பாத்து ஒன்னொன்னும் செய்தாங்க.கொல்லைப்புறம் ஒரு ரூம்கட்டி நகை பண்ணற ஆசாரியையும் வீட்டுக்கே வரவச்சு வைர மோதிரம் அட்டிகைன்னு பண்ணீனாங்க.வீட்லயே பசு எருமை எல்லாம் இருந்ததால சுத்தமான நெய்யில்தான் எல்லா பலகாரங்களும் பண்ணீனாங்க. வாசனை எங்க தெருபூராவும் மணக்கும்.


 தீபாவளிக்கு முத நா இரவே வீட்டுவாசலில் 4-கோட்டை அடுப்புதோண்டி  சாணிபோட்டு மெழுகி அடுப்பின்மேல் கோலம்லாம் போட்டு வென்னீர் தவலையில் தண்ணீர்பிடிச்சு வச்சாங்க. தவலைன்னா 30, 40 லிட்டர் கொள்ளும் ஒவ்வொரு தவலையும். 3 மணிக்கு முதல்ல தாத்தா தான் எழுந்து வென்னீர் அடுப்பை பத்தவைப்பாங்க. அப்புரம் ஒரு சரவெடி கொளுத்திபோட்டு ஒவ்வொருவரையா எழுப்பி சாமி ரூம்ல உக்காரவைப்பாங்க. முத நா இரவே சாமிரூம் பெருக்கிமெழுகி புது துணிகள் பட்சணங்கள் காய்ச்சின எண்ணை சீக்காபொடி லேகியம் வெடிகள் எல்லாமே சாமி பட்ம் முன்பு ரெடியா வச்சுடுவாங்க.தாத்தாதான் ஒவ்வொருவருக்கா எண்ணைதேய்த்து விடுவாங்க. வாசலில் ஒவ்வொருவரையும் பலகையில் உக்கார வச்சு இதமா வென்னீர் விளாவி குளிப்பாட்டி விட 5- வேலைக்காரங்க ரெடியா நிப்பாங்க.தெரிவில் உள்ள எல்லாருமே அன்னிக்கு எங்க வீட்டில் தான் தீபாவளி கொண்டாடுவாங்க ஒவ்வொருவராகுளித்துவந்ததும் ஒவ்வொருவருக்காபுது துணி கொடுப்பாங்க. நம்ஸ்காரம் பண்ணி துணீ போட்டுண்டு பெரியவங்க காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிப்போம்.

 சமையலுக்கும் ஆட்கள் இருப்பாங்க காலைப்பலகாரம் ரெடி ஆயிட்டு இருக்கும்.இட்லி சட்னி சாம்பார் பட்சணங்களுடன் ஹெவியா காலைப்பலகாரம் எல்லாரும் சேர்ந்து உக்காந்து அரட்டை அடிச்சுட்டே சாப்பிடுவோம். பிறகு லேகியம்தருவாங்க. பிறகு பட்டாசு. தெருவே அதிரும் வெடி சத்ததில்.எல்லார்முகங்களிலும் சந்தோஷச்சிரிப்புதானிருக்கும்.
என் வீட்டுக்காரர் எனக்குஒரு காஞ்சீபுரம் பட்டு சாரி ஸ்கைப்ளூ கலரில்
 தங்கத்தில்காசுமாலை தந்தாங்க. கல்யாணத்துக்குப்போட்ட 50-பவுன் நகை கூட இந்தகாசுமாலையும் கழுத்தில் கனமாக இருந்தது.தலை நிறைய மல்லி, கனகாம்பரம் சேர்த்துகட்டிய பூக்களின் பாரம் வேறு.13-வயசுக்கு இந்தபாரம்லாம் கொஞ்சம் அதிகம் இல்லியா?எல்லாருமா சேர்ந்து பக்கத்தில் உள்ள கோவிகளுக்கு போய்வருவோம். தெரிந்தவர்கள் வீடுபோய் பட்சணங்கள் கொடுத்துவருவோம். காலை டிபனே வயிறு ஃபுல்லா இருக்கும் போகும் இடங்களிலும் எதையாவது சாப்பிட கொடுதுண்டே இருப்பா.  வீடுவந்தா லஞ்ச் ரெடியா இருக்கும் ஐயோ பசிக்காம எப்படி சாப்பிட? அதுவும் வடை பாயசத்துடன் விருந்து சாப்பாடுவேறு.


வீட்டு பெரியவங்க எங்க ரெண்டு பேரையும் கேலி செய்தே ஒரு வழி பண்ணீடுவாங்க.சிரித்து சிரித்தேபாதி வயிறு ரொம்பிடும் என்கையால ஒரே ஒரு கரண்டி பாயசம் போட்டுக்கோன்னு அன்புத்தொல்லைகள் வேர. சாப்பிட்டு முடிந்ததும் எங்க ஊரிலேந்து3-கிலோமீட்டர்தள்ளி அம்பாசமுத்ரம்னு ஒரு ஊரில் ஒரே ஒரு தியேட்டர் உண்டு கிருஷ்னா டாக்கீஸ். தீபாவளிக்கு புதுபடம் ரிலீஸ்பண்ணூவாங்க. தாத்தா எங்க ரெண்டு பேரையும் சினிமாபோயிட்டுவாங்க வண்டி கட்ட சொல்ரேன்னார். மாட்டுவண்டிதாங்க. சரின்னு வண்டில ஏற்ப்போனா அங்க எந்தம்பி, தங்கைக, சொந்தக்காரக்குழந்தைகன்னு 15 வாண்டுகள் ஏற்கனவே ஏறி உக்காந்திருந்தாங்க. இவரு என்னைப்பாத்து முறைக்கிரார். என்னடி இது தனியா நீயும் நானும் மட்டும் ஜாலியா சினிமாபோலாம்னு பாத்தா இவ்வளவுபேர்கூடவாபோகனும் என்கிரார். எனக்கா சிரிப்பாவருது.

வேர வழி இல்லே போனோம். படத்தில் குழந்தைக பண்ணின லூட்டியில் இவர் பயந்தேபோனார். இடை இடையே முருக்கு கடலைமிட்டாய் கலர் வேனும்னு ஒவ்வொன்னும் கோரசா அடம் பிடிக்குது படம் எங்க பாக்க விட்டாங்க?இனிமேல உங்க ஊருல படம் பாக்கவே கிளம்பமாட்டேன்மா என்கிரார் என்கணவர். இரவும் அந்த ஊரே அதிரும்படி எல்லாரும் வாணவேடிக்க நடத்தினோம்.இரவும் விருந்துதான். கூட ஒருவாரம் ஊரில் இருந்து விட்டு பூனா கிளம்பினோம்.





74 comments:

COOL said...

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அன்புநிறை லக்ஷ்மி அம்மா

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
மனம்நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி பொங்கட்டும்.

சக்தி கல்வி மையம் said...

அந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல.
நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.

உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

Mahi said...

nalla ninaivukal! :)

Deepavali vaazhthukkal Lakshmimma!

Asiya Omar said...

மலரும் நினைவுகள் சூப்பர்.இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

மாய உலகம் said...

ஹா ஹா தலதீபாவளி பகிர்வுக்கு பாராட்டுக்கள் அம்மா

மாய உலகம் said...

தங்களுக்கு, தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா... சந்தோசமும் வளமும் பெருகட்டும்...

Jaleela Kamal said...

லஷ்மி அக்கா போட்டோவில் சூப்பரா இருக்கீங்க
பிலாக் அண்ட் வொயிட் போட்டோ எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு
னீங்க தள தீபாவளி கொண்டாடும் போது அப்ப நான் பிறக்கவே இல்லை

Jaleela Kamal said...

பரவா இல்லையே ரயிலில் தனி ரூம் அடாச் பாத்ரும் வோடவா
இப்ப இரண்டு முறை 2 நாள் ரயில் ப்யணம் செய்ததே பாத்ரூம் நினைத்தா இனி போக வேண்டாம் ந்னு தோனுது.
என்ன தான் ஏசி கோட்சா இருந்தாலும்.
பிடிக்க மாட்டுங்கிறது,
ஆனால் நெடுதூர ரயில் பயணம் ரொம்ப நல்ல இருந்ந்து,

போத்தி said...

இந்த தலைமுறை கூட்டு குடும்பம் என்றால் என்ன என கேட்கும் நிலை வந்து விட்டது.

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

MyKitchen Flavors-BonAppetit!. said...

Hello Madam,Pakkam than Enga Veedu.My parents live neai Ambai but frm Palayamkottai.Nice to know that U r from Tirunelveli.Dear Blogger Friend,Wish U a Warm and Happy Diwali.Enjoy the Festivities with taste-filled delights,Safe and Delicious Memorable Moments - Regards, Christy Gerald

Yaathoramani.blogspot.com said...

கருப்பு வெள்ளைப் படம் பார்க்கவே அத்தனை அழகு
நீங்கள் விவரித்துப் போன விதமும் மிக மிக அருமை
இனிய நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு
மனமார்ந்த நன்றி
த்ங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய
மனம் கனிந்த தீபாவளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்
த.ம 2

Madhavan Srinivasagopalan said...

நல்ல அனுபவங்கள்..
தீபாவளி நல்ல, கொண்டாடப் படவேண்டிய பண்டிகை..

Anonymous said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

M.R said...

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் அம்மா

வெங்கட் நாகராஜ் said...

நல்ல அனுபவங்கள் அம்மா....

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள் அம்மா....

கே. பி. ஜனா... said...

பொற்காலம் என்று சொல்லுங்கள்!

ஸாதிகா said...

தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

Chitra said...

How sweet! :-)

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

மனோ சாமிநாதன் said...

புகைப்படம் மிக அழகு லக்ஷ்மி!

மலரும் நினைவுகள் படிக்கப் ப‌டிக்க மிகுந்த சுவாரஸ்யம்!

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

ஹேமா said...

ஒவ்வொரு தீபாவளியும் வந்து நிறையும் உங்கள் நினைவுகள்.மனம் நிறைந்த வாழ்த்துகள் அம்மா !

radhakrishnan said...

இனி இம்மாதிரியெல்லாம் விரிவாக
விருப்பத்துடன் பண்டிகைகளைக்
கொண்டாட யாரும் இல்லையே. அது
உண்மையிலேயே பொற்காலம்தான்.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா.

ஸ்ரீராம். said...

உங்கள் மனதில் ஓடிய பழைய நினைவுப் பயணத்தில் எங்களையும் சேர்த்துக் கொண்டீர்கள். நன்றி. தீபாவளி வாழ்த்துகள்.

குறையொன்றுமில்லை. said...

cool வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

மகேந்திரன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கருன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

மஹி நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஆஸியா ஓமர் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

மாய உலகம் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஜலீலா கமல் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

போத்தி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராமலஷ்மி நன்றி

குறையொன்றுமில்லை. said...

கிச்சன் ஃப்லேவர்ஸ் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரமணி சார் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

மாதவன் நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரெவரி நன்றி

குறையொன்றுமில்லை. said...

எம். ஆர். வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஷன்முகவேல் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் நன்றி

குறையொன்றுமில்லை. said...

கே.பி. ஜனா நன்றி

குறையொன்றுமில்லை. said...

சாதிகா நன்றி

குறையொன்றுமில்லை. said...

சித்ரா ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க நன்றி

குறையொன்றுமில்லை. said...

ம்னோ மேடம் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஹேமா நன்றீ

குறையொன்றுமில்லை. said...

ராதாகிருஷ்னன் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஸ்ரீ ராம் வருகைக்கு நன்றி

மாதேவி said...

நல்ல பகிர்வு. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

இனிய மலரும் நினைவுகள் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

தீபாவளித்திருநாள் இனிய வாழ்த்துக்கள்>.

ஷைலஜா said...

பகிர்வினை ரசித்துப்படித்தேன்.
தீபாவளி வாழ்த்துகள்!

குறையொன்றுமில்லை. said...

மாதேவி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஷைலஜா வருகைக்கு நன்றி

அம்பாளடியாள் said...

பெயருக்கேற்ற அழகிய முகம் மிக அருமையாக உள்ளது உங்கள் அனுபவம் ஒவ்வொன்றும் .கேட்கும்போது .வாழ்த்துங்கள் அம்மா இளைய சந்ததியினர் நாமும்
இவ்வாறு வாழும் வாழ்வது மலர இந்நாளில் மிக்க நன்றி என் தளத்தில் இணைந்தமைக்கும் அழகிய அனுபவப்
பகிர்வுக்கும் ......... (புதிய கவிதை ஒன்று காத்திருக்கின்றது முடிந்தால் உங்கள் கருத்தினைத் தாருங்கள் நன்றி )

குறையொன்றுமில்லை. said...

அம்பாளடியாள் வருகைக்கு நன்றி

விச்சு said...

இனிய மறக்க முடியாத நினைவலைகள்... (போட்டோ நல்லாயிருந்துச்சு)

குறையொன்றுமில்லை. said...

விச்சு வருகைக்கு நன்றி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் லஷ்மிம்மா..

நல்லதொரு நினைவுகளைப் பகிர்ந்திருக்கீங்க..

Unknown said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள் மேடம் :)

குறையொன்றுமில்லை. said...

சாந்தி அங்க கொஞ்சம் தானே வந்தது அதான் இங்க எல்லாம் போட்டேன்.

குறையொன்றுமில்லை. said...

தோழி பிரஷா நன்றி

குறையொன்றுமில்லை. said...

மழை வருகைக்கு நன்றி

ரசிகன் said...

உங்களது இந்த பசுமையான நினைவுகள் எனது சிறு பிராயத்தை நினைவு படுத்துகிறது. அப்போது தீபாவளிக்கு இரண்டு மாதம் முன்னரே தீபாவளிக்கு என்ன ஸ்வீட், துணி, பட்டாசு என திட்டமிடுவோம். தீபாவளிக்கு இரண்டு நாள் முன்னரே, காய வைக்க வாங்கிய, பட்டாசெல்லாம் வெடித்து விட்டு, அப்பா அப்பா என மறுபடி வாங்கி தர சொல்லி கெ/கொ ஞ்சிக் கொண்டிருப்போம். தீபாவளிக்கு மட்டுமே கிடைக்கும் குலாப் ஜாமூனுக்காக விடியும் முன்னே குளித்து தயாராவோம்.

சுற்று சூழல் பற்றிய அக்கறையால் கடந்த பத்து ஆண்டுகளாக பட்டாசு வெடிப்பதில்லை. இப்போது எல்லா நாட்களிலும் எல்லா வித இனிப்புகளும், உடைகளும் கிடைக்கிறது. இப்போதெல்லாம் தீபாவளி, காலை ஆறு மணிக்கே முடிந்து விடுகிறது.

அது சரி, பத்து நாள் தங்கியதற்கே என்னால் கல்லிடை குறிச்சியை மறக்க முடியவில்லையே, நீங்கள் எப்படி? (வாழ்வியல் நிர்பந்தம். ப்ச்.)
கல்லிடை குறிச்சி குறித்த எனது பதிவு,
http://vaazhveperaanantham.blogspot.com/2011/01/blog-post_26.html

குறையொன்றுமில்லை. said...

ரசிகன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்களும் கல்லிடையா?என்னபண்ண சூழ் நிலைக்கைதிகள்தானே நாமெல்லாம்.

Anonymous said...

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

Anonymous said...

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

arul said...

married in 13 years?

குறையொன்றுமில்லை. said...

அருள் ஆமா ஏப்ரல் 2 -ம்தேதி 12 வயசு முடிஞ்சது ஏப்ரல் 19-ம் தேதி கல்யாணம் ஆச்சு.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_18.html) சென்று பார்க்கவும்...

நன்றி அம்மா...

ஹுஸைனம்மா said...

ஃபோட்டோவில் உங்கள் முகத்தில் அப்படியே பால்யம் தவழ்கிறது. என்னா அழகு.

அனுபவங்களும் ரசித்தேன்.

குறையொன்றுமில்லை. said...

திண்டுக்கல் தனபாலன் தகவலுக்கு நன்றி போயி பாத்துட்டேன்

குறையொன்றுமில்லை. said...

ஹூசைனம்மா நம்ம ஊரு பக்கம் ஒரு பழமொழி சொல்வாஙக குட்டியா இருக்கும் போது கழுதைகூட குதிரைக்குட்டி போல இருக்குமாம்

Unknown said...

லட்சுமி மேடம், நீங்க தலை தீபாவளிக்கு கல்லிடைக் குறிச்சி போனீங்க. உங்க அனுபவம் என்னை அப்படியே மைலாப்பூருக்கு என் சிறு வயது தீபாவளி கொண்டாட்டங்களை அசைபோட அழைத்துச் சென்று விட்டது.நான் உங்களை சந்திக்கும் அருமையான வாய்ப்பை இழந்து விட்டேன். சென்னையில் பதிவர்கள் மாநாடு நடந்தபோது என்னால் வர முடியவில்லை. சாதிகா சொன்ன பிறகு ரொம்பவும் வருத்தப்பட்டேன்.

குறையொன்றுமில்லை. said...

ஜெயந்தி ரமணி நீங்க சென்னையில் தானே இருக்கிங்க வந்திருந்தா சந்திதிருக்கலாம் பார்க்கலாம் மேலும் ஏதாவது வாய்ப்பு கிடைக்கமலா போகுமதுவரை வெயிட் அண்ட் ஸீ தான்

என்னை ஆதரிப்பவர்கள் . .