Pages

Monday, February 6, 2012

கில்பி 10 (ஆப்ரிக்கா)

கோபில்’னு ஒரு இடம் அங்கே காருக்கு பெட்ரோல் ரொப்பிண்டு கிளம்பினோம். கிலிபி டு மும்பாசா கிட்டத்தட்ட 50, 60 கிலோ மீட்டர் இருக்கும். போகவே 2- மணி நேரம் ஆகும். மாசம் ஒருமுறை இங்க போயித்தான் வீட்டுக்குத்தேவையான சாமான்கள் காய்கள், பழங்கள் வாங்கி வரனும்.. வழியில் இண்டியன் ஸ்பைசைஸ் என்னும் கடையில் நம்ம ஊர்லேந்து வந்திருக்கும் சாமான்கள் வாங்கினோம். புளி, பருப்பு, அரிசி, எண்ணைகள்





 .இந்தக்கடையில் 3- மாசத்துக்கு ஒரு முறைதான் இண்டியாலேந்து நம்ம சாமான்கள் வரும். இ ந்த ஊரில் கிடைக்கும் பருப்புகளில் என்னமோ எண்ணை தடவி பாக்கெட் போட்டு  டிபர்ட்மெண்ட் ஸ்டோர்களில் வச்சிருப்பா. வேகவே வேகாது. அதனால நம்ம ஊரு சாமான் கள் வேனும் என்றால் இந்த இண்டியன் ஸ்பைசஸ் கடையில் தான் வேங்கணும்.
அங்கேந்து கிளம்பினோம். வழியில் நிறைய குட்டி குட்டி ஊர்கள்.குருவிட்டு, கி கம்பாலா,பம்பூரி, னியாலி, மட்வாப்பா. என்ரெல்லாம் வாயில் நுழையாதபெயர்களில் இருந்தது. வெளியில் வந்து ஆளூக்கொரு இள நீர் குடித்தோம் இந்த ஊரில் யாருமே வழுக்கை சாப்பிட மாட்டேங்கரா அப்படியே தூரப்போட்டுடரா.  வண்டியிலும் ஃபுல் சவுண்டில் பாட்டுகேட்டுண்டே எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும் போயிண்டே இருக்கலாம் போலதான் இருக்கு. புது இடம் புது மாதிரி மனிதர்கள் என்று வித்யாச அனுபவங்கள். இதுபோல வித்யாச அனுபவங்களுக்காகத்தானே பயணம் போவதே.
முதலில் ’னியாலி நக்குமட்’னு ஒரு மால் போனோம். அங்கே கொஞ்சம்




 சாமான் வாங்கினோம். மாப்பிள்ளைக்கும் ஆபீசுக்கு தேவையான சாமான்கள் கொஞ்சம் வாங்க வேண்டி இருந்தது எல்லாம் வாங்கிண்டு
 அங்கேந்து பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர் இருக்கும் இடம் போனோம். அதுபேரு ’லிகோனி  நகுமட்’ன்னு சொல்ரா. ப்ரொவிஷன் சாமான், காய்கள்


                            

                                   

 பழங்கள் எல்லாம் வாங்கினோம். மால்னு சொல்ரா. ஆனா ஒர்ரளவுதான் பெரிசா இருக்கு. இதைவிட மும்பை மால்கள் இன்னும் பெரிசு, வசதிகளும் நல்ல இருக்கும். இந்த நகுமட் (Nakumat) சூப்பர்/மெகா மார்ட் க்கு சொந்தக்காரார்கள் கென்யாவில் 3 சந்ததியாய் வாழும் குஜராத்திகள். கென்யா முழுவதும் கிட்டதட்ட 20 இடங்களில்  மால் நடத்துகிரார்கள். இதில் 7 இடங்களில் 24 மணி நேரமும் மால் கள் திறந்திருக்கும். இதெல்லாம் விட இன்னொரு விஷயம். இதை நிர்வகிக்கும் ஆள் ஒரு தமிழர்.  ஆமாம் இந்த கம்பெனியின் ஜெனரல் மேனேஜர் ஒரு தமிழர்.  மகிழ்ச்சியாக இருக்கிறது அல்லவா!.
                        

                    

 சாமான்லாம் வாங்கிண்டு ஒரு குருத்வாரா போனோம் அங்கு மாப்பிள்ளையின் ஒரு ஃப்ரெண்ட் இருந்தார் அவரைப்பார்த்துவிட்டு கொஞ்ச நேரம் வெளியில் உக்காந்தோம். மும்பை மாதிரி குருத்வாரா வாசலில் நிறைய புறாகூட்டங்கள் தானியங்களை கொத்தி தின்று கொண்டிருந்தது. கொஞ்ச

                              
 நேரம் அதை வேடிக்கை பார்த்துவிட்டு, கிளம்பினோம்.வழியில் நிரைய குஜராத்திகள், பஞ்சாபிகள் நடத்தும் ரெஸ்டாரெண்டுகள் இருந்தது.கடை பெயர்கள் எல்லாம் பார்த்ததுமே அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது.  KUSU,   KISUMU, PAAMALULU இன்னும் இப்படி சிரிப்பான பெயர்களில் கடைகள், ரெஸ்டாரெண்ட்கள். அங்கேந்து ஒரு காபி ஷாப் போனோம் கீழேரெஸ்டாரென்ட்  காபி டீ,கேக், ஸ்னாக்ஸ், ஐஸ்க்ரீம் என்று பேக்கரி ஐட்டம் எல்லாம் இருந்தது. மாடியில் ஹோட்டல் தியேட்டர்,


                    


                                  

 கம்ப்யூட்டர்கேம்ஸ்,கிட்ஸ் கார்னர் என்று  ஏகப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து இருந்தது.  நாங்கள் வெஜிடபுள் பை, காபுசீனோ காபி சாப்பிட்டோம் காப்பிக்கொட்டை வறுத்து ஃப்ரெஷாக டிகாஷன் போட்டு நுரைக்க, நுரைக்க காபி போட்டுத்தரா. நல்ல டேஸ்ட். அளவுதான் ரொம்ப அதிகம். ஒரு காபி வாங்கினா 3 பேரு குடிக்கமுடியும். ஆனா பொண்ணும் மாப்பிள்ளையும் டீ பாட் வாங்கிண்டா, நான் மட்டும் காபி. இந்த இடத்தின் சொந்தகாரரும் ஒரு இந்தியரே. இதில் உள்ள தியேட்டரில் தான் ஹிந்தி சினிமா காட்டுவார்கள். மும்பையில் எப்பொழுது ரிலீசாகிறதோ அதே தினம் இங்கேயும் ரிலீசாகும். இங்க உள்ள ரெஸ்டாரெண்ட் ஒரு இந்தியன் ரெஸ்டாரெண்ட், பெயர் பாலிவுட் ட்ரீம்ஸ்.  அதெல்லாம் முடிந்து வீடுவரவே இரவு 11-மணி ஆச்சு. வாச்மேன் எல்லா சாமான்களையும் வீட்டுக்குள் கொண்டுவைத்தான். 

 ( நன்றி- கூள் இமேஜ்)                                                       (தொடரும்)

29 comments:

குறையொன்றுமில்லை. said...

தமிழ் மணம் இணைக்க முடியல்லே.

கோமதி அரசு said...

நல்ல விரிவான பயணக்கட்டுரை.
வித்தியாசமான அனுபங்கள்.
தமிழ் மணத்தில் இணைக்க முடியவில்லை.
அவர்கள் சரிசெய்தால் தான் முடியும்.

ஸாதிகா said...

படங்களும் வரணனையும் பிரமாதம்

RAMA RAVI (RAMVI) said...

அருமையாக செல்கிறதம்மா உங்க அப்பிரிக்க அனுபவம். ஊர்கள் மற்றும் கடையின் பெயர்களையெல்லாம் நினைவில் வைத்து அழகாக கொடுத்திருக்கீங்க.
தொடருங்கள் படிக்கக் காத்திருக்கிறேன்.

இராஜராஜேஸ்வரி said...

இந்த கம்பெனியின் ஜெனரல் மேனேஜர் ஒரு தமிழர். மகிழ்ச்சியாக இருக்கிறது அல்லவா!.//

ரொம்ப மகிழ்ச்சி..

வித்தியாச அனுபவங்கள்..

பால கணேஷ் said...

தமிழ்மணம் மூலமாதான் நான் பதிவைப் பார்த்தேன். அருமையாய் தொடர்கிறது அனுபவங்கள். தொடரட்டும்

நன்பேண்டா...! said...

nalla pagirvu, pagirvukku nandri

K.s.s.Rajh said...

வழமை போல சுவாரஸ்யம் தொடருங்கள்

Asiya Omar said...

மிகவும் ரசித்து வாசித்தேன்.நேரில் கதை கேட்பது போல் இருக்கு.நல்ல நினைவாற்றல்,அருமையாக சின்ன சின்ன விஷயங்களைக் கூட பகிர்வது சூப்பர்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு.. சுவையான விளக்கங்கள்... படங்களும் தேடிப் பிடித்து போட்டு அசத்தறீங்கம்மா....

கவி அழகன் said...

நன்றி பகிர்வுக்கு.

குறையொன்றுமில்லை. said...

கோமதி அரசு முதல் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரமா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

இராஜராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கணேஷ் தமிழ் மணத்தில் இணைக்கவே முடியாமன்னா இருந்தது நீங்க எப்படி அங்க பாத்தீங்க.?

குறையொன்றுமில்லை. said...

SNA AD வரவுக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராஜ் வருகைக்கு நன்ரி

குறையொன்றுமில்லை. said...

ஆஸியா ஓமர் வருகைக்கு நன்றீ

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கு நன்றி

ரசிகன் said...

வாழ்கையை அனுபவிக்கிறீங்க... கலக்குங்க.

ADHI VENKAT said...

ஊர் பேரெல்லாம் வித்தியாசமா இருக்கும்மா....

உங்க கூடவே நாங்களும் வருகிறோம்...தொடருங்கள்.

குறையொன்றுமில்லை. said...

ரசிகன் வருகைக்கு நன்றி இருப்பது சில நாள் அனுபவிப்போமே எதுதான் குறைந்துவிடும் இல்லியா?

குறையொன்றுமில்லை. said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி

சாந்தி மாரியப்பன் said...

எப்படித்தான் இத்தனையும் ஞாபகம் வெச்சிருக்கீங்க லஷ்மிம்மா !!!!!!

பகிர்வு அருமை.

குறையொன்றுமில்லை. said...

சாந்தி வருகைக்கு நன்றி

Jaleela Kamal said...

படித்து கொண்டே வருகிறேன்
போன பதிவு படிச்சாச்சு, பச்ச கலர் ஜூஸ் பார்க்கவே நல்ல இருக்கு

Geetha Sambasivam said...

வித்தியாசமான அனுபவங்கள். காஃபி இங்கேயும் பெரிய கப்பில் தான் தருகிறார்கள். இத்தனைக்கும் நாங்க இருப்பதிலேயே சின்ன சைஸ் காஃபி கப்பில் கேட்போம். அது ஸ்மால்னு பெயர். அதை ஒன்று வாங்கி நாங்க இரண்டு பேரும் எடுத்துப்போம். என்ன இருந்தாலும் நம்ம ஊர் காஃபி மாதிரி வராது. இங்கே கொட்டை வாங்கித் தான் அரைக்கிறோம். ஆனால் போட்ட உடனே சாப்பிட வேண்டும். பால் ஹாஃப் அன்ட் ஹாஃப் தான் வாங்கிப்போம். காஃபிக்கு மட்டும்.

குறையொன்றுமில்லை. said...

ஆப்ப்ரிக்காவிலயும் காபி கொட்டை அரைச்சு காபி கலந்து தரா
ஒரே கசப்பு. நம்ம ஊரு காபிக்கே பழகியாச்சே

என்னை ஆதரிப்பவர்கள் . .