Google+ Followers

Pages

Friday, February 24, 2012

கிலிபி 15 ஆப்ரிக்கா

அடுத்த நாள் காலையில் ஏழு மணிக்கே எழுந்து தயார் ஆகி ப்ரேக்ஃபாஸ்ட் எடுத்துக்க போனோம்.  வித வித மான ஐட்டங்கள் இருந்தன. ஏகப்பட்ட பிரட் வகைகள், சீஸ், வெண்ணய், ஜாம், சாஸ், ஜீஸ், என்று வெஜிடேரியனுக்கு, மற்றவர்களுக்கு இன்னம் அதிக வெரைட்டி. அதை முடித்துக்கொண்டு திரும்பவும் சுற்றி பார்க்க கிளம்பினோம். 
                            லேக்கை சுற்றி மிகவும் விரிவான இடங்கள் இருக்கின்ரன. 

                       
                    முதலில் பார்த்தது ஒரு Hyena. இதை பற்றி எல்லாருக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிரேன். இது பொதுவாக பார்க்க அசிங்கமாக இருக்கும். மற்ற விலங்குகள் அடித்து போட்டு இருக்கும் மிச்சத்தை உண்ணும். சில சமயம் இவைகள் கூட்டமாக ஒண்ணு சேர்ந்து ஒரு தனியாக இருக்கும் சிறுத்தை யையோ விரட்டி அடிக்கும்.  எல்லாரும் இதை ‘Animal Planet’ ல் பார்த்திருப்பீர்கள். நாங்கள் பார்க்கும் பொழுது அது ஒன்ரே ஒன்று தான் இருந்தது. எங்களை கண்டதும் ஒட்டம் எடுக்க தொடங்கியது.  எங்கள் டிரைவர் வேண்டுமென்றே அதன் பின்னால் வண்டியை விட்டான்.
அடுத்து தென்பட்டது விலங்குகளின் ராஜா, சிங்கம். நாங்கள் பார்த்தது ஒரு 
                              
வயசான சிங்கம். தனியாக உட்கார்ந்து கொண்டிருந்தது. பொதுவாக சிங்கங்களும் கூட்டமாகத்தான் சுற்றிக்கொண்டிருக்கும். நக்குருவில் நாங்கள் பார்த்த ஒரே சிங்கம் அது தான்.  இதை எழுதும்பொழுது ‘சிவாஜி’ படத்தில் சூப்பர் ஸ்டார் அடிக்கும்  டயலாக் ஞாபகத்திற்கு வந்தது. போட்டோவில் பாருங்கள்.
அங்கிருந்து கிளம்பி வெகு தூரம் போன பின் ஒட்டக சிவிங்கிகள் தென் பட ஆரம்பித்தன. நிரையவே இருந்தன.  பெரிது, சிரியது, விதம் விதமாக வும் இருந்தன. என்ன உயரம். ஒரெஒரு ஒட்டக சிவிங்கி உட்கார்ந்து 

                       கொண்டிருந்தது.  இது அதிசயம், பொதுவாக ஒட்டக சிவிங்கிகள் நின்று கொண்டுதான் இருக்கும் என்று டிரைவர் கமெண்ட் அடித்தான். 
சிறிது தூரம் போனதும் அதோ தூரத்தில் பாருங்கள் ஒரு சிறுத்தை இருக்கு 
                         என்று டிரைவர் காண்பித்தான்.  அது எங்களுக்கு சரியாக தென் படவில்லை. பிறகு நிறைய மான்கள், வரிக்குதிரைகள், முள்ளம்பன்றிகள், வித விதமான குரங்குகள், பரவைகள் எல்லாம் தென்பட்டன.  டிரைவர் சொன்னான்,  இதெல்லாம் ஒன்றுமில்லை, மசைமாரா சென்றபிரகு உங்களுக்கு மிகவும் அதிகமாக விலங்குகள் காட்டுவேன் என்று.
நாங்கு மணி நேரம் கழித்து திரும்பவும் ஹோட்டல் வந்து சாப்பிட்டோம். வழக்கம் போல் சாப்பிட நிரைய ஐட்டங்கள் இருந்தது. சாப்பிட்டு ஹோட்டலை சுற்றி பார்த்தோம்.  நல்ல பெரிதாக நல்ல கட்டியிருந்தார்கள். ஸ்விம்மிங் பூல் இருந்தது.  அது நடுகாட்டில் இருந்ததால் எல்லா காட்டேஜ் களுக்கும் சோலார் பவர் தான் கொடுத்திருந்தார்கள்.
கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்து விட்டு, 5 மணிவாக்கில் திரும்பவும் லேக் பக்கம் போய் அந்த ஃபிளமிங்கோ பறவை களை 
                     பார்த்துக்கொண்டிருந்தோம்.  இருட்டும் சமயம் திரும்ப வ்ந்து விட்டோம்.  இரவில் சாப்பிட்டுவிட்டு விரைவில் தூங்கி விட்டோம். 

 நன்றி( கூகுல் இமேஜ்)                                                                         (தொடரும்)

48 comments:

அமைதிச்சாரல் said...

சிங்கிளா வந்த சிங்கத்தை ரசிச்சேன் :-))

ராமலக்ஷ்மி said...

நல்ல அனுபவமாக இருந்திருக்கும். பகிர்வுக்கு நன்றி.

RAMVI said...

விலங்குகளை நேரில் பார்க்கும் போது திரிலிங்காக இருந்திருக்குமே அம்மா. நல்ல அனுபவம்.படங்கள் அழகாக உள்ளன.

கோகுல் said...

த்ரில் அனுபவம்.

மகேந்திரன் said...

ஒரு மிருகக் காட்சி சாலைக்குப் போனது போல
இருக்குது அம்மா..
படங்களை ரசித்தேன்.

கோமதி அரசு said...

ஒட்டகசிவிங்கி அமர்ந்து பார்ப்பது அரிய காட்சிதான்.
உங்களுடன் நாங்களும் எல்லா விலங்குகளையும் ரசித்தோம்.

G.M Balasubramaniam said...

அன்பின் லக்ஷ்மி அம்மா, நான்கைந்து பதிவுகளை ஒன்றாகப் படிக்கிறேன். முதலில் விருதுகள் பெற்றமைக்கு வாழ்த்துக்கள். இந்தப் பயணம் மேற்கொண்ட போதே பதிவிடும் எண்ணம் இருந்ததா.?நிறைய படங்களும் விரிவான தகவல்களும்.இந்த சிவராத்திரி யன்று உங்களை நினைத்துக் கொண்டேன். அம்பர்நாத் சிவன் கோவில் தொன்மை வாய்ந்தது. சிவராத்திரி மிகவும் விசேஷம். நான் 1957-1959 வாக்கில் பார்த்தது. இப்பவும் அப்படியா.?சூப் குடிப்பது பற்றி எழுதி இருக்கிறீர்கள். எல்லா இடங்களிலும் வடித்த கஞ்சியில் வேக வைத்த காய்கள் போட்டு அநியாயத்துக்கு விலையில் விற்கிறார்கள். இல்லையென்றால் மிளகு தண்ணீர். இதெல்லாம் ஒரு ஸ்டேடஸ் சிம்பல் ஆகிவிட்டது. அண்டைவீட்டார்கள் கூடி , பாடி உண்டு மகிழ்கிறார்கள் என்று எழுதி இருக்கிறீர்கள். பொதுவாகவே விந்தியதுக்கு வடக்கே இருப்பவர்கள் கூடி மகிழ்வதில் மகிழ்கிறார்கஉங்கள் பதிவு படிக்கும்போது என் நினைவலைகளில் மூழ்க் விடுகிறேன். வாழ்த்துக்கள்.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நன்றி அம்மா.

கோவை2தில்லி said...

நாங்களும் உங்க கூடவே இருந்து பார்த்தது போல் இருந்தது......

Mahi said...

ஃப்ரீ ஸஃபாரி கூட்டிட்டுப் போயிட்டீங்க! தேங்க்ஸ்மா! ;) :)

வெங்கட் நாகராஜ் said...

சிங்கம் சிங்கிளாத்தான் வரும்! :) பகிர்வினை ரசித்தேன் அம்மா.

இராஜராஜேஸ்வரி said...

விலங்குகளின் படங்கள் பகிர்வுகள் அருமை.. பாராட்டுக்கள்..

Lakshmi said...

சாந்தி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ராமலஷ்மி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ரமா வருகைக்கு நன்ரி நீ சொல்வது உண்மைதான் மிருகங்களை நேரில் பக்கத்தில் பார்க்கும்போது பயம் கலந்த
திரில்லிங்காகத்தான் இருந்தது.

Lakshmi said...

கோகுல் வருகைக்கு நன்ரி

Lakshmi said...

மஹேந்திரன் வருகைக்கு நன்ரி

Lakshmi said...

கோமதி அரசு வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஜி.எம். பாலசுப்ரமனியம் ஐயா வருகைக்கும் நீண்ட பின்னூட்டத்துக்கும் நன்றி நான் இந்த கட்டுரை எழுத ஆரம்பித்ததுமே முதல் பகுதியில் சொல்லி இருக்கேன் 5, 6 வருடங்களுக்கு முன்னெல்லாம் கம்ப்யூட்டர் பற்றியும் ப்ளாக் பற்றியும் எதுவுமே தெரிந்திருக்கலியே. அப்படியும் தினசரி நாள்குறிப்பு எழுதும்பழக்கம் ரொம்ப வருடங்களாகவே உண்டு. அதனால்தான் ஞாபகமாக எல்லாம் சொல்லி வரேன். நான் இப்பவும் அம்பர்னாத்லதான் இருக்கேன் அந்த சிவன் கோவில் இன்னமும் அப்படியேதான் இருக்கு. 2000 வருட பழமை வாய்ந்த புராதனக்கோயில்தான் சிவராத்திரி அன்று தரிசிக்க ஆனந்தமா இருக்கும் நல்ல கருங்கல் கட்டிடம் இன்றும் பழமை மாறாமல் அப்படியே இருக்கு.

Lakshmi said...

ரத்னவேல் நடராஜன் வருகைக்கு நன்றி

Lakshmi said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி

Lakshmi said...

மஹி வருகைக்கு நன்றி

Lakshmi said...

வெங்கட் வருகைக்கு நன்றி

Lakshmi said...

இராஜராஜேச்வரி வருகைக்கு நன்றி

ஜெய்லானி said...

ஒரு ஜுவுக்கு போன ஃபீலிங் :-))

athira said...

சூப்பராகப் போகுது லக்ஸ்மி அக்கா, வாழ்வில் அனுபவிக்க வேண்டிய அனைத்து சந்தோசத்தையும், இந்த ஆபிரிக்க ட்ரிப் உங்களுக்குக் கொடுத்திருக்குது போல:).

athira said...

உங்கள் கதைக்கேற்ப படங்களும் கிடைச்சிடுதே...:) சிங்கம் சிங்கிளாத்தான் வரும் எனப் பெருமை பேசுவினம் எல்லோரும்,ஏனெனில் அது ஆண்சிங்கம் அதுதான் அப்பூடி என:))

நீங்க பார்த்த அந்த சிங்கிள் சிங்கம்... மேல் ஆ? ஃபீமேலா? கொஞ்சம் நினைவுபடுத்திச் சொல்லுங்கோ லக்ஸ்மியக்கா... இண்டையோட நிறையப்பேரை மடக்கிடலாம்:))

athira said...

//ஜெய்லானி said...
ஒரு ஜுவுக்கு போன ஃபீலிங் :-))//

ஹையோ...ஹையோ... அது ஜூ இல்ல ஸூ:)).. பூஸ் எஸ்ஸ்ஸ்ஸ்:))

Lakshmi said...

ஜெய்லானி ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க நன்றி

Lakshmi said...

அதிரா உண்மைதான் அதிக சந்தோஷம்தான் ஆனா இன்னும் சந்தோஷமா சிங்கப்பூர், அமெரிக்கா டிரிப் எல்லாம் கூடபாக்கி இருக்கே. கூடவே வரியா?

Lakshmi said...

அதிரா சிங்கத்துக்கு பிடரி முடி இருக்கே அப்போ அது ஆணா, பெண்ணா? நீயே சொல்லு.

Lakshmi said...

அதிரா ஜெய்லானிய கலாய்க்காட்டி உனக்கு பொழுதே போகாதா?

ஜெய்லானி said...

//
அதிரா உண்மைதான் அதிக சந்தோஷம்தான் ஆனா இன்னும் சந்தோஷமா சிங்கப்பூர், அமெரிக்கா டிரிப் எல்லாம் கூடபாக்கி இருக்கே. கூடவே வரியா? //

அது சரி பூஸ் குட்டியோட வெளியூர் பயணமா....!! ஹா..ஹா... :-)))

Lakshmi said...

ஐயயோ பூசாருடன் பயணமா?

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

வித்தியாசமான அழகிய அனுபவம் மேடம்! அந்தப் போட்டோக்களின் சைஸை கொஞ்சம் குறையுங்களேன்! இன்னும் தெளிவாக இருக்கும்!

athira said...

லக்ஸ்மி அக்கா.. நான் உங்களோடு வர ரெடி, ஆனா எனக்கு புல்போல்ல நிண்டு வரத்தான் பிடிக்கும், அதுக்கு மறுப்புச் சொல்ல மாட்டீங்கதானே? நான் லைவ் இன்சூரன்ஸ் எடுத்திட்டனே:))..

குட்டி எல்லாம் கூட்டி வரமாட்டேன், என் இமேஜ் டமேஜ் ஆகிடாது?:).

athira said...

//அதிரா சிங்கத்துக்கு பிடரி முடி இருக்கே அப்போ அது ஆணா, பெண்ணா? நீயே சொல்லு.//

இது சத்தியமா பெண் சிங்கம்தான் லக்ஸ்மி அக்கா:).... ஆண்களுக்கு பிடரில முடி முளைக்கிறதாவது ஹையோ..ஹையோ...:)

Lakshmi said...

வராதவங்கல்லாம் நம்மபக்கம் வந்திருக்கீங்க சந்தோஷம் மணி நீங்க சொன்னது போல சைஸ் கம்மி பண்ணிட்டேன் இப்ப ஓக்கேவா? அடிக்கடிவாங்க மணி

Lakshmi said...

அதிரா நீகூட லைவ் இன்சூரன்ஸ் எல்லாம் எடுத்து ரெடியா இருக்கே. நான் இன்னும் அதெல்லா எடுக்கலியே பரவால்லே குட்டியோடவந்தா உன் இமேஜ் ஒன்னும் டெமேஜ் ஆயிடாது சும்ம வா.

Lakshmi said...

அதி என்ன லொள்ளா.

ஹேமா said...

மிருகங்களோடு கொண்டாட்டமா !

Lakshmi said...

ஆமா ஹேமா ஜங்கல் மே மங்கல்தான்

ஸாதிகா said...

மிருகங்களை எல்லாம் நேரில் பார்த்தீர்களா?சூப்பர்!

Lakshmi said...

ஸாதிகா வருகைக்கு நன்றி

மாதேவி said...

நல்ல சுற்றுலா.
நன்றாக ரசித்திருப்பீர்களே.
நாங்களும் ரசிக்க வருகின்றோம்....

Lakshmi said...

மாதேவி வருகைக்கு நன்றி

Geetha Sambasivam said...

சிங்கம் சிங்கிளா வந்திருககா? சரி.

Lakshmi said...

கீதா வருகைக்கு நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .