Google+ Followers

Pages

Monday, February 13, 2012

கிலிபி 13 (ஆப்ரிக்கா)

 வாரா வாரம் சண்டே சண்டே வெளில கூட்டிண்டு போரா. அங்கு பாக்கவேண்டிய இடங்களுக்கு போய் வருகிரோம். வெளி நாட்டுக்கோ வெளி மானிலங்களுக்கோ பயணம் போனா அங்குள்ள சீதோஷ்ண நில, மக்களின் கலா சாரம் உணவு உடை, பேசும் பாஷை,கரன்சி என்று சொல்லும்போது தானே சுற்றுலா பயணம் பயனுள்ளதாக ஆகிரது. வேறு யாரானும் அதுபோல நாடுகளுக்குப்போகும் போது இதில்  நாம் பகிரும் தகவல்கள் அவர்களுக்கு பயன்படுமே. அதுதானே பயனத்தின் நோக்கமும். வாரம் எல்லா நாட்களும் எனக்கு செமை போர் ஆகும். ஒரு வேலையும் செய்ய விடமாட்டா பொண்ணு. காலை ஒருமணி நேரம் ஹெல்த் கேர் , வாக், எக்சர் சைஸ் மட்டும்தான் உருப்படியா செய்துண்டு இருக்கேன்.  சாப்பிட்டு சாப்பிட்டு இப்படி பூரா நாளும் ரெஸ்ட்லேயே இருப்பது செமை போர். கொண்டு போன புக்கெல்லாம் படிச்சு முடிச்சாச்சு. டி. வி, யிலும் பாக்கும்படி ஏதும் இல்லை.வெளில எவ்வளவு நேரம் வேடிக்கை பாக்க? சாமி ரூமில் ஒரு பகவத்கீதை  விளக்க உறைன்னு
 1000-பக்கத்தில்  குட்டி தலகானி சைசில் ஒரு ஆன்மீக புக் இருந்தது. குளிச்சுட்டு தினசரி அதை எடுத்துப்படிச்சுண்டு டைம் பாஸ். ஸ்வாமி பிரபு பாதா என்பவர் எழுதிய புக் அவர்தான் இஸ்கான்  ஹரே ராமா, ஹரே கிருஷ்னா இயக்கத்தை நிறுவியவராம். நிறைய நல்ல விஷயங்களும் சொல்லி இருந்தார். அதே சமயம்  அவர் சொல்லி இருந்த சில விஷயங்கள் எனக்கு ஏற்புடையதாக த்தோணலை. அதாவ்து, கிருஷ்னர் மட்டுமே முழு முதல் கடவுள் அவர்தான் மற்றவர்களைப்படைத்தார். நாம கிருஷ்ணரை மட்டும்தான் கும்பிட்டு வணங்கனும் என்ரெல்லாம் சொல்லி இருந்தார்.

                                   
 சில சமயம் சில ஆன்மீக புஸ்தகங்கள் படிக்கும் போது ரொம்பவே குழம்பிடுவேன். அதுபோலத்தான் இப்பவும் ஆச்சு. ஆனாலும் என்ன தான் சொல்லி இருக்கார் பாப்போமேன்னு பூராவும் படிச்சு முடிச்சேன். ஆனாலும் தெளிவு கிடைக்கலே. ஒரு வேளை எனக்குத்தான் புரிஞ்சுக்கமுடியல்லியோ என்னமோ. 2-மணிக்கு மாப்பிள்ளை சாப்பிட வருவார். சூடு சூடாக ருசியான சாப்பாடு. பாக்கி நேரம் பூராவும் சும்ம இருக்கணும். இது எப்படி இருக்குன்னா பெரிய  தலை வாழை இலை போட்டு அது நிறைய மைசூர்பாகு, லட்டு, ஜாங்கிரி, குலாப் ஜாமுன், கேசரி, பாயசம்னு ஒரேஸ்வீட்டா பரிமாறி சாப்பிட சொன்னா எப்படி திகட்டி போகும் அதுபோல ஓவர் ரெஸ்டும்

                                      

சரிப்படலை.திகட்டி போகுது. எல்லா தமிழ், ஹிந்தி சி. டி. க்களும் போட்டு பார்த்துமுடிச்சாச்சு.இரவில் டைம் பாஸ் பண்ணியாச்சு.மறு நா காலை எழும்போதே மழை பெய்தமாதிரி மண் வாசனையா இருந்தது காற்றில் குளுமையும் இருந்தது. காபி குடிச்சு கார்டன் போனேன். அப்பாடா!!!!!!!!!!! ஜோன்னு மழை கொட்டிண்டு இருந்தது. இங்கே மார்ச், ஏப்ரல் மழைகாலமாம். தோட்டத்துமண் எல்லாம் அரிச்சுண்டு குட்டி குட்டி அருவிமாதிரி ஓடிண்டு இருந்தது.  மரம் செடி, கொடிகள் நிறையா இருப்பதால் கீழே பேர் தெரியாத பூச்சிகள் ஓடிக்கொண்டிருந்தன.  நத்தை, அட்டை, மண்புழு, மண்புழு போல பத்துமடங்கில் ஒரு ஊர்வன ஜந்து பாம்பை விட ஒரு சிறிய ஊர்வனஜந்து என்று சுகமா நீந்திக்கொண்டிருந்தன. ஒரே சகதி தோட்டம் பூராவும். இப்படி இருந்தா, எப்படி வாக் போகமுடியும்? கொஞ்ச நெரம் மழை ரசிச்சுட்டு வீட்டுக்குள் இருக்கும் பெரிய வராண்டா, பால்கனியில் அரைமணி நேரம் வாக். மத்த எக்சர் சைஸ்களும் முடித்தேன்.

                               

                    
  மாப்பிள்ளையிடம் எனக்கு போர் அடிக்குது திரும்பி போக டிக்கட் எடுத்துடுங்க்ன்னு சொன்னேன். பொண்ணும் மாப்பிள்ளையும் விசிட்டிங்க் விசாவில் வந்தவா 6- மாசம் இங்க தங்கலாம். ஏன் இப்பவேபோகனும்னு சொல்ரீங்க்ன்னா. அப்பவே நான் வந்து ரெண்டுமாசம் ஆகி யிருந்தது. முதலில் ஏர் போர்ட்டில் ஒரு மாசத்துக்குத்தானே விசா ஸ்டாம்ப் பண்ணிக்கொடுத்தா. அப்புரம் ஒருமாசம் ஆனதும் மாப்பிள்ளை வேர எங்கியோ போய் கூட ரெண்டு மாசத்துக்கு எக்ஸ்டென்ஷன் பண்ணிண்டு வந்தார். நான் இப்பவே
போகனும்னு சொன்னது அவர்களுக்கு மனசில்லே. சரி இன்னும் ரெண்டு மூனு முக்கியமான இடங்கள்ளாம் பார்த்துட்டு அப்புரமா கிளம்பலாம் நக்குரு நெஷனல் பார்க், மஸாய் மாரான்னு ரெண்டுஇடம் போலாம்ன்னா. நான் டிக்கட் எடுத்துடரேன்னு சொன்னார் மாப்பிள்ளை.டெய்லி மழை ரசிக்க முடிந்தது வீட்டு வராண்டாவில் உக்காந்து . மரம் செடி கொடிகள்ளாம் அலம்பி விட்டதுபோல பளீர் பச்சையில் மின்னிக்கொண்டு இருந்தது. எக்க சக்க பூச்சி பொட்டுகள் நடமாட்டம் மிக அதிகம்..
                                

                          
 வந்ததுக்கு கொஞ்சம் ஸ்வாஹிலியில்,( அதுதான் இங்குள்ளவர்கள் பேசும் பாஷை)  ஏதானும் கொஞ்சம்  வார்த்தைகள் தெரிஞ்சுக்கலாம்னு ட்ரை பண்ணினேன்.அதிலேந்து கொஞ்சம் சொல்லி இருக்கேன்.

JAMBO-----  HELLO
HABARI YAKO?-----  HOW ARE  YOU?(SINGULAR)
HABARI ZENU?--------- HOW ARE YOU?(PLURAL)
NZURI-------------------   WELL
ASANTE---------------- THANK  YOU.
KARIBU--------------- WEL COME
TAFADHALI---------- PLEASE
JINA LAKO NANI?-------------   WHAT IS YOUR  NAME?
JINA LANGU NI...... --------------  MY NAME IS........
HAPANA-----------------   NO
NDIYO----------------  YES
KWA HERI-------------- GOOD BYE(SINGULAR)
KWA HERINI-------------  GOOD  BYE(PLURAL)

CHAKULA--------------FOOD
KIFUNGUA  KINYWA--------- BREAK FAST
CHAKULA CHA MCHANA-------- LUNCH
CHAKULA  CHA JIONI----------- DINNER
MAJI ------------------------------  WATER
WEITA----------------------------- WAITER

  நன்றி- (கூகுல் இமேஜ்)                                                       (தொடரும்)

25 comments:

மகேந்திரன் said...

பெற்றவர்கள் ஓய்வெடுக்கட்டும் என்று
பிள்ளைகள் நினைப்பது சரிதானே அம்மா...
ரவாலட்டு எனக்கு மிகவும் பிடித்த பண்டம்..
இங்கே அதைப் பார்த்தவுடன் உடனே செய்து
சாப்பிடனும் போல இருக்குது.
சிறந்த வாழ்வியல் காவியம் கீதை பற்றிய தங்கள்
எழுத்துக்கள் அழகு.
நானும் ஒரு புது மொழியில் சில வார்த்தைகளை
தெரிந்துகொண்டேன் உங்கள் மூலமாக..
குறித்து வைத்துக்கொண்டேன்.

RAMVI said...

தங்களின் அனுபவங்களை சிறப்பாக பதிவிட்டு இருக்கீங்கம்மா.
உங்க தயவால ஸ்வாஹிலி பாஷையில் நானும் நாலு வார்த்தை தெரிஞ்சுண்டேன். நன்றி.

athira said...

//பாக்கி நேரம் பூராவும் சும்ம இருக்கணும். இது எப்படி இருக்குன்னா பெரிய தலை வாழை இலை போட்டு அது நிறைய மைசூர்பாகு, லட்டு, ஜாங்கிரி, குலாப் ஜாமுன், கேசரி, பாயசம்னு ஒரேஸ்வீட்டா பரிமாறி சாப்பிட சொன்னா எப்படி திகட்டி போகும் அதுபோல ஓவர் ரெஸ்டும்//

உண்மையிலும் உண்மை, ரெஸ்ட் எடுக்க நேரம் கிடைக்காதோ என எண்ணுவோம், ஆனா அதிக நேரம் கிடைத்தால், பொழுதே போகுதில்லையே எனப் புலம்புவோம்...:)

athira said...

என்னதான் உறவான வீடாயினும், நம் வீட்டில் இருந்தால் மட்டுமே பொழுது போகும். அவர்களும் எவ்வளவு நேரம்தான் எம்மோடயே இருக்க முடியும்.

நல்ல “சுசி”யாகச் சொல்லிவாறீங்க தொடரை.

athira said...

6 மாதங்களில் இவ்வளவு சொற்கள் தெரிந்துகொண்டீங்களோ? இப்போ மறந்திருப்பீங்களே:).

radhakrishnan said...

மழையில் நனையும் மரங்கள் மற்றும்
படங்கள் அருமை.அதற்குள் அலுத்துவிட்டதா?அப்போது இணையத்
தொடர்பு இருந்திருந்தால் அலுப்புத் தெரியாமல் இருந்திருக்கும்.ஆப்பிரிக்கப்
பதிவு இன்னும் கொஞ்சம் ஓடும் என்று
நினைக்கிறேன். நன்றி அம்மா.

கோவை2தில்லி said...

சும்மாவே ரெஸ்ட் எடுப்பதும் மிகவும் போரானது தான்......

உங்க புண்ணியத்துல ஸ்வாஹிலி பாஷை கத்துக்க முடிந்ததும்மா....

ஸாதிகா said...

ஸ்வாஹி மொழி கூட கத்துக்கொண்டீர்களா?பொதுவாக ஆப்ரிக்காவில் போர்ச்சுக்கிஸிய மொழிதான் பேசுவாரக்ள் என்ரு கேள்விப்பட்டு இருக்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

Jambo லக்ஷ்மிம்மா....

Habari yako?

ஸ்வாஹிலி பாஷை சொல்லிக்கொடுத்தற்கு Asante.

Kwa Heri :)))

Lakshmi said...

மஹேந்திரன் வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றி எங்க வீட்டுக்கு வாங்க ரவா லட்டு பண்ணித்தரேன்.

Lakshmi said...

ரமா வருகைக்கு நன்றி

Lakshmi said...

அதிரா வாங்க உங்களுக்கும் ஓவர் ரெஸ்ட் பிடிக்காதா?

Lakshmi said...

அதிரா இங்க்ல்லாம் ஸ்வாஹிலி பேச சான்சே இல்லியே எதுவும் கண்டின்யூல இருந்தாதானே நினைவில் இருக்கும்

Lakshmi said...

ராதா கிருஷ்னன் எங்கபோனாலும் நம்ம வீடு வந்தாதான் பாந்தமா இருக்கு. அதான்

Lakshmi said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ஸாதிகா இவங்க இருக்கும் பக்கம் ஸ்வாஹிலிதான் பேசுராங்க.

Lakshmi said...

வெங்கட் ஹா ஹா, KARIBU- ASANTE

Ramani said...

படிக்கிற எங்களுக்கு சுவாரஸ்யமாகத் தான் போகிறது
அதற்குள் போர் என்றால் எப்படி
மாப்பிள்ளை சொல்கிற மாதிரி ஆறு மாதம் இருந்தே வாருங்கள்
பயணமும் பயணக் கட்டுரையும் சிறக்கட்டும் வாழ்த்துக்கள்

Lakshmi said...

ரமணி சார் வருகைக்கு நன்றி. என் எழுத்தை நீங்கல்லாம் ரசிப்பது எனக்கு ரொம்ப ச்ந்தோஷமா இருக்கு

இராஜராஜேஸ்வரி said...

மழைப் பகிர்வு ரொம்ப ரசிக்கவைத்தது...

தமிழ்தோட்டம் said...

அருமையான பகிர்வு பகிர்வுக்கு நன்றி

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Lakshmi said...

இராஜராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

Lakshmi said...

தமிழ்தோட்டம் வருகைக்கு நன்ரி

Geetha Sambasivam said...

மழையோட சேர்ந்த ஸ்வாஹிலி நல்லா இருக்கு. வேலை இல்லைனா போர் தான். :(

Lakshmi said...

கீதா வருகைக்கும் ரசனைக்கு நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .