Google+ Followers

Pages

Monday, February 20, 2012

கிலிபி ஆப்ரிக்கா 14


 நக்குரு மசைமாரா விஜயம்.
 நான், என் பெண், மாப்பிள்ளை மூவரும் ஒரு வியாழக்கிழமையன்று காலை 5 மணிக்கு கிளம்பினோம். வழக்கம் போல் கம்பெனி டிரைவர் எங்களை மொம்பாசா விமான தளத்தில் கொண்டுவிட்டான். அங்கிருந்து கென்யா ஏர்வேஸ் ப்ளேனை பிடித்து நைரோபி வந்து சேர்ந்தோம்.  அங்கு ரெடியாக ஒரு வண்டி எங்களை கூட்டிக்கொண்டு போக காத்திருந்தது.  மாப்பிள்ளை அவருக்கு தெரிந்த ஒரு குஜராத்தி ட்ராவல் ஏஜெண்ட் மூலம் எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தார்.  மாப்பிள்ளையின் ஒரு நைரோபி தோழர் (தமிழ் காரர் தான்) குடும்பமும் எங்களுடன் வருவதாய்யிருந்தது. விமான தளத்திலிருந்து நேரே அவர் வீட்டுக்கு போய் அவர்களையும் கூட்டிக்கொண்டு கிளம்பினோம்.  காலை 10.30 க்கு நைரோபியை விட்டு கிளம்பி விட்டோம்.  போகிற வழி ஒரே செழிப்பாக ரெண்டு பக்கமும்                     பச்சை பசேல் என்று பார்க்க நன்றாக இருந்தது.  வண்டியின் ஓட்டுனர் ஒரு கென்யன் கருப்பர்.  அவருக்கு கொஞ்சம் ஹிந்தியும் தெரிந்திருந்தது. அப்பப்பொ ஹிந்தியிலும் ஏதாவது சொல்லிக்கொண்டு வந்தார்.  அங்கு உள்ள நிரைய கருப்பர் களுக்கு ஹிந்தியும் குஜராத்தியும் தெரிந்திருக்கிரது.  ஏனென்றால் அவர்களை வேலை பார்க்கும் இடத்தில் 90 சதம் இந்தியர்கள் தான் அவர்களை இயக்குகிரார்கள். 
                      


 நைரோபியிலிருந்து 160 கி.மி தொலைவில் நக்குரு  நேஷனல் பார்க் இருக்கிறது. அதை சென்று அடைவதற்க்கு 3 மணி நேரம் ஆகும். போகிற வழியில் ரோடு நன்றாக இருக்கும். இரண்டு பக்கமும் கவனமாக பார்த்துக்கொண்டு வரவும். நிறைய கேம்ஸ் பார்க்கலாம். (கேம்ஸ் என்றால் இங்கு ஒஇல்ட் அனிமல்ஸ் என்று புரிந்து கொள்ளணும்.) இது சொன்னது அந்த ஓட்டுனர்.  நாம் தங்க போவது ‘சரோவா லைன்ஹில்ஸ் ஹோட்டல்’ என்றான்.  போகிற வழியில் வந்த இடங்கள் கேட்க வேடிக்கையாக இருந்தது, மாதிரிக்கு….. கிக்குயு, இவாசோ, கித்துங்கிரி, கிஜாபே, கராகிட்டே, னைவாஷா, மொரெண்டாட்டி, கில்கில்.  நக்குரு போய்ச்சேர்ந்த வுடன் நக்குரு ஆர்ய சமாஜ், கிருஷ்ணா மந்திர் எல்லாம் பார்த்தோம்.  அங்கும் நிரைய ஹிந்துக்கள் 3 தலை முரையாக வாழ்ந்து கொண்டு வருகிரார்கள். அவர்கள் மெஜாரிட்டி குஜாராத்திகள் தான்.  கொஞ்சம் சீக்கியர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கென்று தனியாக குருத்வாரா வைத்துக்கொண்டிருக்கிரார்கள்.   
போகிற வழியில் அதிகம் மிருகங்கள் தெரியவில்லை. சில இடங்களில் வரிக்குதிரை யும் பல இடங்களில் நிறைய மான்களும் தெரிந்தன.
                                   

நாங்கள் தங்கப்போகும் ஹோட்டல் நக்குரு நேஷனல் பார்க்குகுள் இருக்கிரது.  அந்த பார்க் நுழைவாயிலில் காரை நிப்பாட்டி எல்லாருக்கும் உள்ளே போவதற்க்கு டிக்கட் வாங்கிக்கொண்டோம்.  சரியாக மதியம் 2.30க்கு நாங்கள் எங்கள் ஹோட்டலை வந்து அடைந்தோம். எங்களுக்கு ஒரு தனி காட்டேஜ், எங்கள் நண்பர் குடும்பத்துக்கு ஒரு தனி காட்டேஜ் புக் பண்ணியிருந்தது.  உள்ளே சாமான்களை வைத்து விட்டு நாங்கள் உள்ளே உள்ள ரெஸ்டாரெண்டுக்கு சாப்பிட போனோம்.  அது ஒரு பாக்கேஜ் டூர் ஆதனால் சாப்பாடும் விலையில் அடக்கம். 
ரெஸ்டாரெண்ட் நன்றாக அமைக்கப்பட்டிருந்தது. எல்லாம் மூங்கிலால் அமைக்கபட்டிருந்தது.  எங்களை தவிர இன்னொரு இந்தியர்களின் குரும்பமும் அங்கு இருந்தது.  மற்றவர்கள் எல்லாம் ஈரோப்பியர்கள் (வெள்ளைகாரர்கள்).  கென்யாவில் நிரைய நேஷனல் பார்க்குகளும் மிருகங்களும் இருப்பதால் வெள்ளையர்களின் வரவு அதிகம்.  அவரவர்கள் நாடுகளில் மிருகங்களை மிருககாட்சி சாலையில் மாத்திரம் பார்க்க முடியும்.  ஆனால் இங்கோ அவைகளை நிரைய அவைகளின் நேட்சுரல் சரொவ்ண்டிங்ஸில் பார்க்கலாம். 

                  
 டிரைவர் ஏர்கனவே சொல்லியிருந்ததால் நாங்கள் சாப்பிட்டவுடனேயே வண்டியில் சுற்றி பார்க்க கிளம்பி விட்டோம்.  முதலில் எங்களை நக்குரு ஏரிக்கு கொண்டு சென்றான்.  அது காண கிடைக்காத காட்சி.  அந்த லேக்கில் லட்ச கணக்கில் ஃபிளமிங்கோ பறவை கள் இருந்தன.  


 போட்டோவை பாருங்கள்.  அவைகளை அப்படியே பார்த்துக்கொண்டிருக்கலாம் என்று தோணியது.  எங்களை போல் அங்கு நிறைய பேர்கள் வந்திருந்தார்கள். எல்லாரும் போட்டோ எடுத்து தள்ளினார்கள்.  அங்கு 2 மணி நேரம் கழித்தோம்.  பிரகு கிளம்பி சிரிது தூரம் போனதும் காண்டா மிருகங்கள் தெரிய ஆரம்பித்தன.  ஏகப்பட்டவை 

                     
 தென்பட்டன.  அதுகள் பக்கத்தில் வண்டியை கொண்டு போகக்கூடாது, கொஞ்சம் தூரத்திலிருந்தே பார்த்தோம்.  அதிலும் ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை. பிறகு இருட்ட ஆரம்பித்து விட்டதால் ஹோட்டலுக்கு திரும்பி வந்து விட்டோம். 
இன்று அதிகாலையில் கிளம்பி, கொஞ்ச தூரம் காரிலும், பெரிய தூரம் விமானத்திலும், மறுபடி கொஞ்சம் தூரம் காரிலும் பயணம் செய்து பறவைகளையும் சில மிருகங்களையும் பார்த்தாச்சு.  திரும்பி வந்ததும் காட்டேஜில் போய் ஃப்ரெஷ் ஆகி 8 மணி வாக்கில் டின்னர் சாப்பிட்டோம்.  
                  
நாங்கள் யாவரும் வெஜிட்டேரியன்.  அங்கு எல்லா ஹோட்டல்களிலும் வெஜிட்டேரியனுக்கென்று தனியாக தரமான உணவு செய்திருப்பார்கள், ஏனென்றால் சுற்றுலா பயணிகளில் நிறைய குஜராத்திகள் அடக்கம்.  அவர்கள் எல்லாரும் சுத்த வெஜிட்டேரியன்கள்.  தவிரவும், நிறைய வெள்ளையர்களும் வெஜிட்டேரியன்களாக மாரியிருக்கிரார்கள்.  ஆகவே எல்லாரின் தேவைகளை பூர்த்தி செய்வதர்காக எல்லா விதமான உணவும் உண்டு.   

 நன்றி-(கூகுல் இமேஜ்)                      (தொடரும்)

37 comments:

ஸாதிகா said...

அழகான படங்கள்..அருமையான வர்ணனை.

ராமலக்ஷ்மி said...

பயண அனுபவம் அருமை. பகிர்வுக்கு நன்றி.

radhakrishnan said...

அருமையான டூர்.மிகவும் மெனக்கெட்டு
அருமையான படங்களுடன் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி அம்மா.

வெங்கட் நாகராஜ் said...

படங்களும் விவரங்களும் அருமைம்மா.... பகிர்வுக்கு நன்றி.

மனோ சாமிநாதன் said...

அனுபவம் தொடர்ந்து அருமையாக இருக்கிறது. புகைப்படங்களும் அழகு!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்போதுதான் மீண்டும் இந்தப்பக்கம் வந்தேன், பொறுமையா கிலிபி 14 பாகங்களையும் படிச்சிட்டேன். உங்ககூடவே கிலிபில ட்ராவல் பண்ண மாதிரி இருக்கு... தொடருங்கள்...!

அமைதிச்சாரல் said...

நல்லா சுத்திப் பார்த்துருக்கீங்கன்னு சொல்லுங்க.. உங்க கூடவே நாங்களும் வந்தோமே ;-)

RAMVI said...

நல்ல அனுபவ பயணம் அம்மா. சுவாரசியமான தகவல்கள். மிருகங்களின் படங்கள் அருமை.

//எல்லா ஹோட்டல்களிலும் வெஜிட்டேரியனுக்கென்று தனியாக தரமான உணவு செய்திருப்பார்கள்,//

பயணம் என்றாலே சைவ உணவுதான் பெரிய பிரச்சனையாக இருக்கும். நல்லவேளையாக இங்கு உங்களுக்கு அந்தக்கவலை இலலை.

இராஜராஜேஸ்வரி said...

காண கிடைக்காத காட்சி. அந்த லேக்கில் லட்ச கணக்கில் ஃபிளமிங்கோ பறவை கள் இருந்தன.


அருமையான பயணம்..
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

Lakshmi said...

ஸாதிகா வருகைக்கு நன்றி

Lakshmi said...

ராமலஷ்மி வருகைக்கு நன்றி

Lakshmi said...

ராதாகிருஷ்னன் வருகைக்கு நன்ரி

Lakshmi said...

வெங்கட் வருகைக்கு நன்றி

Lakshmi said...

மனோ மேடம் வருகைக்கு நன்றி

Lakshmi said...

ராமசாமி சார் பொருமையா எல்லாபகுதிகளும் படித்து ரசித்ததற்கு நன்றிங்க.

Lakshmi said...

சாந்தி வருகைக்கு நன்ரி

Lakshmi said...

ரமா வருகைக்கு நன்றிம்மா.

Lakshmi said...

இராஜராஜேஸ்வரி வருகைக்கு நன்ரி

ஹேமா said...

கடைசி இரண்டு பாகங்களை இப்போதுதான் மூச்சுவிடாமல் படித்து முடித்தேன் அம்மா !

Lakshmi said...

ஹேமா வருகைக்கு நன்றிம்மா

Lakshmi said...

ஹேமா வருகைக்கு நன்றிம்மா

Ramani said...

உங்கள் புண்ணியத்தில் எல்லா இடங்களையும்
ரசித்துப் பார்த்தோம்
புகைப்படங்கள் நேரடியாப் பார்ப்பதைப் போல இருக்கிறது
அருமையான பயணத் தொடர்
பகிர்வுக்கு நன்றி

Lakshmi said...

ரமணி சார் வருகைக்கு நன்றி

athira said...

லக்ஸ்மி அக்கா, எனக்கு இருந்தாப்போல 2,3 நாட்களாக உங்கள் பக்கம் பின்னூட்டம் திறக்குதே இல்லை.. நீஈஈஈஈஈஈஈஈஈஈஈண்ட நேரம் வெயிட் பண்ணித்தான் இப்போ வந்தேன்.

athira said...

முதலாவது படத்திலிருக்கும் ரோட்டும் மரங்களும், அதேபோலவே இங்கு எங்கள் பக்கத்தில் ஹொஸ்பிட்டலின் ஒரு வோர்ட் க்குப் போகும் பாதை இருக்கு, சமரில் வெய்யிலே படாது சூப்பராக இருக்கும், படமெடுத்து வைத்திருக்கிறேன்.

அருமையாகப் போகுது ஆபிரிக்க ட்ரிப்... தொடருங்க.

கோவை2தில்லி said...

படங்களும், விவரங்களும் அருமையாக இருக்கும்மா. தொடர்கிறோம்.

Lakshmi said...

அதிரா விடாமல் முயன்று வந்ததற்கு நன்றி

Lakshmi said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி

சம்பத்குமார் said...

வணக்கம் அம்மா..இன்றைய வலைச்சரத்தில் தங்களது இடுகை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளேன்.ஓய்வு நேரத்தில் வலைச்சரம் வந்து வாசித்து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்
ஜொலிக்கும் பெண் சிற்பிகள்

அன்புடன்
சம்பத்குமார்

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான அழகான பதிவு.
வலைச்சரத்தின் இன்று மீண்டும் அறிமுகம் ஆகியுள்ளதற்கு பாராட்டுக்கள். அன்புடன் vgk

மாதேவி said...

வரிக்குதிரைகள், காண்டாமிருகங்களை இயற்கையுடன் அவைகள் வாழும் இடங்களைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சி.

விடுபட்ட உங்கள் பயணத்தை சென்று பார்க்கின்றேன்.

Lakshmi said...

சம்பத் என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்த்யதற்கு நன்றி சந்தோஷம்

Lakshmi said...

கோபால் சார் வருகைக்கு நன்றி

Lakshmi said...

மாதேவி வருகைக்கு நன்ரி

Asiya Omar said...

இன்று தான் விட்டுப்போன பகிர்வுகளை வாசித்து வருகிறேன்.சூப்பர்.

Geetha Sambasivam said...

படங்களோடு வர்ணனை அருமையா இருக்கு. எங்கே போனாலும் குஜராத்தியர் இருந்தால் அங்கே கட்டாயம் வெஜிடேரியன் உணவு கிடைத்துவிடும். இல்லைனா கஷ்டம் தான். :)))))

Lakshmi said...

கீதா வருகைக்கு நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .