Pages

Wednesday, February 8, 2012

கிலிபி 11( ஆப்ரிக்கா.)

ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டு நாங்க, பக்கத்துவீட்டு மலயாளி ஃபேமிலி கூட்டிண்டு காலை 10- மணிக்கு கிளம்பினோம்.இங்க எப்போ வெளில கிளம்பினாலும் எல்லோரின் பாஸ்போர்ட் காப்பி, ஐடி காப்பி, ஒர்க் பர்மிட் காப்பி எல்லாம் எப்பவும் மறக்காம எடுத்துக்கணும் எவன் எப்போ செக் பண்ணுவான்னே தெரியாது. கோபில் என்னும் இடத்தில் போய் டீசெல் போட்டுண்டு ஆளுக்கொரு இள் நீர் குடித்து வழுக்கையுடன் தேங்காயை தூக்கிப்போட்டுட்டு போனோம். வழுக்கையெல்லாம் தூக்கிப்போட மனசே வல்லே.  போகும் வழியில் ஒரு  கோவில் இருந்தது. அந்தக்கோவிலில் எந்தபாகுபாடும் இன்றி



                                               
                       
                          
                                
சிவன் விஷ்ணு, ப்ரும்மா, பிள்ளையார் முருகன் ஐயப்பா என்று எல்லா சாமிகளும் இருந்தா அன்று சிவராத்திரியா இருந்தது.அங்கிருப்பவர்கள் பால் பாக்கெட் வாங்கிவந்து சிவ லிங்கத்துக்கு அபிஷேகம் பண்ணிண்டே இருந்தா. நாங்களும் பால் அபிஷேகம் பண்ணிட்டு பிரசாதம்லாம வாங்கிண்டுவெளில வந்தோம் கோவில் நல்லா க்ளீனா பராமறிக்கறா.சுத்தமா இருக்கு.சிவராத்திரி என்று கொஞ்சம் கூட்டம் இருக்கு. அங்கேந்து லிகோனி நக்குமேட் போய் கொஞ்சம் பழங்கள் பிஸ்கெட்ஸ் வாங்கிண்டு கிளம்பினோம்.மும்பாசா ஈஸ்ட்லேந்து வெஸ்ட் போகணும். அதுக்கு நடுவில் கடல் தண்ணி பெரிய ஏரி மாதிரி ஓடிண்டு இருந்தது. அதைக்கடக்க ஃபெர்ரி போட்ன்னு ஒன்னு இருக்கு.

                           

                                
 ரொம்ப பெரிய போட், எல்லாரின் வண்டிகள், நடந்து வருபவர்கள் என்று தனித்தனி இடம் இருக்கு. எங்க காரு போட்டினுள் போச்சு. ஆள் சேரும்வரை காத்திருந்து கூட்டம் சேர்ந்ததும் போட் கிளப்பறா.வாகனங்களுக்கு மட்டும் காசு வசூல் பண்ரா. நடந்து வருகிரவர்களிடம் காசு வசூலிப்பதில்லை.அவ்வளவு வாகனக்கள் ஏற்றிப்போகும் அளவுக்கு ப்ரும்மாண்ட போட். அது அசைந்து, அசைந்து செல்வதே பாக்க நன்னா இருந்தது.அந்தப்பயணம் டிபரண்ட் எக்ஸ்பீரியன்சா இருந்தது.

10- நிமிஷத்துக்குள்ள மறுபக்கம் வந்துட்டோம்.  கார் இப்போ புழுதி ரோட்டில் பயணம். மாப்பிள்ளைதான் ட்ரைவ் பண்ணினார். தமிழ் பாட்டும் சி. டி.யில் கேட்டுண்டே கார் பயணம் சுகம்தான்.சண்டே வேலைக்காரா எல்லாரும் லீவு எடுத்துக்குவா.ஆப்ரிக்க ஜனங்கள் வேகமா, வேகமா நடந்து அன்றாட வேலைகளுக்கு சென்று கொண்டிருந்தார்கள்.ரோடெல்லாம் கப்பி ரோடாத்தான் இருக்கு ஆனா ரெண்டு புறமும் செழிப்பான பச்சை பசேல் என்று மரங்கள் அணி வகுப்பு போல இருக்கு.ப்ளாட்பாம் கைவண்டி கடைகளும் ஆங்காங்கே தென்படரது.பக்கம் பக்கமா ப்ளாஸ்டிக் குப்பைகள் பறக்குது ஆட்களைப்பார்க்கும்போதுதான் இது ஆப்ரிக்கான்னே நினைக்க வேண்டி இருக்கு.இவ்வளவு செழிப்பன பூமியாக இருக்கும்போது அதை நல்லா யூஸ்பண்ணிண்டா வியாபாரம் நல்லா செழிப்பா வளரும்.திவி ஏரியாவுக்குள் போனோம். பெரிய பீச் ரிசார்ட்.பறந்து விரிந்த ஏரியா. மாப்பிள்ளையின் ஃப்ரெண்ட் ஒருவர் அங்கு வேலை செய்து கொண்டிருந்தார். ஏற்கனவே நாங்கள் வரும் விபரம் சொல்லி இருந்ததால் வாசலிலேயே காத்துக்கொண்டிருந்தார். சிரித்தமுகத்துடன் வரவேற்பு. அவர் இங்கு வேலை செய்வதால் அவருக்கு இங்கு காட்டேஜ் ஒதுக்கி இருந்தார்கள் முதலில் அங்கு போனோம்.போகும்வழி செமை அசத்த்ல் ரகம் வழு வழு  சிமெண்ட் தரை,

                              

                    

                             

                          
 மேல்கூரை எல்லாம் ஓலை, மூங்கில் தேங்கா நாரில் கட்டி டெகொரேட் செய்திருந்தார்கள். லைட்டுக்கு ஷேட் கூட மூங்கில் தொப்பிதான் நடு நடுவில் நம்ம மூதாதையர்கூட்டம் எக்க சக்கம்.(குரங்குகள்தான்) பயமே இல்லாம ஓடிப்பிடிச்சு விளையாடிண்டு இருக்கு.அவர்கள் வீடும் ரெண்டு பெட் ரூமுடன் வசதியா இருக்கு. அங்கியும் இள்னீர் உபசாரம். இங்கெல்லாம் யார் வீட்டுக்குப்போனாலும் காபி க்கு பதில் இள் நீர் உபசாரம்தான் அது நல்லாவும் இருக்கு.

  அப்பவே2- மணி ஆச்சு. பழங்கள் பிஸ்கெட் அவாகிட்ட கொடுத்துட்டு சாப்பிட கிளம்பினோம். அவர் அந்த ரிசார்ட்ல வேலை செய்வதால் வீட்டில் சமையல் செய்வதே இல்லியாம் யாரு வந்தாலும் நேரா ஹோட்டல்தான். எங்க்ளையும் கூட்டிண்டு போனா அவா வீட்டு  வாசலில் ஹோட்டல். ப்ஃபே டைப் லஞ்ச். யாருக்கு எதுவேணுமோ எடுத்துக்கோங்கன்னு உபசாரம். சுத்திவர மூங்கில் சேர்கள் அதில் பூராவும் ஃபாரினர்ஸ் தான் நிறைய இருந்தார்கள்.

              
                           
  பரிமாறுபவகள் ஆப்ரிக்கர்கள் . முதலில் சூப் எடுத்துண்டுவந்து சேரில் உக்காந்தோம் பக்கத்து சீட்டில் ஒரு குரங்கு ஜம்னு உக்காந்து முறைச்சு பாக்குது.ஃப்ரெண்ட் சொன்னார் பயப்படாதீங்க இள்னீர்வழுக்கையை அதன்கையில் கொடுத்தால் வாங்கினு சமத்தா ஓடிடும் என்றார். அதுபோலவே போயிடுத்து. வெள்ளகார சின்ன பெண்குழந்தைகள் அங்கிருக்கும் ஆப்ரிக்கர்களின் ஹேர்ஸ்டைல்போல எங்களுக்கும் பின்னிவிடுங்கன்னு சொல்லி வரிசையா உக்காந்து குடி குட்டியாபின்னல் போட்டு மகிழ்ந்தார்கள். சாப்பாடு ஒரு புறம் பூரா வெஜ் ஐட்டம், மறுபுறமாக நான் வெஜ் ஐட்டம்னு எல்லாமே மூக்கைத்துளக்கும்  (நறு மணத்துடன்) வரிசைகட்டி டிஸ்ப்ளே பண்ணி இருந்தா . எந்த ஐட்டம் எடுத்தாலும் வாலும் தோலுமா தொங்கினு இருக்கு. எதை எடுப்பதுன்னே புரியல்லே. ஒரு சீட்டில் பதார்த்தங்களின் பெய்ரும் எழுதி வச்சிருந்தா. நாங்க ஜீரா ரைஸ், டால் ஃப்ரை பன் எடுத்துண்டோம் ஒரு பெரிய க்ளாஸ் நிறைய லஸ்ஸியும் எடுத்துண்டோம். கல கல் பேச்சுடன்  லஞ்ச்.. மாப்பிளைக்கு தெரிந்தவர்கள் நிறையபேர் வந்து ஹாய் சொன்னார்கள். சாப்பிட்டு பக்கத்திலேயே இருந்த பீச் போனோம். வெள்ளை வெளேர் மணல் பறப்புடன் ஆரவார அலைகளுடன் கடல் அழகு.

                        

                                 

நாங்களும் ஓலைக்கூரைக்கு கீழே  நிழல்இடமாகப் பார்த்துமூங்கில் சேர்கள் போட்டுண்டு உக்கந்து பேசிண்டு இருந்தோம். நானும் சுத்திவர வேடிக்கை பாக்க ஆரம்பிச்சேன். நிறையா வெள்ளைக்காரா அந்த வெய்யில் நேரத்திலும் உடம்பில் ஒரு குட்டியூண்டு துணி போட்டுண்டு எண்ணை தடவிண்டு மணலில் ஒரு டவல் விரிச்சு படுத்து சன் பாத் எடுத்துண்டு இருந்தா. சாப்பாடு, குடி எண்ணை மஸாஜ் கடல் குளியல் சன் பாத் என்று இயற்கை சூழலை அவா இஷ்டப்பட்டபடி என் ஜாய் பண்ணிண்டு இருந்தா இண்டியா காரா போல மா நிற மா மாறணும்னு இவ்வளவு கஷ்ட்டப்படறா.தேங்கா மரங்கள் எல்லாமே போன்சாய் அள்வில் குட்டையாக வே இருந்தது. கைக்கு எட்டு ம்உயரத்தில்  இள்னீர்காய்கள் குலை குலையா காய்ச்சு தொங்கிண்டு இருந்தது.

                                






3டு 5 மணிவரை பீச் அரட்டை, ரசனை.காபி கொண்டு தந்தா. ரெண்டுமணி நேரம் கடற்கரையில் உக்காந்ததுக்கே உடம்பெல்லாம் கொச, கொசன்னு உப்புதண்ணியின் பிசு பிசுப்பு இவாள்ளாம் நாள் பூரா எப்படி இங்க்யே இருக்கான்னு நினைச்சோம்.ரிசார்ட் பூரா சுற்றிப்பார்த்தோம். அமர்க்கள்மா இருந்தது. 6 மணிக்கு கிளம்ப மனமில்லாமல் கிளம்பினோம். திரும்ப வரும்போது இருட்டிடுத்து. பெர்ரி போட் பயணம் செய்து ஈஸ்ட் மும்பாசா வந்து கிலிபி பயணம். வண்டியில் பாட்டு. மாப்பிள்ளைக்கு தான் ட்ரைவ் பண்ணினதில் ரொம்ப டயர்டா ஆகியிருக்கும் ஸ்லைட் டோர்கதவுதான் நாங்கள்ளாம்  ஜலியா பின்னால உக்காந்து அரட்டை அடிச்சுண்டே வந்தோம். வீடு வர 9- மணி ஆச்சு. அப்பாடான்னுதான் இருந்தது ஆனா நல்ல ஒரு எக்ஸ்பீரியன்ஸ் கிடைத்தது.

(   நன்றி- கூகுல் இமேஜ்)                                             (தொடரும்)

30 comments:

குறையொன்றுமில்லை. said...

தமிழ் மணம் இணைக்க முடியல்லே.

Mahi said...

Nice narration as usual! :)

Jaleela Kamal said...

லஷ்மி அக்கா 9 பதிவு வ்ரை படிச்சாச்சு,.

இந்த படஙக்ள் சூப்பராக இருக்கு
பதிவு நேரம் கிடைக்கும் போது படிகிறேன்

அப்படியே நீங்க அழைத்த மழலை உலகம் தொடர் பதிட்வையும், கேன்சர் விழிப்புணர்வு பதிவையும் வந்து பாருங்கள்.
http://samaiyalattakaasam.blogspot.com/2012/01/blog-post.html

இராஜராஜேஸ்வரி said...

வெள்ளகார சின்ன பெண்குழந்தைகள் அங்கிருக்கும் ஆப்ரிக்கர்களின் ஹேர்ஸ்டைல்போல எங்களுக்கும் பின்னிவிடுங்கன்னு சொல்லி வரிசையா உக்காந்து குடி குட்டியாபின்னல் போட்டு மகிழ்ந்தார்கள்.


அழகான படங்கள் அருமையான படங்கள்.. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

சாந்தி மாரியப்பன் said...

ஃபெர்ரி பயணம் ஜூப்பரா இருந்துருக்குமே.. அலைகளில் ஆடி ஆடி பயணம் செய்வதும் தனி அனுபவம்தான் :-)

K.s.s.Rajh said...

சுவாரஸ்யம் குறையாத தொடர்

தமிழ் மணத்தில் இணைப்பதில் வரும் பிரச்சனை பற்றி நண்பர் சசி பாஸ அவர்கள் எழுதிய பதிவு ஒன்று இருக்கு நான் எடுத்து தருகின்றேன் மேடம்

ஸாதிகா said...

சுவாரஸ்யமாக உள்ளது.நீங்கள் எடுத்த புகைப்படங்கள் இல்லையா?

ADHI VENKAT said...

நல்ல பகிர்வும்மா.... படங்களும் அழகா இருக்கு....

கேரளா போயிருந்த போது அங்கு பூர்ணா நதியை கடக்க இது மாதிரி தான் மூன்று பெரிய படகுகளை இணைத்து அதன் மேல் ப்ளாட்ஃபார்ம் போட்டு ”ஜங்காரு” என்று அழைக்கப்படும் இதன் மேல் கார், டெம்போ, சைக்கிள் என்று எல்லாவற்றையும் ஏற்றி அக்கரையில் விட்டார்கள். நதியை கடக்க ஜங்காரை விட்டால் வேறு வழி இல்லை.

RAMA RAVI (RAMVI) said...

சுவாரசியமாக இருக்கு அம்மா.ரசித்து படித்து வருகிறேன்.தொடருங்கள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வும்மா..

கேரளா - காலடி அருகில் ஜங்கார் எனும் போட்டில் பயணித்தது நினைவுக்கு வந்தது...

நன்றாக இருக்கிறதும்மா....

குறையொன்றுமில்லை. said...

மஹி வருகைக்கு நன்ரி

குறையொன்றுமில்லை. said...

ஜலீலா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

இராஜராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

சாந்தி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராஜ் வருகைக்கு நன்ரி. சசியின் பதிவு எடுத்து தாங்க ராஜ்.

குறையொன்றுமில்லை. said...

கோவை2தில்லி வருகைக்கு நன்ரி.

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா வருகைக்கு நன்றீ

குறையொன்றுமில்லை. said...

ரமா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கு நன்றி. ஜங்கார் பற்றி இப்பதான் கேள்விப்படுரேன்.

K.s.s.Rajh said...

வணக்கம் மேடம் ப்ளாக்கர் தளம் சமீபத்தில் செய்ய சில மாற்றங்களினால் தான் தமிழ்மணத்தில் உங்கள் பதிவை இணைக்க முடியவில்லை என்று நினைக்கின்றேன் இதற்கான தீர்வை ப்ளாக்கர் நண்பன் தளத்தில் பதிவாக இருக்கின்றது அந்த லிங் உங்கள் பேஸ்புக் கிற்கு அனுப்பியிருக்கேன் பாருங்கள்.
(http://www.bloggernanban.com/2012/02/blog-post.html)

G.M Balasubramaniam said...

இந்தப் பயணக் கதையை முன்பு நான் , நீங்கள் எக்ஸிக்யூடிவ் க்லாஸில் பறந்தது வரை படித்திருந்தேன். இப்போது ஒரே மூச்சில் முழுவதையும் படித்தேன். பயண அனுபவங்கள் நிறையவே கற்றுக் கொடுக்கும். நீங்கள் எல்லாவற்றையும் மிக நுணுக்கமாக கவனித்துப் பதிவு செய்திருக்கிறீர்கள். எனக்கும் பயணிப்பது பிடிக்கும். அந்தந்த இடத்து சாதாரண மக்களிடம் பேச்சுக் கொடுத்து, விவரங்களைத் தெரிந்து கொள்வேன். இல்லையென்றால் சுற்றுலாப் பயணி மாதிரி அவர்கள் சொல்வது மட்டும்தான் தெரிய வரும். இந்தப் பயணம் எப்போது மேற்கொண்டீர்கள். அதை நீங்கள் எழுதி நான் கவனிக்க வில்லையா. மேலை நாடுகள், கீழை நாடுகள் பற்றிப்பயண விவரங்கள்தான் இதுவரை படித்திருக்கிறேன். இது ஒரு புது அனுபவம். வாழ்த்துக்கள்.

குறையொன்றுமில்லை. said...

நன்றி ராஜ் மறக்காம தகவல் சொன்னதுக்கு. நானும் ப்ளாக்கர் நண்பன் சசியின் வந்தேமாதரம் ப்ளாக் எல்லாம் ரெகுலராபோயி படிப்பேன் அவங்க சொல்லியிருந்தமாதிரியும் ட்ரை பண்ணினேன் ஒர்க் அவுட் ஆகல்லே.

குறையொன்றுமில்லை. said...

பாலசுப்ரமனியம் ஐயா வருகைக்கு நன றிநானும் அவங்ககூட கல்ந்து பேசி அவங்கபாஷை, பழக்கவழக்கம் எல்லாம் கேட்டு தெரிஞ்சுனடேன் பின்னாடி அதெல்லாம் வருது.

ஹேமா said...

லஷ்மிம்மா...இப்போதான் கடைசி 3 பகுதிகளையும் மூச்செடுக்காமல் வாசித்து முடித்தேன்.மிக அருமையாகச் சொல்கிறீர்கள் !

குறையொன்றுமில்லை. said...

ஹேமா வருகைக்கு நன்றி

Jaleela Kamal said...

அன்றூ பதிவு படிகக் நேரம் இல்லை
இன்று 3 பதிவு படிச்ச்சாசு
நல்ல ஞாபகம் வச்சுண்டு எழுதி இருக்கீங்க
அருமையாக இருக்கு

Jaleela Kamal said...

முன்பு சொந்தகாரர்கள் இங்கு வரும் போது இது போல் பீச், பார்க் என கூட்டி செல்வோம், காலையில் போனால் மாலை 6 மணிக்கு மனம் திரும்பி வர இல்லாமல் வருவோம் அந்த ஞ்பகம் எல்லாம் வந்துடுச்சி

குறையொன்றுமில்லை. said...

ஜலீலா வருகைக்கும் ரசனைக்கும் நன்றி

Geetha Sambasivam said...

ரொம்ப பெரிய போட், எல்லாரின் வண்டிகள், நடந்து வருபவர்கள் என்று தனித்தனி இடம் இருக்கு. எங்க காரு போட்டினுள் போச்சு. ஆள் சேரும்வரை காத்திருந்து கூட்டம் சேர்ந்ததும் போட் கிளப்பறா.வாகனங்களுக்கு மட்டும் காசு வசூல் பண்ரா. நடந்து வருகிரவர்களிடம் காசு வசூலிப்பதில்லை.அவ்வளவு வாகனக்கள் ஏற்றிப்போகும் அளவுக்கு ப்ரும்மாண்ட போட். அது அசைந்து, அசைந்து செல்வதே பாக்க நன்னா இருந்தது.அந்தப்பயணம் டிபரண்ட் எக்ஸ்பீரியன்சா இருந்தது.//

கோவாவிலும் இம்மாதிரிப் போகலாம். பெரிய ஸ்டீமர். லாரியையே ஏத்துவாங்க. நல்ல அனுபவங்கள். நன்றாக இருக்கிறது. மிச்சத்துக்கு அப்புறம் வரேன். :))))

குறையொன்றுமில்லை. said...

கோவாவில் பாக்கலியே போன வாரம்தானே போய்வந்தேன் பதிவும் போட்டேனே தமிழ் விருபி ப்ளாக்கில்

என்னை ஆதரிப்பவர்கள் . .