Pages

Friday, February 10, 2012

கிலிபி 12 ( ஆப்ரிக்கா)

 அடுத்த சண்டே எங்க போலாம்னு யோசிச்சு ஒரு சினிமா தியேட்டர்ல போயி படம் பார்த்துட்டு வெளில சாப்பிட்டு வரலாம்னு கிளம்பினோம். மால் போய்

                                   


                                          
  கொஞ்சம் பர்ச்சேசிங்க் முடித்து சினிமேக்ஸ் என்னும் த்யேட்டர் வளாகம் போனோம். மாடியில் ஹோட்டல் கீழே தியேட்டர். சண்டேமட்டும் லஞ்ச் உண்டாம் ஒரு ஹிந்தி படமும் போடுவார்களாம். முதலில் ஹோட்டல் போய் லஞ்ச் ஆர்டர் பண்ணினோம். பாத்ரூம் போய் கை கழுவ போனோம். ஒரு இடத்திலும் குழாயோ தண்ணீரோ இல்லாம எல்லாத்துக்குமே டிஷ்யூ பேப்பரை சுருட்டி சுரிட்டி வச்சிருக்கா. அதுமட்டும் நாட் ஓக்கே.தண்ணீரில் கை கழுவினாதானே நமக்கெல்லாம் திருப்தி முதலில் வெஜிடபுள் சூப் கொண்டு தந்தா. நான்லாம் சின்னவளா இருக்கும்போது எங்க கிராமத்ல எங்கம்மா

                                 

வெங்கலபானையில் சாதம் வடிப்பாங்க அப்ப வடி கஞ்சி எடுத்து அதி உப்பு மோர் போட்டு தருவாங்க. அதுபோல இந்தசூப் இருந்தது. கூடவே ரெண்டு பீஸ் கேரட், பீன்ஸ். பட்டாணி, குடைமிளகா சூப்பில் மிதந்து கொண்டிருந்தது அதுதான் வித்யாசம். அடுத்து   நான்,கார்ன்மசாலா, ஆலு மசாலா க்ரீன் சலாட்தயிர் ஜீரா ரைஸ் ஆர்டர் பண்ணினோம். முதலில் ஒரு குட்டி இரும்பு கரி அடுப்பு போல டேபிள் நடுவில் கொண்டு வந்தான், நடுவில் கரிக்கு பதிலா ஒரு கேண்டில் எடிந்து கொண்டிருந்தது.. அதன்மேல் சின்னதாகா குட்டி பித்தளை


                                

   
 செப்பு பாத்திரங்களில் நாங்க ஆர்டர் பண்ணின ஐட்டங்கள் ஒன்னொன்னா கொண்டுவைத்தார்கள் ஒன்னொன்னுக்கும் தனி தனி இரும்பு அடுப்பு . சாப்பிட பீங்கான் ப்ளேட் போர்க், ஸ்பூன் கத்தி எல்லாம் அழகா அடுக்கி வச்சா. அந்தகரி அடுப்பு பார்த்ததும் எனக்கு என் மலரும் நினைவுகள் எல்லாம் நினைவுக்கு வந்தது. 1960- ல் கல்யாணமாகி பூன வந்த சமயம் இதுபோல பெரிய இரும்புஅடுப்பு கரி போட்டு பத்தவச்சு சமையல் செய்யனும் 4 அடுப்பு இருக்கும் வெங்கல பானையில் சாதம் கொதிக்க ஒன்னு குழம்பு கொதிக்க ஒன்னு பொரியல் வதக்க ஒன்னு பத்தில்லாம பால் காய்ச்ச காபி போட ஒன்னுன்னு 4- அடுப்புகள் வீசிண்டே இருக்கனும் அதில் சமையலறை பூராவும் சாம்பல் பறக்கும்.  எங்க உக்காந்து என்னல்லாம் ஞாபகங்கள் வருது. மனசே ரிலாக்ஸ்.

                         
                                 
                               
                            
 சாப்பாடு நல்ல டேஸ்டாவே இருந்தது. ஸ்பூனால சாப்பிட்டதால கைகழுவ தண்ணி தேடவேண்டாம். கீழே தியேட்டர் போனோம். ரங்க்தே பசந்தின்னு ஒரு ஹிந்தி படம் போட்டிருந்தா. கௌண்டர் பக்கம் கூட்டமே இல்லே கம்ப்யூட்டரில் எவ்வளவு சீட் காலி இருகுன்னு காட்ரா உங்களுக்கு எந்த சீட் வேனுனு கேட்டு டிக்கட் தரா. உள்ளே 20, 30 -பேர்தான் இருந்தா. படம் நல்ல படம் தான் பாட்டுமட்டு டிஜிடல் சௌண்டில் அலருது பேசும்போது சௌண்டே இல்லே. சரியா ரசிக்க முடியல்லே. இந்தப்படத்தில் டயலாக் தான் மெயின். படம் முடிந்து வெளியே வந்து காபி. ஆப்ரிக்கா காபிக்கு ரொம்ப ஃபேமஸ் போல இருக்கு வித, விதமாக காபி பொடிகள் கிடைக்கிறது. சிக்கரி கலந்து சிக்கரி கலக்காமன்னு விதவிதமா கிடைக்கரது காபி பிரியர்களுக்கு கொண்டாட்டம்தான். வீடு வந்ததும் பக்கத்து வீட்டு சர்தார்ஜி வீட்டு பெண்குழந்தைக்கு 3- வதுபர்த்டே இருக்கு. பார்ட்டி வச்சிருக்கோம் வாங்கன்னு கூப்பிட்ட. ஃப்ரெஷ் பண்ணிண்டு அங்க போனோம் அவர்களுக்கு வீடு கொஞ்சம் சின்னதுதான். . மால்போயிருந்தப்போ அந்தக்குழந்தைக்கு ஒரு ஃப்ராக் வாங்கிவந்திருந்தோம்.அதை பிரசண்ட் பண்ணினோம். அக்கம் பக்கம் வீட்டுக்காரார்களுக்கு இதுபோல நண்பர்கள் வீடு போவது தான் ஒரே பொழுது


                                    


                                       
 போக்கு. தவராமல் எல்லாரும் கல்ந்துக்கறா. பாட்டு பேச்சு அரட்டை சிரிப்புன்னு அமர்க்களமான கொண்டாட்டம். அங்க இவா இருக்க்ம் கிலிபி ஏரியாவில் ஹோட்டல்லாம் கிடையாது எந்த ஃபங்க்‌ஷன் வீட்ல கொண்டாடினாலும் எல்லா ஐட்டங்களும் வீட்லயேதான் ரெடி பண்ணனும் பக்கத்து வீட்டு பெண்களும் ஒருவருக்கொருவர் போய் ஹெல்ப் பண்ணிக்கராங்க.அது நல்லா இருக்கு. 8- மணிக்கு கேக் வெட்டி டின்னர் சர்வ் பண்ணினா.கேரட் அல்வா, தால் மக்கானி, துதி கோப்தா, பன்னீர்க்ரேவி,ப்ரோட்டீன் பாஜி ஜீரா ரைஸ், பூல்கா பரோட்டா எண்ணை போட்டுதயிர் ஊறுகான்னு அமர்க்களமா ஏற்பாடு செய்திருந்தா. எல்லாரும் திருப்தியா சாப்பிட்டார்கள்.சங்கோஜமே படாமல் தேவையானதை கேட்டு வாங்கி சாப்பிடராங்க.அக்கம் பக்கம் இருப்பவர்களே கொஞ்சம் பேர்தான். அவர்களுக்குள் நல்ல ஒரு அண்டர் ஸ்டாண்டிங்க், ஃப்ரெண்ட்ஷிப் இருக்கு. அது பாக்கவே நல்லா இருக்கு. அது முடிந்து வீடு 10- மணி. இன்னிக்கும் காலேலேந்து அலைச்சல் நிறைய ஆச்சு.  நேரா பெட் ரூம்தான்.

 நன்றி- ( கூகுல் இமேஜ்)                                                                   (தொடரும்)

26 comments:

வெங்கட் நாகராஜ் said...

அட பரவாயில்லையே... கில்பி போய் ஹிந்தி படம் பார்க்க முடிந்ததே உங்களுக்கு....

பயண அனுபவம் சுகமாகப் போய்க்கொண்டு இருக்கிறது... ரசித்துத் தொடர்கிறேன்...

இராஜராஜேஸ்வரி said...

எங்க உக்காந்து என்னல்லாம் ஞாபகங்கள் வருது. மனசே ரிலாக்ஸ்.//

அருமையான அனுபவப் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்...

K.s.s.Rajh said...

தொடர்ந்து சுவாரஸ்யமாக செல்கின்றது தொடருங்கள்

ப்ளாகக்ர் தளம் அன்மையில் ஏற்படுத்திய மாற்றங்களால்.உங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை என்றால் அதற்காக தீர்வு. ப்ளாக்கர் நண்பன் எழுதிய பதிவின் லிங் உங்கள் பேஸ்புகிற்கு அனுப்பினேன் அதன் படி சரிசெய்யுங்கள்.

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

சூப்பராகப் போகுது பதிவு... எப்படி இப்படி மறக்காமல் எழுதுறீங்க என்றுதான் அதிசயிக்கிறேன், பழைய இரு பதிவுகளும் இன்னும் படிக்கவில்லை, நேரம் கிடைக்கும்போது படித்துவிடுகிறேன்.

ADHI VENKAT said...

பயணத் தொடர் சூப்பரா போகுதும்மா.....

கை அலம்பினாத் தான் எனக்கும் திருப்தியா இருக்கும்.....

ஆப்பிரிக்காவில் ஹிந்தி படம்.....சூப்பர்.

பால கணேஷ் said...

ரங் தே பஸந்தி ரசனைக்குரிய படம் தாம்மா. நீங்க பாத்த தியேட்டரால சரியா ரசிக்க முடியாம போச்சாக்கும்... ஐயய்யோ... கை கழுவ தண்ணி இல்லாம டிஷ்யூ பேப்பரா... ரொம்ப கஷ்டம்டா சாமி! கரி அடுப்பு பத்தி நீங்க சொல்லியிருந்தது என்னையு்ம் அந்த நாள்ல எங்கம்மா சமைச்ச பீரியடுக்கு கூட்டிட்டுப் போயிடுச்சு. கிலிபி- எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. அடுத்த பார்ட் எப்போ?

மனோ சாமிநாதன் said...

எந்த புதிய நிகழ்வுகளிலும் பழைய நினைவலைகளைத் தவிர்க்க முடிவதில்லை என்பதை ' வடி கஞ்சி' 'இரும்பு அடுப்பு' மூலம் அழகாகக் காண்பித்திருக்கிறீர்கள்!!

ஸாதிகா said...

அருமையான பகிர்வு!

Yaathoramani.blogspot.com said...

நான் தங்கள் பதிவுகளின் தீவீர ரசிகன்
என்வே எனக்கு கிடைத்த விருதினை
தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்
என்னுடைய பதிவினிற்கு விஜயம் செய்ய வேணுமாய்
அனபுடன் வேண்டுகிறேன்

குறையொன்றுமில்லை. said...

வெங்கட் வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

இராஜராஜேஸ்வரி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராஜ் வருகைக்கு நன்றி.ஃபேஸ்புக்ல பதில் சொல்லி இருக்கேன்

குறையொன்றுமில்லை. said...

அதிரா வருகைக்கு நன்ரி

குறையொன்றுமில்லை. said...

கோவை2தில்லி வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

கணேஷ் வருகைக்கும் ர்சனைக்கும் நன்றி. ஒரு நா விட்டு ஒரு பதிவு போடுரேனே.

குறையொன்றுமில்லை. said...

மனோ மேடம் வருகைக்கு நன்றி பழைய நினைவுகள் எங்கபோனாலும் துரத்திண்டேதான் இருக்கு.

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா வருகைக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ரமணி சார் வருகைக்கும் விருதுக்கும் நன்றி

இராஜராஜேஸ்வரி said...

விருது ஒன்று மகிழ்ச்சியுடன் மலர்ந்திருக்கிறது எமது பதிவில் தங்களுக்காக..

http://jaghamani.blogspot.in/2012/02/blog-post_11.html

Mahi said...

நல்ல பதிவும்மா..நீங்க ரங்க் தே பஸந்தி-னு சொன்னதும் ஒரு காமெடி நினைவு வருது. எங்க நண்பர் ஒருவர் அந்தப்படப்பேரை அப்புடியே தமிழ்ல "கலர் குடு வசந்தி"னு ட்ரான்ஸ்லேட் பண்ணுவார்! (கலர் = சோடா/கூல்டிரிங்க்ஸ்) :)))))))))))

தொடருங்க..

Jaleela Kamal said...

வாவ் லஷ்மி அக்கா அந்த குட்டி குட்டி வெங்கல பாத்திரம்

எங்க அம்மா சின்ன வயதில் விளையாடிய சொப்பு சாமான்கள்
எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு

உங்களுடம் பார்டியிலும் க்லந்து கொண்டேன்

குறையொன்றுமில்லை. said...

மஹி ரங்க்தே பசந்தி எப்படி ட்ரான்ஸ்லேட் ஆச்சோ அப்படியே ஒரு பழையதமிழ்ப்படமும் ஆச்சு தெரியுமோ படிக்காதமேதை படுக்காத மெத்தை ஆச்ச

குறையொன்றுமில்லை. said...

ஜலீலா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

மாதேவி said...

குட்டு பித்தளைப் பாத்திரம் இரும்பு அடுப்பு என பழையனவும் புதியனவும் நிறைந்து நிற்கின்றன.

Geetha Sambasivam said...

ரொம்ப நாட்கள் கழிச்சு இன்னிக்குத் தான் வர முடிஞ்சது. ஒழிஞ்சாப்போல் வரதாலே எல்லா கமென்ட்ஸும் படிக்கவும் முடியுது. கரி அடுப்பு இரண்டு வருஷம் முன்னாடி கூடச் சமைச்சேன் ஒரு மழைக்காலத்திலே. கரண்டும் இல்லாமல், காஸும் எரிக்க முடியாமல்!

இப்போவும் ஊர்ப்பக்கம் போனால் கோயில்லே விறகு அடுப்புத் தான்.

குறையொன்றுமில்லை. said...

கீதா சாம்பசிவம் லேட்டா வந்தாலும் மறக்காம வந்து பின்னூட்டமும் கொடுதுருக்கீங்களே அதுக்கு சந்தோஷமா இருக்கு நன்றி

என்னை ஆதரிப்பவர்கள் . .